1) டாக்டர், என் மனைவி முழுகாம இருக்க என்ன பண்ணனும்???
வெரி சிம்பிள் ஸ்விம்மிங் கத்துக்க சொல்லுங்க..
என்னது, ஸ்விம்மிங்கா ????
2) டாக்டர், எனக்கு எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது…
அப்ப முதல்ல ரிசப்ஷன்ல போயி 2000 ரூபாய் பீஸ் கட்டிட்டு வாங்க….
எதுக்கு டாக்டர் ????
ஆமா, உங்களுக்கு எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது இல்லையா… ஒரு டாக்டர் பீஸ் ஆயிரம், அப்போ ரெண்டு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா, ரெண்டு டாக்டர் செக் பண்றதுக்கு…
??????
3) ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை பண்ணனம்னு சொல்லுவாங்கடா..
நான் ஒரே ஒரு பொய் தான் சொன்னேன்டா, என் கல்யாணமே நின்று போயிடுத்துடா..
டேய் அப்படி என்னடா சொன்ன… கல்யாணம் நிக்கிற மாதிரி??
பாடுவீங்களா, பாட்டு வருமான்னு கேட்டாங்க??
நான் அதுக்கு, சூப்பரா பாடுவேன்.. அப்படியே தேன் மாதிரி இனிக்கும் என் குரல் இருக்கும்ன்னு சொன்னேன்டா..
அப்புறம்😄😄😄
வேற என்ன, கல்யாணத்திற்கு முதல் நாள் கச்சேரியில் என்னை பாட சொன்னங்க..
😄😄😄என்ன செருப்படியா??
இல்லைடா, பொண்ணோட அண்ணன் மாருங்க என்னை தூக்கி கொண்டு போய் சத்திரத்தின் வாசலில் உக்கார வெச்சு, கையில் ஒரு அலுமினி தட்டையும் கொடுத்து நீ பாடற பாட்டுக்கு இது தான் சரி, உனக்கு எங்க தங்கச்சி கேக்குதான்னு பிச்சை எடுக்க வெச்சுடாங்கடா…
தேவையா உனக்கு 😄😄😄
4) டேய்,நேத்திக்கு நான் பொண்ணு பாக்க போனேன் டா..
பாத்தியா?? பிடிச்சிருக்கா??
ஆங்..ஆங்..
அப்ப மச்சான் எப்படா கல்யாணம்??
டேய், நான் பார்க்க போனது எனக்கில்லைடா..
பின்ன யாருக்கு??
என்னோட ஜான் குட்டிக்கு டா??
புரியல டா?? சரியா சொல்லு..
டேய், என்னோட பெட் இருக்கே, ஜான், நாய் குட்டி, பாவம் டா, அதுக்கு தனியா ரொம்ப போரா இருக்கு, அதான் அதுக்கு துணைக்கு ஒரு ஃபிமேல் நாயை பார்க்க போயிருந்தேன்..
என்னது, நாய்க்கு பொண்ணு பார்க்க போயிருந்தியா ?????
5) தமிழ் டீச்சர்: பால் (gender) எத்தனை வகைப்படும்?? அவை யாவை??
மாணவன்: டீச்சர், மூன்று வகைப்படும்.
டீச்சர்: good, என்னென்ன என்று சொல்லு??
மாணவன்: ஆட்டுப் பால், மாட்டுப் பால் மற்றும் ஆவின் பால்.
😄😄😄😄
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings