in ,

அடிமை (சிறுகதை) – மணிராம் கார்த்திக்

எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மதுரை – அனுப்பனடி, மீனாட்சி சுந்தரம் இல்லம். நான்காம் வகுப்பு படிக்கும் தன் மகன் வருணை நோக்கி , கையில் பிரம்புடன் கோவமாக வீட்டிற்குள் நுழைந்தான் பிரசாத். கோவமாக உள்ளே சென்றான்.

“வருண் , எப்ப பாரு இந்த செல்போனை நொண்டிகிட்டே இருக்கிற. உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாது! அடிச்சா தான் திருந்தி இருப்பன்னு நெனைக்கிறேன். “ என்று கோவமாக கூறி மகன் வருணை நெருங்கினான் பிரசாத்.

“ அப்பா, இல்லப்பா உங்க பேச்சை கேக்கிறேன். பள்ளிகூடத்தில் இருந்து செல்போன்ல ஹோம் வொர்க் அனுப்பிருக்காங்க. அத தான் பார்த்துகிட்டு இருந்தேன். “ என்று வருண் பயந்தவாறு கூறினான்.

“ உன்னை சொல்லி என்ன பண்ண. பள்ளிகூடத்திற்க்கும் இந்த பாலா போன செல்போன் தேவபடுதுல , நாங்க படிக்கிற காலத்தில , காலைல 5 மணி இல்ல 6 மணிக்கெல்லாம் எழுந்து , படிச்சுட்டு , அப்புறமா தான் டீ குடிச்சு , பள்ளிகூடத்திற்கு ரெடி ஆவோம். அப்புறம் பள்ளிக்கூடம் போய்ட்டு , சாயந்திரம் வந்து சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் வெளியில போய் விளையாடிட்டு வருவோம். “

“அந்த விளையாட்டு , விளையாட போனதால உடம்புக்கு ஒரு உடற்பயிற்சி கொடுத்த மாதிரி இருக்கும். அதனால உடம்பு ஆரோக்கியமா இருந்துச்சு. அப்புறமா வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் படிச்சிட்டு , சாப்பிட்டு கொஞ்ச நேரம் டீவிய பார்ப்போம். அவ்ளோதான் அப்புறமா தூங்கிருவோம்.  இதுதான் எங்க காலத்து படிப்பு. பள்ளிகூடத்தில விளையாட்டு போட்டில கலந்து விளையாடுவோம்.“

“ இப்போ நீங்க என்னன்னா , விளையாட்டு என்பதை மறந்து , அந்த விளையாட்டையும் செல்போன்ல விளையாடிட்டு இருக்கீங்க. செல்போன் இல்லாமல் உங்கள பார்க்க முடியல. வீட்டுக்கு வந்து அப்பா அம்மாட்ட பள்ளிகூடத்தில் இன்னைக்கு என்ன நடந்தது , எப்படி இன்று போச்சுன்னு சொல்ல உங்களுக்கு நேரம் இல்ல. “

“உங்கள , உங்க உடல் ஆரோக்கியத்தை  நீங்களே , அழிச்சிட்டே வர்றிங்க. கண் பார்வை , உடல் சுறுசுறுப்பு போயிருது. உங்க ஆர்வம் எல்லாம் இந்த சின்ன செல்போன்ல போயிருது. வீட்டுக்கு வர்ற சொந்தகரங்கள , அல்லது வீட்ல இருக்கிறவங்ககிட்ட கூட பேச முடியல. உங்களை எல்லாம் அடிமை படுத்தி வச்சிருக்கு இந்த செல்போன். “

“பக்கத்தில இருக்கிற நண்பர்கள் கூட , ஆரோக்கியமான பேச்சு இல்ல. உங்கள நீங்களே தனிமை படுத்தி என்ன சாதிக்க போறீங்க. வீட்டில் மட்டும் இல்ல, பொது இடத்திலும் அப்படி தான் இருக்கிறீங்க. உங்க கவனம் எல்லாம் செல்போன்ல போயிருது. பக்கத்தில என்ன நடக்கிறது என்பது தெரிய மாட்டேங்குது ?.”

“செல்போன் நமக்கு கிடச்ச ஒரு சிறந்த கண்டுபிடிப்பு தான். ஆனா அத நாம தேவையான இடத்தில் தான் பயன்படுத்தனும். நமக்கு தீங்கு வரும் வகையில் அதனை பயன்படுத்த கூடாது. இன்றைய காலகட்டத்தில் கண்பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகமா இருக்காங்க , அதற்க்கு முக்கிய காரணம் இந்த செல்போன் பயன்பாடு.”

          “இன்றைய வாழ்க்கையின் அத்தியாவச பொருள் செல்போன். அதனை ஒப்பு கொண்டு தான் ஆக வேண்டும். அதனால் நாம் அனைவரும் செல்போனிற்கு அடிமை இல்லை. அதனை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இது குழந்தைகளுக்கு மட்டும் இல்ல இன்றைய சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உண்டான கருத்து. “

          “ நாம் யாருக்கும் அடிமை இல்லை என்பதை புரிந்து , பொருட்களை தேவைக்கு பயன்படுத்த வேண்டும். தேவைக்கு பொருட்களை தான் பயன்படுத்த வேண்டும் , மனிதர்களை அல்ல. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் நல்லா வாய்விட்டு பேசுவோம். மற்றவர்களுடன் பேசும் போது தான் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும்.”

“ தயவு செய்து நல்லா பேசுவோம் , பழகுவோம் இதெல்லாம் நிஜமான வாழ்க்கையில் செய்வோம். செல்போன் வாழ்க்கையில் அல்ல. பிறந்தநாள் வாழ்த்து அத போன்ல கூட பேசாம , அதுக்கும் சோம்பேறித்தனம் , SMS மூலமா WHATSAPP மூலமா சொல்லிகிட்டு இருக்கோம். “

“ இது நான் சொல்ற கடைசிமுறை , சரியா ஒழுங்கா இருக்க கத்துக்கோ! “ என்று அப்பா பிரசாத் கூற , மகன் வருண் பயந்தவனாய் ,

“ சரிங்கப்பா , இனிமே செல்போனை தேவை இல்லாமல் பயன்படுத்தல. தேவைக்கு மட்டுமே பயன்படுதிக்குவேன். நான் ஒன்னும் இந்த செல்போனுக்கு அடிமை இல்ல. “ என்று கூறினான் வருண்.

“ சூப்பர் , செம்மையா இருந்துச்சு , உங்க ரெண்டு பேரு நடிப்பும்.“ என்ற படிசெல்போனில் மீம்ஸ் வீடியோ எடுத்த படி இருந்த ப்ரியா வெளியில் வந்தாள்.

“ இப்போ இந்த வீடியோவ அப்லோட் பண்ணா , நமக்கு அதிகமான லைக்ஸ் வரும். இன்றைய காலகட்டத்திற்கு தேவையான கருத்து சொல்லிருக்கோம்ல. “ என்று கூறினாள் பிரியா.

இன்றைய காலகட்டத்தில் , செல்போன் பயன்பாடு அதிகமாகி விட்டது. அதனை நாம் தேவைக்கு , அதாவது நம்முடைய தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உடல் ஆரோக்கியம் பெற உடற்பயிற்சி , விளையாட்டு ,  இவற்றில் ஆர்வம் கொள்வோம்.

             நாம ஒன்னும் செல்போன் அடிமை இல்லை….அப்படித்தான !!!!                                           

எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தீபாவ(ளி)லி (சிறுகதை) – மணிராம் கார்த்திக்

    தெய்வமாக வந்தவர் (சிறுகதை) – மணிராம் கார்த்திக்