இந்த கால கட்டத்திற்கேற்றவாறு அமையக் கூடிய, நம் மனதில் தோன்றக் கூடிய ஒரு சில வரிகளை எழுதி இருக்கிறேன். பார்க்கலாமா… அவற்றை..
இது ஒரு கற்பனை தான். பொதுவாகவே இந்த கால கட்டத்தில் நாம் சந்திக்க கூடிய சில பிரச்சனைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் எழுதப் பட்டது.
தோன்றிற் கைபேசியோடு தோன்றுக, அஃதிலறார் தோன்றலிற் தோன்றாமை நன்று.
உயிர் போகும் தருவாயில் கூட நம்மை புகைப்படம் பிடிக்குமாம் இவ்வுலகம் கைபேசியில்.
படிப்பும் வேலையும் உடைத்தாயின், இக்காலத்தில் திருமணம் நடைபெறுமாம்.
எண்ணித் துணிக உதவி, புரிந்தபின் உங்களை மறந்து விடுவார்.
சுயநலத்தோடு வாழ்வாரே வாழ்வார், மற்றோரெல்லாம் அடிபட்டே சாகுவார்.
எவ்வழி சென்றாலும் நெரிசல் தான், நெரிசலே இல்லாத சாலை இல்லை.
எந்த வயதிலும் வருமாம் மாரடைப்பு, தீடிரென இக்காலத்தில்.
வயிற்றில் இருக்கும் போதே சேர்க்க வேண்டுமாம் பள்ளிக்கூடத்தில், இல்லாவிட்டால் கிடைக்காது சேர்க்கை.
இணையதளத்தில் எல்லா தகவலும் கிடைக்குமாம், கிடைக்காதது -எதுவேமில்லையாம்.
வாயாலே பேசாமல் கையாலே பேசுமாம், வாட்ஸ் அப்பில் இவ்வுலகம்.
எந் நன்மை செய்தாலும் மதிப்பில்லை மதிப்புண்டாம் தீமை செய்தவர்களுக்கே.
கற்க எப்படியாவது, கற்ற பின் நிற்க அதற்கான வேலையை தேடி.
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings