2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
என்ன? போய் சேர்ந்துட்டாரா அப்பா..கைபேசியில் உறவினர் கேட்க இன்னும் உயிர் போகவில்லை இழுத்துக் கொண்டு தான் இருக்கிறது என்றான் மூத்தவன் முத்து.
நான்கு ஐந்து நாட்களாக உயிர் போகாமல் இருக்கிறது, ஏதாவது மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார். இதை பெரியவர்கள் யாரிடமாவது கேட்டுப் பாருப்பா, அவருக்கும் கஷ்டம், அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிற உங்களுக்கும் கஷ்டம் தானே என்றார் உறவினர்.
கண்ணும் திறக்கவே இல்லை, யூரின் போகவில்லை கூப்பிட்டால் மட்டும் தொண்டையில் இருந்து லைட்டா சத்தம் மட்டும் கேட்கிறது. பார்க்கவே கஷ்டமாகத்தான் இருக்கிறது, எப்படி எப்படியோ வாழ்ந்து அனைவருக்கும் நல்ல பெயர் எடுத்தவர் அப்பா என்றான் மகன் முத்து.
அண்ணே, அப்பாவோட சொந்த ஊரிலிருந்து ஒரு பாட்டி வந்து இருக்காங்க. உன்னை கூப்பிடுறாங்க என்று இணையவன் சுந்தர் சொல்லவே நான் அப்புறமாக உன்னிடம் பேசுகிறேன் என்று செல்போனை ஆப் செய்துவிட்டு தம்பி பின்னாடியே சென்றான்.
வயதான பாட்டி காதில் அழகான சிவப்பு கலரில் ஓலை போட்டுக் கொண்டு பின்பக்கம் கொசுவம் வைத்து சேலை, இரண்டு மூக்குத்தி, முடியை அள்ளி முடிந்து வந்து வந்தார்கள்.
பாட்டி, இவர்கள் தான் எங்க அண்ணன் பெயர் முத்து. ஏதோ சொல்ல வேண்டும் என்று சொன்னீர்கள், அதனால் தான் அண்ணனை அழைத்து வந்தேன் என்றான் சுந்தர்.
எனக்கு நேற்று தான் அப்பாவுக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று தகவல் கிடைத்தது. அதனால் தான் காலையிலேயே முதல் பஸ்ஸில் கிளம்பி வந்தேன் என்றாள் பாட்டி. நான் சொல்வதை கேட்டுக்கொள், கோபப்படக்கூடாது என்று பீடிகையுடன் தொடங்கினாள் பாட்டி.
உன்னுடைய அப்பாவுக்கு உயிர் போகாததற்கு காரணம் என்ன தெரியுமா, உங்கம்மா இரண்டாம் தாரம் தான் உங்க அப்பாவிற்கு. அது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.
ஒரு பிரச்சனையின் காரணமாக உங்க அப்பாவும் முதல் தாரமும் பிரிந்து விட்டார்கள். காலங்கள் கடந்த பிறகு உங்க அப்பா உங்க அம்மாவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார்கள். முதல் தாரத்திற்கு ஒரு பெண் இருக்கிறாள், அந்தக் குழந்தையின் பெயர் நிலவு. நிலவுக்கு சொந்தக்காரி போல் அவ்வளவு அழகாக இருப்பாள். அந்த குழந்தையைப் பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
அந்த குழந்தை மேல உங்க அப்பா மிகவும் பிரியமாக இருந்தவர். ஆரம்பத்தில் குழந்தையை மட்டும் வந்து பார்த்துக் கொண்டிருந்தவர், உங்க அம்மாவின் தொல்லை காரணமாக பிறகு குழந்தையை பார்க்க வருவது நின்று விட்டது. அந்த குழந்தைக்கு பேர குழந்தைகள் எல்லாம் இப்பொழுது இருக்கின்றார்கள்.
உங்க அப்பாவுக்கு மூத்த பெண் குழந்தை அல்லவா, அதனால் கொஞ்சம் பாசம் அதிகமாக தான் இருக்கும். உங்க அம்மாவுக்கு தெரியும், அந்த குழந்தை வந்து அப்பா என்று கூப்பிட்டால் கண்ணை மூடி விடுவார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள உங்க அம்மாவுடைய மனது மறுக்கின்றது.
உங்க அப்பாவின் மனசை நீயாவது புரிந்து கொள்ளடா. உங்க அக்காவை உறவினர் யாரையாவது ஒருவரை போய் அழைத்து வரச் சொல். உங்க அப்பாவை பார்த்துவிட்டு போகட்டும் என்று சொல்ல உடனே மூத்தவன் முத்து, அவசியம் நான் யாரையாவது ஒருவரை அனுப்பி அக்காவை அழைத்து வருகிறேன் பாட்டி என்றான்.
உங்க அப்பா மாதிரியே நீயும் சமத்துடா, என்று பாட்டி சொல்ல உடனே ஒருவரை அப்பாவின் சொந்த கிராமத்திற்கு அனுப்பினான் முத்து.
அன்று மாலையை மூத்தவள் நிலவு அப்பாவை பார்க்க வந்துவிட்டாள். நீண்ட வருடங்களுக்கு பிறகு அப்பாவை பார்த்ததும் கட்டி பிடித்து அப்பா என்னை ஒருமுறை கண் திறந்து பாருங்கள் நான் உங்களுடைய மூத்த பெண் நிலவு வந்திருக்கிறேன் என்று சொல்ல கண்ணை திறக்க முயற்சி செய்தார்.
நிலவின் கையை இறுகப் பிடித்துக் கொள்ள கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது. லேசாக கண்ணைத் திறந்தவர் நிலவின் முகத்தை பார்த்ததும் கன்னத்தைப் பிடித்து முத்தம் கொடுக்க தண்ணீர் வேண்டும் என அப்பா கேட்க இரண்டு சொட்டு துளசி தண்ணீர் ஊற்றினாள் நிலவு.
சொல்லி வைத்தது போல தண்ணீர் தொண்டையில் இறங்கியதும் அப்பாவின் மூச்சு அடங்கியது.
அப்பாவின் இறுதிக் காரியம் முடியும் வரை இருந்துவிட்டு இறுகிய மனதுடன் தன்னுடைய கிராமத்தை நோக்கி சென்றாள் நிலவு.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings