in ,

தன் வினை தன்னைச் சுடும் (சிறுகதை) – அகிலா சிவராமன்

எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சித்ரா , சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தாள். ஆனால் ஒரு மாதத்திற்கு முன்னால் அவள் அந்த வேலையை விட வேண்டிய  நிர்ப்பந்தம் வந்தது.  ஒரு மாதத்திற்கு முன்னால் நடந்த அந்த சம்பவத்தை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.  

அவள் சென்னையில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருக்கிறாள். B.tech computer science முடித்துவிட்டு கடந்த ஒரு வருடமாகதான் பணியில் சேர்ந்தாள். அவளின் பெற்றோர்கள் தஞ்சாவூரில் இருக்கிறார்கள். இப்போது புதிய வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.  

சித்ரா எந்த கம்பெனியில் வேலை செய்தாளோ அந்த கம்பெனியில் ஆண்டுதோறும் ஒருமுறை மும்பை ஆபிஸில் ஒவ்வொரு டீமிற்கும் தனித்தனியாக மீட்டிங் நடப்பது வழக்கம்.

இந்தமுறை அந்த மீட்டிங்கிற்கு சித்ராவையும் அவள்  மேனேஜர் சிபாரிசு செய்திருந்தார். இவள் டீமில் கிட்டதட்ட 10 உறுப்பினர்கள் உள்ளனர். எல்லோரும் மும்பை இறங்கியவுடன் ஒரு ஹோட்டலில் ரூம் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. சித்ராவின் அறையில் அருணா என்கிற பெண்ணும் இருந்தாள். அவள் இவளை விட இரண்டு வருடம் சினீயர்.

சித்ரா உறங்கி விட்டாள். தீடிரென தூக்கம் கலையவே அவள் எழுந்தாள். பார்த்தால் பக்கத்தில் அருணா இல்லை.  Hallல் பார்த்தாள், இல்லை. பாத்ரூமில் பார்த்தாள், இல்லை, பால்கனி கதவை திறந்து பார்த்தாள். அங்கேயுமில்லை. வாசற்கதவை திறக்க முயன்றாள், முடியவில்லை, வெளிப்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. ஒன்றும் புரியாமல் வந்து படுத்து விட்டாள். உறக்கம் வரவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

சித்ரா துங்குவதுபோல் பாசாங்கு செய்தாள். அருணா கதவை திறந்து வெளியில் யாரிடமோ bye baby see you என்று கூறிவிட்டு கதவை சாற்றி வந்து படுத்தாள். சித்ராவும் எதுவும் கேட்காமல் உறங்கி விட்டாள். மறுநாள் காலை இருவரும் தயாராகி கொண்டிருந்தார்கள். சித்ரா மறைமுகமாக அருணாவிடம் நேற்று இரவு யாராவது வந்தார்களா? எனக்கு நீ யாரிடமோ பேசியது போல் இருந்தது என்று கூறினாள். அருணா இல்லையே என்று கூறி பேச்சை மழுப்பி விட்டாள்.  பிறகு இருவரும்  காரில் ஏறி அலுவலகத்திற்கு கிளம்பினார்கள்.

அருணாவிற்கு சந்தேகம் வந்து விட்டது சித்ராவின் மீது. அலுவலகம் வந்தவுடன் இவர்கள் எல்லோரையும் மீட்டிங் ஹாலில் உட்கார சொன்னார்கள். அருணாவோ எதுவும் சொல்லாமல்  மும்பை ஆபீஸின் GM  அறைக்குள்  சென்று,  அஜய்,  நேற்று என் மேல் சித்ராவிற்கு சந்தேகம் வந்து விட்டது,   எதாவது செய் அஜய்  என்று கூறி விட்டு  ஓசை படாமல் வந்து உட்கார்ந்து விட்டாள்.  

சித்ராவிற்கு குழப்பமாக இருந்தது,  இவள் எங்கே போய் வந்தாள் என்று. ஐந்து நிமிடம் கழித்து ஒரு பணியாளர் வந்து சித்ரா என்ற பெயர் கொண்டவர் யார் இங்கே என்று ஆங்கிலத்தில் கேட்டார். சித்ரா நான் தான் என்று கையை உயர்த்தினாள், அவர் உங்களை அஜய் சார் கூப்பிடுகிறார் என்று கூறி அழைத்து சென்றார். சித்ரா, அஜயின் ரூமிற்குள் நுழைந்தாள்.

அஜய் இவளை உட்காரச் சொல்லி விட்டு தமிழிலேயே பேச ஆரம்பித்தான். அஜய் சென்னையை சேர்ந்தவன் தான். அவன் சித்ராவிடம் அருணா உன்னை பற்றி எல்லாவற்றையும் கூறி விட்டாள், நேற்று யாரோ உன்னை பார்க்க ரூமிற்கு வந்தார்கள் என்று. உன்னை போல் ஒரு தரம் கெட்ட பெண் இந்த ஆபீஸில் இருந்தால் அது அவமானம். ஆகவே நீ இப்போதே உன் நடையை கட்டலாம்.  

சித்ரா இரண்டு நிமிடத்திற்கு உறைந்து போய் விட்டாள், அஜயிடம் கூறினாள், Sir, அருணா பொய் சொல்கிறாள், அவள்தான் யார் கூடவோ கிட்டதட்ட ஒரு மணி நேரமாக சென்றாள் என்று.

அவ்வளவு தான், அஐய்க்கு கோபம் பொத்தி கொண்டு வந்தது. அருணா 3 வருடமாக இந்த கம்பெனியில் இருக்கிறாள்,  3 வருடமாக மும்பை வருகிறாள், அவளை பற்றி நீ தவறாக பேசுகிறாயா??? நாளையே உனக்கு termination letter ஐ சென்னை அதிகாரிகளிடம் சொல்லி அனுப்புகிறேன் என்று சொன்னான்.

சித்ரா மௌனமாக அங்கிருந்து கிளம்பி வெளியே வந்தாள். ஒரு ஆட்டோவை பிடித்து ஹோட்டலுக்கு சென்று தன் சாமான்களை எடுத்து கொண்டு வெளியே வந்தாள். அவளின் சித்தியின் மகள் மும்பையில் தான் இருக்கிறாள். அவளுக்கு call செய்து விவரத்தை கூறினாள். அவளின் வருகைக்காக ஹோட்டலுக்கு வெளியே நின்றிருந்தாள்.

இங்கே ஆபீஸில் டீம் மேனேஜர் சித்ரா எங்கே என்று எல்லோரையும் கேட்டார். அருணா உட்பட அனைவரும் தெரியாது என்று கூறி விட்டனர். சித்ரா தன் தங்கையுடன் அவள் வீட்டிற்கு சென்றாள்.

பிறகு அவள் யோசித்தாள், நாளை அஜய் என்னைப் பற்றி தவறாக சொல்வதற்குள் நாமே முதலில் ராஜினாமா கடிதத்தை அனுப்பினால் என்ன என்று? தங்கையிடம் கேட்டாள், அவளும் அது தான் நல்லது என்று சொன்னாள். உடனடியாக laptopஐ திறந்து  கடிதத்தை அனுப்பி விட்டாள். மீட்டிங் முடிந்த பிறகு மேனேஜர் mail ஐ பார்த்து அதிர்ச்சி அடைந்தார்..

சித்ராவும் அவளது தங்கையும் அன்று இரவு உணவிற்காக ஒரு ஹோட்டலுக்கு வந்தார்கள். சாப்பிட்டு கொண்டிருக்கும்போது தற்செயலாக சித்ரா பின் பக்கமாக திரும்பினாள், ஆச்சரியம்!!!! அஜயும் அருணாவும் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு சிரித்து கொண்டு  இருந்தார்கள். இப்போது தான் சித்ராவிற்கு எல்லா உண்மையும் புரிந்தது.

அவர்களுக்கு தெரியாமல் அந்த காட்சியை  இரண்டு மூன்று புகைப்படத்தில் எடுத்து கொண்டாள். மறுநாள் flight பிடித்து கொண்டு சென்னை வந்து விட்டாள்.

அருணாவிற்கு call செய்து, “மேடம், உங்களோட அருமை காதலனிடம் சொல்லுங்கள், நான் நேற்றே தானாகவே வேலையை ராஜினாமா செய்து விட்டேன், பாவம் அவரை கஷ்டப்பட வேண்டாம்” என்று கூறினாள்.  

அருணா அதற்கு, what nonsense you are talking, shut up your mouth என்று ஜோராக கத்தி call ஐ cut செய்து விட்டாள். பிறகு மேனேஜரிடம்,  சில சொந்த விஷயங்களின்  காரணமாக ராஜினாமா செய்தேன் என்று கூறி விட்டாள்.

சித்ரா நடந்த சம்பவத்தை இப்படித்தான் தினமும் யோசித்து பார்த்து கொண்டிருப்பாள். அவளுக்கு இப்போதும் புரியவில்லை அவர்கள் இருவரும்  இவளை ஏன் பலிகடாவாக ஆக்கினார்கள் என்று.  

ஒரு வாரம் கழித்து தீடிரென அருணாவிடம் இருந்து call வந்தது. இவள் எடுக்கவில்லை. நான்கு ஐந்து முறை வந்து கொண்டே இருந்தது. கடைசியாக வேறு வழியில்லாமல் தூக்கினாள்.

அருணா அழுது கொண்டே, சித்ரா, Please எனக்கு உன்னோடு சிறிது நேரம்   பேச வேண்டும், எனக்கு மூன்று நாட்களாக கடும் காய்ச்சல், தயவு செய்து‌ என் வீட்டிற்கு வருகிறாயா? என்று.

சித்ரா இப்போது என்ன திட்டம் வைத்திருக்கிறாய், போதும் தாயே, உன்னால் என் வேலை போய் விட்டது, ஆளை விடு என்று சொன்னாள். ஆனால் அருணாவோ மிகவும் கெஞ்சி கதறினாள். ஆகவே சித்ரா அவள் வீட்டிற்கு கிளம்பினாள்.

அருணா நிற்க கூட முடியாத நிலையில் வந்து கதவை திறந்தாள். மெலிந்து போய் அழுத முகத்தோடு இருந்தாள்.  அருணாவை அந்த கோலத்தில் பார்த்தவுடன் சித்ராவால் தாங்க முடியவில்லை.

ஏய், அருணா, என்னடி ஆயிற்று, சொல்லுடி,  என்று அவளை அணைத்துக் கொண்டாள். இத்தனை நேரமாக அடக்கி வைத்திருந்த சோகத்தை கட கட வென கண்ணீர் மல்க கொட்டினாள் அருணா. 

அஜயும் அருணாவும் இரண்டு வருடமாக தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அஜய் சென்னை வரும் போதெல்லாம் அருணாவை அழைப்பது வழக்கம். இவளும் அவன் கூப்பிடும் போதெல்லாம் போயிருக்கிறாள், அவன் உனக்கு இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று ஆசை வார்த்தைகளால் மயக்கி நன்றாக அவளை உபயோகபடுத்தி இருக்கிறான். ஆனால்  இவள் அப்போதும் அவன் மேல் சந்தேகமில்லாமல் அலட்சியமாக இருந்து விட்டாள். இப்போது நிலைமை வேறு மாதிரி ஆகி விட்டது. ஆம்!!!!! கர்ப்பமடைந்து விட்டாள்.

அவனுக்கு பலமுறை  call செய்து ஒரு வழியாக அவன் எடுத்திருக்கிறான், விஷயத்தை கூறியவுடன், என்னது நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணமா? ஹலோ,  அப்படி பார்த்தால் நான் இதுவரை 10 பெண்களுக்கு தாலி கட்டி இருந்திருக்க வேண்டும், நீ பதினொன்றாவது, பேசாமல் கலைத்து விட்டு வேற வேலையை பார், யார்கிட்டயாவது நீ இதை எல்லாம் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று கூறி இருக்கிறான்.

அருணா, சித்ராவிடம் நான் இப்போது என்ன செய்வேன், ஒன்றுமே புரியவில்லை என்று கதறினாள். சித்ரா அவள் கண்ணீரை துடைத்துவிட்டு கவலைப்படாதே நான் எல்லாவற்றையும் சரி செய்கிறேன் என்று கூறினாள். பிறகு அவளை கூட்டி கொண்டு மருந்துகளை வாங்கி கொண்டு தன் வீட்டிற்கு அவளை அழைத்து வந்தாள். அவளுக்கு ஆகாரத்தை கொடுத்து விட்டு, நான் இதோ ஒரு மணி நேரத்தில் திரும்பி வருகிறேன் என்று கூறிவிட்டு நேராக பழைய ஆபீஸிற்கு சென்றாள்.

GM மற்றும் team leaderஐ  பார்த்து எல்லாவற்றையும் கூறி அவளிடமிருந்த அந்த புகைபடத்தையும் அவர்களுக்கு அனுப்பினாள். விஷயத்தை கூறி விட்டு சித்ரா வீட்டிற்கு வந்து விட்டாள். அருணாவிடம் எதையும் கூறவில்லை.

சென்னை GM கம்பெனி MDகு எல்லாவற்றையும் கூறினார். MD  தகுந்த ஆதாரத்துடன் மும்பை காவல்துறையின் உதவியை நாடினார். அப்போது தான் உண்மை புரிய வந்தது. இதுவரை நிறைய பெண்கள் அவன் மீது குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார்கள். அவனும் தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அந்த பெண்கள் கூறுவதெல்லாம் பொய் என்று கூறி escape ஆகி இருக்கிறான். ஆனால் இந்த தரவை தகுந்த ஆதாரம் இருந்த காரணத்தினால் போலீசார் அவனை கைது செய்தார்கள். அவனை கைது செய்த பிறகு,  எல்லாம் முடிந்த பிறகு  GM  சித்ராவிற்கு call செய்து எல்லாவற்றையும் கூறினார்.

சித்ரா அருணாவிடமும் கூறினாள், அருணா சித்ராவின் கைகளை பிடித்து கொண்டு என்னை மன்னித்து விடு என்று கூறினாள். சித்ராவோ பதிலுக்கு, பரவாயில்லை, ஆனால் தயவு செய்து இனிமேல் இதைப் போன்ற தவறை செய்யாதே என்று கூறினாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கர்ப்பத்தை கலைத்தாள்.

இதற்கிடையில் அருணாவின் பெற்றோர்களும் வந்து விட்டனர். பிறகு அருணா அவர்களோடு  ஊருக்கு போய் விட்டாள். மறுநாள் mailல் GM சித்ராவிற்கு appointment order அனுப்பி இருக்கிறார் அதுவும் பதவி மற்றும் சம்பள உயர்வோடு.. அவளுக்கு பரம சந்தோஷம்.

சித்ரா உடனே GM கு call செய்து சார்,  I am so happy, but இந்த பதவி உயர்விற்கான தகுதி என்னிடம் இல்லையே சார் என்று கூறினாள். அதற்கு GM, அடுத்தவர்கள் உனக்கு தீங்கு நினைத்த போதிலும் நீ அவர்களுக்கு நல்லது செய்கிறாயே, இந்த தகுதி எனக்கு போதும், best of luck என்று சொல்லி வைத்து விட்டார்.  சித்ரா வேலையிலும் join செய்து விட்டாள்.

அருணா தன் தீய வினைக்கு ஏற்றவாறு தண்டிக்க பட்டாள். சித்ராவோ நல்லதையே செய்தாள், அவளுக்கு நல்லது நடந்தது. நாம் செய்யும் வினைக்கு ஏற்றவாறு தான் நமக்கு பலன் கிடைக்கும்!!!!

எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பாரதி கண்ட புதுமைப் பெண்கள் (கட்டுரை) – அகிலா சிவராமன்

    பெண்களுக்கேற்ற உயர்கல்வி (கட்டுரை) – அகிலா சிவராமன்