in ,

நெத்தி அடி!!! (ஒரு பக்க கதை) – அகிலா சிவராமன்

எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அன்று மாலில் மிகவும் கூட்டமாக இருந்தது. முகூர்த்த நாட்கள் என்பதனால் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. தீபாவிற்கு நிமிர்வதற்கு கூட நேரம் இல்லாமல் இருந்தது பில்களை போட்டுக் கொண்டே இருந்தாள்.

திடீரென ஒரு குரல் வந்தது, மேடம்!! ப்ளீஸ், இத முதல்ல போடுங்க என்று.  

அந்த குரலை ஏற்கனவே கேட்ட குரலாக இருக்கவே தலை நிமிர்ந்து பார்த்தாள் தீபா. பாரத்தால் அவள் முன்னால் கையை நீட்டி கொண்டிருப்பவன் மகேஷ். 

ஏய், மகேஷ்!! எப்படி இருக்கிற?? எப்ப ஃபாரினிலிருந்து வந்த என்று கேட்டாள்.

அதற்கு அவன், இங்க பாரு தீபா, நீயும் நானும் ஒன்னா ஸீகூலில் படித்திருக்கலாம், நண்பர்களாக இருந்திருக்கலாம், but இப்ப சிங்கப்பூரில் ஒரு கம்பெனியில் நான் vice president ஆக இருக்கிறேன், என் status வேற, உன் லெவல் வேற, so உன்னோட வேலை எதுவோ i mean பில்லை மட்டும் போடு, எல்லார் முன்னாலேயும் என்னை பெயர் சொல்லி கூப்பிட்டு பேசாதே, யாராவது எனக்கு தெரிந்தவர்கள் இதை பார்த்தால் என் இமேஜ் கெட்டு விடும் என்றான்.

உடனே அவளும், ஓகே சார், நீங்க தயவு செய்து பக்கத்து கவுன்டரில் இருப்பவரிடம் பில்லை போட்டுக் கொள்ளுங்கள்,  பீஸ் கட்டுவதற்கு கூட வழி இல்லாமல் உங்க குடும்பம் தவித்த போது என்னோட அப்பா தான் உங்களுக்கு பீஸ் கட்டி படிக்க வைத்தார். அந்த நன்றியை மறந்து விட்டு இமேஜை பற்றி பேசுகின்ற உங்களை போன்ற ஆட்களுக்கு நான் பில் போட்டால் அதை விட கேவலம் வேறு எதுவுமில்லை, இன்னொரு விஷயம் சார், next time இந்த  மாலுக்கு வராதீங்க, because இது என் அப்பாவோட own mall, so இங்க நீங்க பர்செஸ் பண்ணி அதை நாலு பேர் பார்த்தால், பாவம் உங்க இமேஜ் கெட்டு போய் விடும், so, please இடத்தை காலி பண்ணுங்க என்று நெத்தி அடி அடித்தாள்…

எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பணப்பேய் பிடித்த மருமகள் (சிறுகதை) – அகிலா சிவராமன்

    குழந்தைகளுக்கேற்ற வெற்றிலை கசாயம் – அகிலா சிவராமன்