நூலின் பெயர் : பாரதத்தின் ஒளிவிளக்கு அன்னை தெரசா
நூலின் ஆசிரியர் : பிரபு நாக்
“பிள்ளை பெற்ற வடு இல்லை உலகில் இவரை அன்னை என்று அழைக்காத உயிர் இல்லை”
“கன்னங்களில் சுருக்கங்களின் வடு வெண்ணிற ஆடையில் நீல நிற கோடு இந்தியா இல்லை இவர் தாய்நாடு கல்கத்தாவில் பதிந்தன இவரின் பாதச்சுவடு எப்போதும் ஜெபம் சொல்லும் உதடு இவர் இருப்பார் மிக எளிமையோடு எவரையும் பார்ப்பார் பணிவோடு ஏழை எளியோருக்கு ஏந்தினார் திருவோடு கென்னடி பார்த்தார் இவரை துணி துவைத்த கையோடு பிறர் பிணிக்கு நீண்டன கைகள் மருந்தோடு அருவருக்கத்தக்க உடலைத் தொட்டார் கருணையோடு தொழுநோயோடு இருப்பவரை காப்பார் கனிவோடு எச்சில் துப்பினாலும் அன்போடு உறவாடு என்ற கொள்கையோடு போராடினார் வாழ்நாள் முழுவதும் துணிவோடு தனக்கென இல்லை ஒரு வீடு கட்டினார் சாதி மதம் இல்லாத பல கூடு பிறர் நலனுக்காக இவர் பட்டபாடு இவரைப்போல் ஒர் அன்னை உண்டோ நீ தேடு இவர் உழைப்புக்கு பெற்றார் பல அவார்டு கிடைத்தன ஏசுவின் ஆசீர்வாதத்தோடு இவர் நினைவுகளை இந்த புத்தகம் வாசித்து அசைபோடு இவரின் இறப்புக்கு நீ கண்ணீர் விடு உன் வாழ்க்கை அமையும் சிறப்போடு “”
பிறப்பும் இளமையும்
அல்பேனியா நாட்டில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 26 ஆம் நாள் அன்னை தெரசா பிறந்தார் இவர் இயற்பெயர் ஆக்னஸ் கான்ஷா பெஜாட்டு. இளமை முதல் மக்கள் பணி தான் இனி என்றிருந்தார்.
துறவும் ஆசிரியர் பணியும்
1931 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் கிறிஸ்துவ மரபுப்படி பெண் துறவி ஆனார் தூய மேரி உயர்நிலைப்பள்ளியில் புவியியல் பாட ஆசிரியராக இருந்து பின் தலைமை ஆசிரியரானார்.
அறப்பணியில் அன்னை
1948 இல் தான் அன்னை அறப் பணி ஆற்ற அனுமதி கிடைத்தது.மருத்துவ பயிற்சி சில காலம் மேற்கொண்டார். அன்னை தனது அறப்பணி தொடங்கிய இடம் பஸ்தி என்பதாகும்.
இறப்போர் இல்லம்
ஏழைகளின் இறுதி நாட்களும் இறுதி யாத்திரை மிகவும் முக்கியம் என்ற கருத்து காரணமாக தோன்றியது.”நிர்மல் ஹ்ருத்ய் ” இதற்கும் என்னென்ன எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது என்பதை அறிந்தால் நம்மை அறியாமல் நமது கண்கள் குளமாகும்.
கென்னடி சந்திப்பு
அமெரிக்க குடியரசுத் தலைவரின் தம்பியுமான எட்வர்ட் கென்னடி இந்தியா வந்திருந்தார். அன்னை நோயாளிகளின் அழுக்கு துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். கென்னடி கைகளை கொடுக்க நீட்டினார்.ஆனால் அன்னையோ என் கைகள் அழுக்கான வை என்று கூறினார் புதுமை மிகுந்தது உங்கள் கைகள் புனிதம் நிறைந்தது என்று சொல்லி கைகளுக்கு முத்தமிட்டார் கென்னடி.
” நிர்மல் கென்னடி சிசுபவன்” நிறுவப்பட்டது.
அன்னையின் வாழ்வில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம்
அன்னை தன் கைகளை ஏந்தி நன்கொடை வேண்டினார் ஒரு கடைக்காரர் கோபமடைந்து எச்சிலை உமிழ்ந்தார் உடனே அன்னை புன்னகை பூத்து இது எனக்கு. என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார் அந்த கடைக்காரர் அன்னையின் பொறுமையை மனதில் ஏந்தி மன்னிப்பு கேட்டார்.
விருது
1953 ஆகஸ்டு 2 இறப்போர் இல்லம்
1951 தொழுநோய் மருத்துவமனை
1961 குழந்தை காப்பகம்
1963 சகோதரர் சபை
1962 பத்மஸ்ரீ விருது
1976 விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் தேசிகோத்தம்மா விருது
1978 தலைசிறந்த குடிமக்களுக்கான பிரிட்டன் விருது
1979
பால்கான் அனைத்துலக விருது
1979 நோபல் பரிசு
மரணம்
மரணம் கேட்டதுபோலும் அன்னையே என்னையும் தழுவிக்கொள்ளும் என்று 1997செப்டம்பர் 5 மரணம் தழுவிக் கொண்டார்.
” மரணம் அடைந்தார் அன்னை மரணமே வெறுக்கிறேன் உன்னை “
ச.பூங்குழலி
வடசேரி -614905
தஞ்சாவூர் மாவட்டம்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings