in ,

பெண்களுக்கேற்ற உயர்கல்வி (கட்டுரை) – அகிலா சிவராமன்

Oplus_131072

பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு பெண்களுக்கு ஏற்ற குறைந்த செலவில் பயிலக் கூடிய படிப்புகளை பற்றி பார்க்கலாமா…..

இன்றைய கால கட்டத்தில் மேல்படிப்பு என்பது பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாகி விட்டது. ப்ளஸ்டூவிற்கு பிறகு எங்கே சேரலாம் என்ன படிக்கலாம் என்ற சர்ச்சை ஒரு பக்கமிருக்க இன்னொரு பக்கம் பணப் பிரச்சினை. எல்லோராலும் தன் குழந்தைகளை  engineering doctor படிப்பை படிக்க வைக்க இயலாது. அத்தகைய பெற்றோர்களுக்கு ஏற்ற சில படிப்புகள்  அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஏற்றவாறு இருக்கின்றன. இத்தகைய படிப்பில் செலவும் அதிகமாகாது மேலும் இத்தகைய படிப்பால் சுயமாகவும் தொழிலை தொடங்கலாம். பார்க்கலாமா அவைகள் என்னென்ன என்று…..

1.Diploma in catering and hotel management:

இந்த துறையின் மூலமாக catering சம்பந்தபட்ட தொழில் நுணுக்கங்களையும் சமையல் கலையையும் கற்று கொள்ளலாம். மேலும் ஒரு ஓட்டலை நிர்வாகம் செய்ய தேவையான நுட்பங்களையும் கற்று கொள்ளலாம். படிப்பு முடிந்த பின் எதாவது ஒரு ஓட்டலில் ஒரு மதிக்க தக்க பணியில் சேரலாம் அல்லது கடன் வாங்கி சொந்தமாகவே முதலில் ஒரு சிறிய ஓட்டலை ஆரம்பித்து பிறகு படிப்படியாக உயர்த்தி கொள்ளலாம்.

2.Diploma in  beauty parlour course:

இது ஒரு அருமையான மற்றும் உபயோகமான course ஆகும்.‌இந்த course-இல் சிகை அலங்காரம், முக அலங்காரம், மெஹந்தி இடுதல் போன்ற கலைகளை கற்று கொள்ளலாம். பிறகு ஒரு பார்லரில் உதவியாளாராக பணி புரியலாம். நன்றாக கற்று கொண்ட பின்  நான்கைந்து தோழிகளோடு இணைந்து முதலீடு செய்தால் சொந்தமாகவே பார்லரை தொடங்கி விடலாம். இல்லை என்றால் நான்கைந்து பேர் கூட்டாக இணைந்து திருமணம், ரிசப்ஷன், போன்றவற்றிற்கு முழு contract எடுத்து செய்யலாம்.

3.Diploma in tailoring:

இந்த துறையில் அற்புதமான மற்றும் என்றென்றும் அழியாத மாறாத தையல் கலையை  காலத்திற்கேற்ற நவீன முறைகளோடு கற்று கொள்ளலாம். நிறைய exports கம்பெனிகள் இருக்கின்றன. வேலைக்கு பஞ்சமில்லை. சுயமாகவும் ஒரு கடையை திறக்கலாம். மிகவும் உபயோகமான course இது.

4.Diploma in event management:

இந்த course -இல் ஒரு event க்குத் தேவைப்படும் அத்தனை தொழில் நுட்பங்களை கற்று கொள்ளலாம். இப்போதெல்லாம் கல்யாணத்திற்கு ஒரு event companyல் தான் முழுவதுமாக கொடுத்து விடுகிறார்கள். பங்க்ஷன் தொடங்கி முழுவதுமாக முடிந்து சத்திரத்தை காலி செய்யும் வரை இவர்களின் பொறுப்பாகும். ஆகவே எளிதில் வேலை கிடைத்து விடும். பெரிய பெரிய அலுவலகத்தில் கூட event management க்கு தனிப்பட்ட department இருக்கிறது.

5.Diploma in airport ground staff:

இந்த துறையில் airport -இல் customer service agent, baggage handler, ramp agent, passenger service, ticketing staff, ground hostess போன்ற பணிகளை புரிவதற்கான பயிற்சிகள் அளிக்கப் படும். வேலை வாய்ப்பும் அதிகம். ஏனென்றால் விமான சேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் போகுமே தவிர குறையாது.

6.Pharmaceutical course:

இந்த course – ஐ படித்து விட்டு ஒரு licence வாங்கி விட்டால் போதும். ஒரு சிறிய கடையை வாடகைக்கு எடுத்து கொண்டு அரசாங்கத்தில் apply செய்தால் அவர்களே கடனுதவி செய்து generic medicine கடை வைக்க உதவி புரிவார்கள். அப்படி இல்லை என்றாலும் ஆஸ்பத்திரிக்கு பஞ்சமில்லை. எங்கு வேண்டுமானாலும் வேலை கிடைத்து விடும். இல்லை என்றாலும் சுயமாகவே கடன் வாங்கி ஒரு பார்மஸியை துவங்கலாம்.

7.Paramedical courses:   

Mbbs படிக்க இயலாதவர்கள் இந்த paramedical course – இல் சேர்ந்து Lab technician, radiology dept, nursing, ophthalmology course, dietician, physiotherapy போன்ற துறைகளில் எதாவது ஒன்றை எடுத்து படிக்கலாம். இந்த course -ஐ படித்த‌ பெண்களுக்கு எளிதில் எதாவது ஒரு மருத்துவமனையில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன.  

ஆகவே பெற்றோர்களே மேல்படிப்பை பற்றி  கவலைப்படாமல்  பெண் குழந்தைகளுக்கான பிரத்யேகமான மேற்கூறிய  படிப்புகளை படிக்க வையுங்கள். இத்தகைய படிப்புகளுக்கு செலவும் குறைவாக இருக்கும்.  வேலையும் எளிதில் கிடைக்கும். சுயமாகவும் தொழிலை தொடங்கலாம்.  அது மட்டுமில்லாமல் இத்தகைய படிப்புகள் காலத்திற்கும் அழியாமல் இருக்கும். நாளுக்கு நாள் இந்த துறைகளில் வேலை வாய்ப்பு அதிகமாகலாம். ஆகவே நிச்சயமாக அவர்களுக்கு வேலைக்கான திண்டாட்டம் இருக்காது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு, ஆகவே உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு உகந்த கல்வியை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தக்க ஆறுதலையும், உதவியையும் மற்றும் அரவணைப்பையும் தருவீர்களாக!! உங்களுடைய மகளின் எதிர்காலம் உங்கள் கையில் தான் இருக்கிறது!!!!

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தன் வினை தன்னைச் சுடும் (சிறுகதை) – அகிலா சிவராமன்

    என் கருப்பு நிலா (சிறுகதை) – அகிலா சிவராமன்