in ,

அது அவள்தான் (சிறுகதை) – செந்தில் செழியன்

2023-24 நாவல்-சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

எழுத்தாளர் செந்தில் செழியன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அன்று விடுதி கூட்டமில்லாமல் இருந்தது

மாலா அங்குதான் அமர்ந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தாள்.

அலைபேசி சிணுங்கியது

இணைப்பை ஏற்று காதருகில் வைத்தாள்

“ஹலோ”

அந்த முனையில் ஒரு குரல் உரக்க சிரித்தது

சற்று பயந்தவள் தெளிந்து மீண்டும் கேட்டாள்

ஹலோ யாரு?

“சாக தயாரா இரு. இன்னும் 1 நாள்தான் உனக்கு”

மீண்டும் சத்தமாய் சிரித்தது அந்த குரல்

அலறியபடி எழுந்தாள் மாலா

அம்மா அவளை பிடித்து உலுக்கியபடி கேட்க கண்ட கனவை விவரித்தாள்.

இந்த கனவு அவளுக்கு புதிதல்ல. இதற்கு முன் பலமுறை இதே கனவு வந்ததாய் சொல்லியிருக்கிறாள்.

இது 5வது முறை

“இதற்கு மேலும் உதாசீனம் செய்ய வேண்டாம்” என்று மாலாவின் தோழி அவளை மருத்துவமனை அழைத்து சென்றாள்

மருத்துவமனை

எதிரில் பெண் மருத்துவர் ஒருவர் அவளைப் பார்த்து சிரித்தபடி கேட்டார்

“என்ன பிரச்சினை?”

“ஒரே கனவு அடிக்கடி வருது டாக்டர். அந்த கனவுல ஒரு குரல் என்னைப் பார்த்து சாக தயாரா இரு. இன்னும் 6 நாள்தான் உனக்குனு சொல்ல ஆரம்பிச்சு நேத்து நைட்டு கனவுல இன்னும் ஒருநாள்தான் உனக்குனு சொல்லுது டாக்டர்”

கேட்டு சிரித்து விட்டு அவளுடன் வந்த தோழியை வெளியே இருக்கும்படி சொல்லி அனுப்பினார் மருத்துவர்

அவள் வெளியே சென்றதும் மாலாவை கவனித்தவர், “இது பெரிய பிரச்சனைலாம் இல்லை. சின்ன டெஸ்ட்லேயே சரி பண்ணிடலாம்”னு சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் வருவதாய் அறைக்குள் சென்றார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் எதையோ யோசித்தவள் திடுக்கிட்டாள். மருத்துவரின் குரல், கனவில் கேட்ட அதே குரல்.

சென்றவர் இன்னும் காணவில்லை என்று எழுந்து அவர் சென்ற அறையை நோக்கி சென்றாள். கதவை தட்ட தாழிடாமல் இருந்த கதவு திறந்து கொண்டது.

அறையில் மேஜை மேல் எதையோ கிடத்தி அதை வேக வேகமாய் வெட்டிக் கொண்டிருந்தாள். கதவை திறந்தது.

முதல் எதையும் கவனிக்காதவளாய் அவள் இருப்பதைக் கவனித்து அருகில் சென்று தோளைத் தொட அவள் திரும்ப கண்ட காட்சி அவள் இரத்தத்தை உறைய செய்தது.

முகத்தில் சதைகள் கிழிந்து தொங்கி பற்கள் கொடூரமாய் வெளியே தெரியும்படி அவளை பார்த்து சிரித்துக்கொண்டு அருகில் வந்தாள். பற்களில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது

மேஜையில் கிடத்தப்பட்டிருந்த உடலை தான் அவள் துண்டு துண்டாய் வெட்டிக் கொண்டிருந்தாள். வெட்டப்பட்ட உடலை பார்த்தவளுக்கு இதயமே நின்று விடும் போல் இருந்தது

அவளுடன் வந்து வெளியே இருக்கும்படி அனுப்பப்பட்ட மாலாவின் தோழியைத்தான் துண்டுதுண்டாய் வெட்டித் தின்றபடி இருந்தாள்.

அலைபேசியில் கேட்ட அதே வார்த்தை மீண்டும்

“சாகத் தயாரா? இன்னைக்கு 6வது நாள் உன்னோட கடைசி நாள்” சொல்லிக்கொண்டே அருகில் வந்தாள்.

சட்டென்று தடுமாறி விழுந்தவள் முன் சுவற்றில் மாட்டி மாலை போடப்பட்டிருந்த புகைப்படம் வந்து விழுந்தது.

அது அந்த மருத்துவரின் படம்தான். தோற்றம் 06.07.1981 மறைவு 09.04.2011

திரும்பியவள் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த காலண்டரை பார்த்தாள்

09.04.2012.

போனவருடம் இதே நாள் இறந்து போனவள் தான் கண்முன் நிற்கிறாள் என்பதை அவளால் நம்ப முடியவில்லை.

இப்போது அந்த குரல் அவளை நோக்கி “இந்த மருத்துவரைத்தான் உனக்கு தெரியாது என்னையுமா?” என்றது சிரித்துக்கொண்டே சத்தமாய்.

அவளுக்கு அந்த குரல் எங்கோ பரிச்சயம்தான். ஆனால் தெளிவாய் ஞாபகத்தில் இல்லை. அப்போது அந்த குரல் சொல்லிய பெயரைக் கேட்டதும் அதிர்ந்து விழித்தாள்

ரேணு…. காதலை ஏற்க மறுத்ததால் நடுவழியில் சாலையில் மறித்து ஒருவனால் முகத்தில் திராவகம் வீசப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போனவள். யாரும் சாட்சி சொல்ல வரவில்லை. போலீஸார் சம்பவ இடத்தில் இருந்ததாய் கூறி மாலாவை விசாரிக்கையில் அவள் அவனை காதலித்து ஏமாற்றியதால்தான் அவன் அவள் மேல் திராவகத்தை ஊற்றியதாய் மாற்றி சொல்லி விட்டாள்.

காரணம், அவன் மாலாவின் தோழி ராகவியின் அண்ணன் என்பதால். அவனும் அதன் பின் வழக்கில் இருந்து வெளியே வந்து அடுத்த ஆறு மாதத்திலேயே அதே போல் ஒரு திராவக வீச்சில் உடல் கருகி இன்றும் தீவிர சிகிச்சையில் இருக்கிறான்

அந்த ராகவிதான் மேஜையில் துண்டாக்கப்பட்டவள். அடுத்தது மாலா.

நினைவுக்குள் வந்தவள் நிதானிப்பதற்குள் கழுத்தில் கூரிய ஆயுதம் வெட்ட சரிந்து விழுந்தாள்.

அறையில் நிசப்தம்

ரத்த வெள்ளத்தில் நிதானமாய் துடித்து அவள் உயிர் பிரிந்தது

அதேநேரம் மருத்துவமனையில் இதுநாள் வரையில் தீவிர சிகிச்சை பிரிவில் அறிவியல் சாதனங்களின் உதவியில் மூச்சு விட்டுக்கொண்டிருந்த ராகவ் தன் மூச்சை  நிரந்தரமாக நிறுத்திக் கொண்டதை இயந்திரம் அறிவித்து அடங்கியது

எழுத்தாளர் செந்தில் செழியன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விருது (சிறுகதை) – மலர் மைந்தன்

    காற்றில் கலையும் மேகங்கள்! (சிறுகதை) – பீஷ்மா