2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘என்ன செய்வது இந்த ஆயிரம் ரூபாயை’
இரண்டு பேருக்கு டியூசன் எடுத்ததில் கிடைத்த ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு யோசித்தாள் பவித்ரா
முதன்முதலில் தான் சம்பாரித்த பணத்தில் என்ன செலவு செய்வதென்று சிந்தித்தாள்.
பவித்ரா கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். பவித்ராவின் குடும்பம் நடுத்தர வருமானம் கொண்டது.
அவள் அப்பா தினக்கூலிக்கு வேலை செய்பவர். அவள் அம்மா இல்லத்தரசி.
வீட்டின் தேவைகளை பவித்ராவின் அப்பா பார்த்துக்கொள்கிறார். கல்லூரி கட்டணத்திற்கு வங்கியில் கடன் வாங்கியுள்ளார்கள். இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் மற்ற செலவுகள் அதாவது அவளுக்குப் பிடித்த உடைகள் வாங்க நண்பர்களுடன் உணவகங்கள் செல்ல தியேட்டருக்குச் செல்ல அவளுக்கு பாக்கெட் மணி வேண்டும். அதற்காகத் தந்தையைத் தொந்தரவு செய்யாமல் தானே சம்பாரிக்க முடிவு எடுத்தாள்.
வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் அவளிடம் பாடத்தில் சந்தேகம் கேட்க வருவார்கள். அவர்களையே வைத்து டியூசன் எடுத்ததில் ஆளுக்கு ஐநூறு ரூபாயாக ஆயிரம் ரூபாய் கிடைத்ததுள்ளது. அடுத்த மாதம் இன்னும் சிலரைக் கூட சேர்த்துக் கொள்ள முயற்சித்தாள்.
இந்த மாதம் கிடைத்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள துணிக் கடை ஒன்றிற்கு சென்றாள் பவித்ரா. வெளியில் காட்சி பெட்டியில் இருந்த சுடிதார் ஒன்று அவளுக்கு மிகவும் பிடித்து விட அதன் விலையை விசாரித்தாள்.
ஆயிரம் ரூபாய் என்றனர்.
பவித்ரா உடையை போட்டுப் பார்த்தாள். அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பில் கட்டும் இடம் வரை சென்று விட்டால் அந்த சமயம் அவள் மனசாட்சி ஒரு துணிக்காக ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டுமா என்று கேட்க அவள் அப்படியே திரும்பி வந்துவிட்டாள் உடையை வைத்துவிட்டு.
அடுத்த நாள் பிடித்த உணவு ஒன்றை சாப்பிட வேண்டும் போல் இருந்தது பவித்ராவிற்கு. ஆன்லைனில் தேடினாள். அந்த இரண்டு உணவுகளும் சேர்த்து நானூறு ரூபாய் மற்றும் டெலிவரி சார்ஜ் என்றிருந்தது. ஒருவேளை உணவுக்காக ஒரு மாதம் முழுதும் கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தை செலவு செய்ய வேண்டுமா! வேண்டாம் வரப்போகும் மாதங்களில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.
பவித்ராவிற்கு வாசனை திரவியங்கள் மீது தனிப்பிரியம். ஆனால் அவள் தந்தைக்கு வாசனை திரவியங்கள் பிடிக்காது. பணம் செலவழித்து இதை வாங்கினேன் என்று தெரிந்தால் அப்பா கஷ்டப்படுவாரோ என்ற யோசனையில் அந்த எண்ணத்தையும் கை விட்டாள்.
வெகு நாட்களாய் தங்க செயின் போட்டுக் கொள்ள ஆசை அவளுக்கு. தங்கவிலையை இணையத்தில் பார்த்தாள்.
‘ஒரு கிராம் ஐயாயிரமா… குறைந்த பட்சம் எட்டு கிராமில் எடுக்க வேண்டும் என்றால் கூட ஐம்பதாயிரம் ஆகும் போலவே.. அதற்கு நான் இன்னும் எத்தனை ஆயிரங்களை இப்படி சேர்த்து எப்பொழுது வாங்குவது.. நடுத்தரவர்க்கத்தினர் எப்படித்தான் தங்க நகைகளை போட்டுப் பார்ப்பது’ பவித்ரா மனதிற்குள் நொந்து கொண்டாள்.
“பவித்ரா” அம்மாவின் குரல் கேட்டவள் தன் சிந்தனைகளை கலைத்து விட்டு எழுந்தாள்.
“சொல்லும்மா”
“எனக்கு ஒரு மாதிரி மயக்கம் வர மாதிரி இருக்கு. அப்பாவ கூப்பட்றியா”
“என்னமா.. என்னாச்சும்மா” பவித்ரா பதறினாள்.
“தல சுத்துது.. அப்பாவ கூப்பிடு”
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால் மயக்கம் ஏற்பட்டதாய் கூறினார். அயர்ன் சுக்ரோஸ் ஊசி போட வழியுறுத்தினர். ஒரு ஊசிக்கு ஆயிரம் ரூபாயாம்.
“அம்மாக்கு அந்த ஊசி போட்றலாம் பா”
“வீட்டுக்குப் போய்ட்டு அப்புறம் வந்து போட்டுக்கலாம்”
“இப்போவே போடலாம்பா.. அம்மாக்கு ரொம்ப கம்மியா இருக்காம்”
“என்கிட்ட இப்போ காசு இல்லம்மா.. ஒரு வாரம் கழிச்சு வரலாம்”
“என்கிட்ட இருக்குப்பா.. போட சொல்லுங்க” தன்னிடம் இருந்த பணத்தை அப்பாவிடம் கொடுத்தாள் பவித்ரா.
அவள் தந்தையும் எதுவும் கூறாமல் வாங்கிக்கொண்டார்.
அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டவள் அடுத்த மாதம் வரும் ஆயிரம் ரூபாயில் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே அலைபேசியில் இரத்தம் ஊரும் காய்கறி பழங்களின் பட்டியலை இணையத்தில் தேடினாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings