2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
என் முதல் இன்டர்வ்யூ புது ஸ்கூல்ல 3வது வகுப்பு சேரும் போது. சின்ன ஸ்கூல்தான் வீட்டுக்கு ரொம்ப பக்கம், அப்பா ஆபீஸ் போறதுக்கு முன்னால என்னோட வந்தார். அப்ப பயம்லாம். இல்லை. மேடம் கேக்கற கேள்விகளுக்கு பயப்படாம பதில் சொல்லுனு அப்பா என்னை உள்ளே கூட்டிண்டு போனார். .அப்பதான் லேசா பயம் வந்தது.
கால்கள் தடுமாற உள்ளே பம்மி பம்மி நுழைஞ்சேன் அந்த சின்ன ரூம்ல நடுநாயகமா மேஜை, அதுல ஆஜானுபாகுவா, வெள்ளை வெளேர்னு புடவைல வட்டக் கண்ணாடி மூக்கு நுனில தொங்க அந்த அம்மா உக்காந்திருந்தாங்க. அப்பா குட் மார்னிங் சொல்லிட்டு என்னை அவங்க முன்னால நிறுத்தினார். அவங்களும் அழகா புன்முறுவல் குட் மார்னிங் சொன்னார். என்னைப் பாத்து உன் பேர் என்னனு கேட்டார், கொஞ்சம் வாய் குளற சொன்னேன்.
“பயப்படாதே உனக்கு 3ம் வாய்ப்பாடு தெரியுமா?”
அம்மாதான் சொல்லிக் கொடுத்திருக்காளே இப்ப கொஞ்சம் தைரியமா “ம்“ னுதலையாட்டினேன்.
“சொல்லு பாப்போம்.”
“ஒரு மூணு, மூணுனு ஆரம்பிச்சு, பதினாறு மூணு நாப்பத்தெட்டு”னு மூச்சு விடாம ராகமா சொல்லி முடிச்சேன்
அவங்க வெரிகுட்னு என்னை பாத்து சொல்லிட்டு, அப்பாவை பாத்து பிரைட் சைல்ட், பேர் மத்த விவரம் கொடுத்துட்டு போங்க, இன்னில இருந்தே கிளாஸ்ல உக்காரட்டும்னார். அப்பாமுகம் பெருமைல பொங்கித்து.
என்னை உள்ளே இருந்த கிளாசுக்கு ஆயாம்மா கூட்டிட்டு போச்சு. அங்கே ஒரு 25 குழந்தைங்க கீழே நீளப் பலகைகள்ல ஸ்லேட் மடில வச்சிட்டு உக்காந்திருந்தாங்க. நான் திரும்ப மனசுல வந்த பயத்தோட நின்னேன். அங்க டேபிள், சேர் போட்டு உக்காந்திருந்த உயரமான, அழகான டீச்சர், ”வா உக்காரு புது ஸ்டூடன்டா, பேர் என்ன”
நான் என் காதுல கூட கேக்காத மாதிரி பேரை முனகிட்டே உக்கார இடம் கண்ணால் துளவினேன். அந்த பச்சைப் பாவாடை பெண் சற்றே நகந்து நகந்து கையால் பலகையை தட்டி காட்டினாள்.
நான் அவள் பக்கம் உக்காந்தேன். அந்த பெண், ”நானு பர்வதம், கிளாஸ் ஃபர்ஸ்ட்ன்னா” எனக்கு அதோட அர்த்தம் புரியலை.
அந்த உயர டீச்சர், அன்னிக்கு ஏதோ பாட்டு சொல்லிக் கொடுத்தாங்க. எனக்கு மனசு பூரா பயம், அப்பா வெளில நிக்கறாரானு அடிக்கடி எட்டிப் பாத்தேன். அந்த பர்வதம் பொண்ணுதான், ”பயப்படாதே நீ அந்த பச்சைக் கதவு வீட்டு பையன் தானே நான் உன்னை திரும்ப போறப்ப கூட்டிண்டு போறேன், கமலா டீச்சர் ஒண்ணும் பண்ண மாட்டாங்க, பயப்படாதே”ன்னா.
ஆனாலும் வயத்தை புரட்டற பயம் போகலை, அம்மாவை பாக்கணும் போல இருந்தது. புறங்கையால கண்ல வர கண்ணீரை துடைச்சிண்டு, அடிக்கடி மூக்கை உறிஞ்சிண்டு 2 மணி நேரத்தை போக்கினேன். அம்மா இடைவேளைல வந்தா தயிர்சாத டப்பாவை தூக்கிண்டு. அம்மாவை பாத்தவுடனே ஓடிப் போய் அவளை கட்டிப் பிடிச்சிண்டு ஓன்னு அழுதேன். பர்வதம் புன்முறுவலோட நின்னு வேடிக்கை பாத்தா, என் அம்மாகிட்ட தைரியமா சொல்றா, ”நான் பாத்துக்கறேன் மாமி சாயந்தரம் கிளாஸ் முடிஞ்ச உடனே என் கூடவே கூட்டிண்டு வரேன்” னு. அம்மா “சமத்துப் பொண்ணு உன் பேர் என்னடா செல்லம்”
“என் பேர் பர்வதம், அம்மா பாருனு கூப்பிடுவா, நான்தான் மூணாப்புலயே ஃபர்ஸ்ட் “
எனக்கு அம்மா சாதம் ஊட்டி விட்டா, பர்வதத்துக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டா, அது கூச்சம் இல்லாம வாயை திறந்து வாங்கிண்டது. ரெண்டே நாள்தான், பயம் போயிடுச்சு, பர்வதம், சாந்தா, மோகன், சங்கர் இவங்க தோழமையோடவும், கமலா டீச்சரின் செல்லப் பிள்ளையா அந்த ஸ்கூல்ல படிச்சேன்.
அடுத்து பயம் மனசில் வந்தது காவேரியை பாத்தப்பதான். கோயமுத்தூர்ல ஒரு டெக்ஸ்டைல் மில்லுல முதல்ல வேலைக்கு சேந்தேன். யார்னிங் செக்ஷன்ல சூப்பர்வைசர். கந்தசாமி ஃபோர்மேன் கொஞ்சம் கொஞ்சமா வேலை கத்துக் கொடுத்தார். வேகமா வேலை கத்துண்டேன், ஃபோர்மேன் என் மேல பிரியமா வேலை கத்துக் கொடுத்தார்.
மில் கேண்டீன் பரந்து விரிந்த ஹால் கிட்டத்தட்ட 30 நீள நீள மேஜைகள் 250 பேருக்கு மேல தாராளமா உக்காந்து சாப்பிடலாம். நான் ரெகுலரா 1 மணிக்கு போவேன் சாப்பிட, சட்னு சாப்பிட்டுட்டு, 2ம் நம்பர் கேட்டை ஒட்டி வெளில இருந்த டீக்கடையில் ஒரு சார்மினார் பத்த வச்சு பயந்து பயந்து புகை விடுவேன்.
அப்பா எங்கயாவது பாத்துடக் கூடாதுன்ற பயம் எப்பவும் இருக்கும். அவசர தம் அஞ்சாறு இழுத்துட்டு அசோகா பாக்குத்தூள் போட்டவுடன தான் அந்த பயம் போகும்.
அந்த சனிக்கிழமை லன்ச் முடிச்சிட்டு 2ம் நம்பர் கேட்டுக்கு போறப்ப பின்னால ஒரு கொஞ்சும் இனிய குரல். திரும்பினேன், “ பிளீஸ், நீங்க தம் அடிச்சிட்டு வரப்ப ஆரஞ்சு மிட்டாய் வாங்கிட்டு வர முடியுமா?” கையில் சில்லறையை திணித்தாள்.
ஒரு நிமிடம் விக்கித்துப் போனேன். பெண்கள்னாலே இந்த வயசுல ஒரு பயம் இருந்தது..
அதுவும் இவ்வளவு அழகான பெண் தானா வந்து உதவி கேட்டா உடம்பெல்லாம் ஒரு பதற்றம்.ஒரு கெஞ்சல் புன்னகை அவள் முகத்தை மேலும் அழகாக்கியது., “ நான் காவேரி, அட்மின் ஆபீஸ்ல டைபிஸ்ட், மூணாவது வரிசைல இருப்பேன் சீக்கிரம் வாங்க “ சொல்லிட்டு நடந்து போனாள் தன் இடம் நோக்கி.
தம் அடிக்கறதே அப்பாக்கு பயந்து பயந்து.இதுல பொண்ணுங்க கிட்ட சாவகாசம் வச்சிக்காதேனு ஆயிரம் எச்சரிக்கையோட அம்மா விபூதி வச்சு வேலைக்கு அனுப்பினது கண் முன்னால் வந்தது. சே இது ஜஸ்ட் ஹெல்ப்தானே ஒரு பொண்ணுக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்தா தப்பா என்ன அதுவும் அவ காசுல.
இன்னிக்கு அவசர தம்முக்கு அப்பறம் பொட்டிக்கடை ராஜு கிட்ட ஆரஞ்சு மிட்டாய் கேட்டேன்.ஏன் சார் அசோகா வேண்டாமா, புதுசா அஜந்தா வந்திருக்கு டிரை பண்றீங்களா? இல்லை காவேரி ஆரஞ்சுனு உளறினேன்.என்னை ஒரு மாதிரி பாத்துட்டே ஒரு நியூஸ் பேப்பர் துண்டுல நாலு மிட்டாய் சுத்திக் கொடுத்தான்.. ஒரு அசோகாவும்தான்.
திரும்ப ஆபீஸ் நோக்கி போனேன், அந்த காவேரி இருந்த இடம் பளிச்னு தெரிந்தது. தயக்க அடியெடுத்து அருகில் போனேன்..
“ஆமாம், பேரண்ட்ஸ் எனக்கு மேரேஜ் புரொபோசல்ஸ் பாக்கறாங்க”
“அப்படியா, கங்கிராசுலேஷன்ஸ், நல்ல பொண்ணா அமையட்டும், என்ன மாதிரி துடுக்கா இல்லாம”
“எனக்கு உன்னை மாதிரி துடுக்கு பெண்களைதான் பிடிக்கும்”
“ஐய்யோடா தைரியமா சொல்றீங்க, யாராவது மனசுல இருக்காங்களோ”
“ம், அப்படித்தான் வச்சிக்கோயேன்”
“அட சட்னு மேடம்ன்ற மரியாதை குறைஞ்சிடுச்சு, சரி அந்த பொண்ணுக்கு தெரியுமா உங்க மனசு”
“ம்ஹூம், சொல்லதான் பயமா இருக்கு”
“ஐய்யே ஆம்பளை பயப்படலாமா தைரியமா போய் சொல்லிடுங்க, நான் வேணா ஹெல்ப் பண்ணவா”
“ம் ம்ம் சரி ஐ லவ் யூ காவேரி மேடம்”
“அடடாடா மேடத்துகிட்டயேவா, டிரயலா, ரியலா?”
“விளையாடாதே காவேரி உன்னை பாத்ததுல இருந்து என்னவோ பண்ணுது, எஸ் சொல்வயா?”
“உங்களுக்கு இப்பதான் எனக்கு எப்பவோ மனசுல வந்துட்டீங்க, சரி மேனேஜர் கத்துவார் போறேன் அப்பறம் பாப்போம்”
இது என்ன மனசுக்குள்ளே, இப்படி ஒரு பட்டாம்பூச்சி, இது பயமா, சந்தோஷமா. வேலையே ஓடலை. அடுத்தடுத்த தினங்களில் அடிக்கடி திருட்டுத் தனமாய் சந்தித்தோம், பேசினோம்.
மாதங்கள் ஓடின எங்கள் ஸ்நேகமும் இறுகியது, ஆனால் மனசுக்குள் அந்த இ்னம் தெரியாத பயம்..
ஞாயித்துக்கிழமை காலைல அப்பா உன் கூட கொஞ்சம் பேசணும்னார். சொல்லுங்கப்பான்னு சொன்னாலும் சட்னு அந்த பயம்.
உன் மில்லுல வேலை பாக்கற ஒத்தர், உன்னை பிடிச்சிருக்கு எங்க பொண்ணை கொடுக்க இஷ்டப்படறோம்னார், 3 மணிக்கு தயாரா இரு அவங்க வீட்டுக்கு போறோம்னு சொல்லிட்டு போயிட்டார்.
இந்த விஷயம் காவேரிக்கு எப்படி சொல்றது. மில்லுல யாருக்கு என்னை பிடிச்சு பொண்ணு கொடுக்க தயாரானார், மனசு கதங் கதங்னு பயத்தால் துடித்தது.
3 மணி சகல ஏற்பாடுகளுடன் பக்கத்தில் நடை தூரத்தில் இருந்த ஜவகர் தெரு தான். காலிங் பெல் அடித்தவுடன் கதவை திறந்தது ஃபோர்மேன் கந்தசாமி.
வாங்க, வாங்கனு வரவேற்று உக்கார வைத்தார். ஐய்யோ இவர் பொண்ணா நான் எப்படி வேண்டாம்னு மறுக்கப் போறேன் கவலையும் பயமுமாக அவரை பார்த்தேன்.
சில பல சம்பிரதாய பேச்சுகளுக்கு பிறகு, கந்தசாமியோட மனைவி பொண்ணை கூட்டிட்டு வரேன்னு போனார், நான் குனிந்த தலை தூக்கலை.
என் அம்மா உனக்கு சமையல் வருமா, பாடத் தெரியுமா, என்ன படிச்சிருக்கே, வேலைக்கு போகற ஆசை இருக்கா இப்படி ஏதேதோ கேக்கறது எனக்கும் கேட்டது.
“நான் சுமாரா சமைப்பேன், பாட்டு வராது,பி.எஸ்சி படிச்சிருக்கேன், ஏற்கனவே வேலை பாக்கறேன் உங்க பிள்ளை வேலை பாக்கற அதே மில்லுல”
சட்டென தலை உயர்த்தி பாத்தேன், காவேரி குறும்பா என்னை பாத்து புன்முறுவல் பூத்தா.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings