2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
குறுகிய சந்துகள் நிறைந்த அந்தத் தெருவில் நெருங்கிய வீடுகள் இருந்தாலும் தனித்து தெரிவது வசதியான “ராகவன்” வீடுதான். ராகவன்…. அவன் மனைவி “லதா” இருவர் மட்டுந்தான் இருக்கின்றனர் அந்த வீட்டில்.
அந்தத் தெருவில்….. கர்ப்பிணிகள் சிலர் இருந்தார்கள். மிகவும் சிரமத்துடன் அவர்கள் அங்குமிங்கும் நடப்பதை பலரும் பார்த்திருக்கிறார்கள். எவ்வித விளம்பரமும் இன்றியே யாருடைய வீட்டிலே ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்று அதன் அழும் குரலிலே தெரிந்து போனது….. அது ஏற்கனவே நான்கு பிள்ளைகளைப் பெற்ற மகராசி “அலமேலு” ஐந்தாவது ஒன்னை பெத்துருக்கா.
“ஒன்னு இருந்தா பாலும் நெய்யும் ஊட்டி வளத்தலாம் …அஞ்சு வச்சிட்டு என்ன பண்ணப்போற …பேசாம தத்து கொடுத்துடுடா ” முருகேசா ” என்று மருத்துவம் பாத்தா “ருக்மணி ” பாட்டி சொல்லிவிட்டுப் போனாள்…மூட்டை தூக்கும் முருகேசன் ஆண்டவன் கொடுத்ததுக்கு என்ன பண்ணுவான்?
அந்தத் தெருவில் குழந்தை அழும் சத்தம் கேட்கும்போதெல்லம் …ராகவன் வீட்டு மாடி ஜன்னல் திறக்கும் ….ரோசாப்பூ நிறத்தில் முகமொன்று வெளியே எட்டிப்பார்த்து விட்டு சட்டென்று மறைந்துவிடும் ….அது லதா தான்….இந்த நிகழ்வு அத்தெருவில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்ததே.
“நல்ல வசதியான மாப்பிள்ளை,சொத்து நிறைய இருக்கு, கூடப் பொறந்தவங்க யாருமில்ல, முக்கியமா மாமியார் நாத்தனார் இல்ல, இதவிட வேறென்ன வேணும்…. உங்க அம்மா இருந்திருந்தாகக்கூட இந்த மாதிரி ஒரு வரன் பாத்து கட்டி வச்சிருக்க மாட்டா” என்று லதாவின் விருப்பத்தைக் கேட்காமலேயே …லதாவை ராகவனுக்கு இரண்டாம் தாரமாக கட்டிவைத்து விட்டனர் அவரது உறவினர்கள். நடுத்தர வயதைத் தாண்டிய அவனுக்கு நடக்கவும் தெம்பில்லை .
திருமணமாகி வருடங்கள் வளர்ந்தும் ….லதா பச்சை பிடிப்பதாய்த் தெரியவில்லை …நாளும் வாடி வதங்கி உதிரும் சருகு போலானாள் .மருந்து ,மாத்திரைகள் ,கஷாயங்கள் ….மாற்றி மாற்றி சாப்பிட்டும் மாற்றம் ஒன்றுமில்லை…ராகவனும்…சக்திகள் அதிகரிக்க முந்திரி, பாதம் ,பிஸ்தா ,தேன் ….மருந்துகள் …எல்லாவற்றையும் சாப்பிட்டான் …,இருந்தும் ? முடிவு சுழி.
சில சமயத்தில் மதிய மயக்கத்தில் லதா …அழகான கனவுகளைக் காண்பதுண்டு…..தன்னருகில் பஞ்சு மெத்தையில் சிறு குழந்தை அன்றலர்ந்த மலர்போல் உறங்கிக்கொண்டிருக்கும்…..சிறிது நேரத்தில் விடாமல் அழத் தொடங்கும் ….அவள் அதை எடுத்து ….தன் மார்போடு அணைத்து தாலாட்டு பாடுவாள் ….அன்னையின் தாலாட்டு ” கேட்டு …அது ….”ம் …ம் ….ம் ….ம் ” என்று அமைதியாகும் …இந்த நிகழ்வும் அந்த வீட்டின் அருகில் இருப்பவர்களுக்கு வாடிக்கையும்…. வேடிக்கையும்.
இறுதியாக …ராகவனும் லதாவும் குழந்தை ஒன்றை தத்து எடுக்கலாம் என்று முடிவு செய்த நேரத்தில் ….”முருகேசன் தன் ஐந்தாவது குழந்தையைத் தத்துக் கொடுத்து திரும்பவும் வாங்கி வந்துட்டான் “என்ற செய்தி கேட்டதும் …..இவர்கள் ஆசையில் மண் விழுந்தது .
அதே தெருவில் செல்வந்தரான ஒருவரின் மனைவிக்கு வளைகாப்பு நடத்தினர் …..ராகவனும் லதாவும் அதற்கு போயிருந்தனர் ……வளையல் மாட்டும் வைபோகத்தில் ….லதா வளையலுடன் கர்ப்பினியை நெருங்க …அருகிலிருந்த …..கிழவி ஒருத்தி …”மலடி வளையல் போடலாமா ..? என்று கேட்டதோடு நில்லாமல் …இவளெல்லாம் யாரு இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு வர சொன்னது ?”என்று பற்றவைத்துவிட்டாள்.
கொதிக்கும் மனத்துடன் வீட்டிற்கு திரும்பிய லதா…மாடியின் ஜன்னலை சாத்தினாள் …..அருகிலிருக்கும் வீடுகளிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டும் ஜன்னல் திறக்கவில்லை …மதிய நேரத்தில் கேக்கும் “அன்னையின் தாலாட்டு “அன்றோடு நின்றது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings