Sample read from book 👇
“போய் அந்த தொட்டிலக் கட்டுன்னா எதுக்கு எல்லாரையும் மொறைச்சிப் பாத்துகிட்டே இருக்க. நீ எந்த ஜென்மத்தில என்ன பாவம் செஞ்சியோ, இந்த ஜென்மத்தில உன் வயிறு காய்ஞ்சி போய் கிடக்கு” பொறுமையிழந்தவளாய் கமலியை கத்தத் தொடங்கினாள் பரிமளம்.
பின், கமலியின் அம்மாவிடம் திரும்பி, “நல்லா கேட்டுக்கோங்க சம்மந்தியம்மா… இன்னும் ஒரு வருஷத்தில இவளுக்கு புள்ள பொறக்கலன்னா இவள தள்ளி வெச்சிட்டு நா எம்பையனுக்கு வேற பொண்ண பாத்து கட்டி வெச்சிருவேன். அப்றம் என்ன குத்தம் சொல்லக் கூடாது நீங்க” என்றாள்.
இதைக் கேட்ட சித்ரா, “ஐயோ என்ன சம்மந்தி.. அப்டிலாம் உங்க வாயால அபசகுனமா சொல்லாதீங்க. முன்னப்பின்ன ஆனாலும் கமலிக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும்” என்று கூறினாள்.
இதைக் கேட்ட கமலிக்கு இன்னும் கோபம் வந்தது. “எப்டியெப்டி.. இன்னும் ஒரு வருஷத்தில எனக்கு புள்ள பொறக்கலன்னா என்னத் தள்ளி வெச்சிட்டு உங்க புள்ளைக்கு வேற பொண்ண கட்டி வெப்பீங்களா? ஏன்… என் வாழ்க்கையில மண்ணள்ளி போட்டது பத்தாதா? இன்னும் எத்தன பொண்ணு வாழ்க்கையில மண்ணள்ளி போடுவாரு உங்க புள்ள” என்று கோபமாகக் கேட்டாள்.
“ஏய்.. என்னடீ வாய் நீளுது.. அம்மாவ எதிர்த்துப் பேசற அளவுக்கு நீ என்ன பெரியாளோ.. ஆமாடீ.. உன்ன தள்ளி வெச்சிட்டு வேற பொண்ண கட்டிப்பேன்டீ” என்று கமலியின் கணவன் அவளிடம் கோபமாகப் பேசினான்.
“ஐயோ என்ன மாப்ள, அவ தான் எதோ புள்ள பொறக்கலங்கற வேதனையில பேசறான்னா நீங்களும் ஏன் இப்டி பேசறீங்க?” என்று சித்ரா தன் மருமகனிடம் மன்றாடலுடன் கேட்க
“வேற எப்டி பேசறதாம்.. அம்மா அவ நல்லதுக்கு தான் சொல்றான்னு புரிஞ்சிக்காம, உங்க பொண்ணு இவ்ளோ திமிரா பேசக் கூடாது” என்றான்.
கமலிக்கு நொடியில் அவனுடைய திட்டம் முழுமையாக விளங்கிப் போயிற்று! ‘ஓஹோ! சார் என்ன கத்தற மாதிரி என் வாய அடைக்கிறாரா? பின்ன.. வேற என்ன பண்ணுவார் அவர்.. நா கோவப்பட்டு கத்தி உண்மையெல்லாம் சொல்லிட்டா.. இவரு குட்டு இல்ல வெளிப்பட்டுப் போகும். அதான் ஐயா ப்ளான் போட்டு நம்மள கத்தறார். கத்து.. கத்து.. நல்லா கத்து.. மவனே.. உனக்கு வெக்கிறேண்டா வேட்டு..’ என்று மனதில் கசந்து நினைத்துக் கொண்டு ஒரு முடிவுடன்…
முழுத்தொகுப்பும் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும் – https://amzn.to/47EURqm. FREE with Kindle Unlimited Subscription.
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் நடந்த ‘உலக சாதனை’ நிகழ்வில் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்பு, இப்போது Amazon மின் நூலாக.
காவேரியின் கைபேசி – https://amzn.to/47EURqm
2021ஆம் ஆண்டு சஹானா இணைய இதழ் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற கதைகளின் தொகுப்பு.





GIPHY App Key not set. Please check settings