in ,

ஆனந்தம் விளையாடிய வீடு (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு பாட்டி உங்க ஊரை பார்ப்பதற்கு எனப் பேரன் நிதிஷ் கேட்டான்.

இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் போய்விடலாம் என்றாள் பாட்டி.

மருமகள் ரம்யா அத்தையின் முகத்தை பார்க்க முகம் இறுகி சோகத்தில் இருந்ததை கவனிக்க முடிந்தது. தன்னுடைய மகன் நிதிஷை சும்மா தொண தொணண்ணு பேசிக்கிட்டே வராத டா என கண்டித்தாள்.

அம்மா எனக்கும் பாட்டி வீட்டையும், ஊரையும் பார்க்க வேண்டும் என ஆசை இருக்காதா அதனால்  தான் கேட்டேன் என்றான் நிதீஷ்.

சரி டா செல்லம்,  நீ கேளு பா நான் சொல்றேன் அம்மா கிடக்கிறா என பேரனுக்கு சப்போர்ட் செய்தாள் பாட்டி.

பாட்டியின் நினைவு பின்னோக்கி சென்றது. பரம்பரை வீடான அண்ணன் தம்பி ஏழு பேர் கொண்ட குடும்பத்தில் அனைவருக்கும் ஆண் குழந்தை பிறக்க  கடைசி தம்பிக்கு பெண் குழந்தை பிறந்தது.  அதனால அந்த குழந்தைக்கு ராணி என்ற பெயர் வைக்க கூட்டு குடும்பத்தில் இளவரசியாக வலம் வந்து கொண்டிருந்தாள் ராணி.

குழந்தை ராணியை நடக்க விடாமல் ஒருவர் மாற்றி ஒருவராக எந்நேரமும் சுமந்து கொண்டே இருந்தார்கள். வீட்டின் செல்ல பிள்ளையாக இருந்த ராணி பள்ளி படிப்பை முடித்தவுடன் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க மருத்துவ படிப்பை படிக்க சென்னைக்கு சென்றாள்.

மருத்துவப் படிப்பு முடித்தவுடன் பிராக்டிஸ்காக தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்தாள். அப்போது அதை மருத்துவமனையில் சதீஷ் என்ற  டாக்டரிடம் நட்பு ஏற்பட்டது. நண்பர்களாக பழகிய இருவரும் காலம் செல்ல செல்ல தங்களை அறியாமலே இரண்டு பேரும் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய காதலை வெளிப்படுத்தாமலேயே பழகிக் கொண்டிருந்தார்கள். விடுமுறையில் ராணி தன் வீட்டிற்கு செல்ல அப்பொழுது திருமணத்தைப் பற்றி வீட்டில் இருப்பவர்கள் பேசினார்கள்.

அப்போதுதான் மனம் திறந்து தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரும் ஒரு மருத்துவர் எனவும் சொல்லியிருக்கிறார் ராணி. இதை  வீட்டில் இருப்பவர்கள் ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. 

நாங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளையும் பிரபலமான மருத்துவரின் மகன் தான்,  அவரும் டாக்டர் தான் என்று குடும்பத்தார்  சொல்ல நான் ஆலோசனை செய்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு இரண்டு நாள் விடுமுறை முடிந்ததும்  சென்னை சென்று விட்டாள்  ராணி. 

அடுத்த நாள்  சதீஷிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்த, அவனும் தான் உன்னை காதலிப்பதாக சொல்ல இருவரின் மனமும் ஒரே எண்ணத்தில் தான் இருக்கிறது என்பதை அறிந்து சந்தோஷப்பட்டார்கள்.

என்னுடைய வீட்டில் என்னுடைய காதலை ஏற்க மாட்டார்கள் இருந்தாலும் உங்களைத் தவிர நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றாள் ராணி. 

எனக்கு எங்க வீட்டில் பிரச்சனை இல்லை, ஏனென்றால் என்னுடைய அம்மாவும்,   அப்பாவும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள். இருவருமே மருத்துவர்கள் தான்.  அவர்களுக்கு நான் ஒரே பையன் என்பதால் என் வீட்டில் நம்முடைய காதலுக்கு எதிர்ப்பு கிடையாது என்றான் சதீஷ். 

ராணி தன்னுடைய குடும்பத்தாரிடம் தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல அது ஒரு காலமும் நடக்காது என காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

வேற வழி இல்லாமல் தன்னுடைய குடும்பத்தாரை எதிர்த்து தன்னுடைய காதலரான சதீஷை  திருமணம் செய்து கொண்டாள் ராணி. 

திருமணம் முடிந்து இருவரும் ஆசீர்வாதம் வாங்க தன்னுடைய ஊருக்கு குடும்பத்தாரை பார்ப்பதற்கு சென்றாள் ராணி.  

ராணி வருவதை அறிந்ததும் குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டின் முன் கதவையும் பின் கதவையும் பூட்டிவிட்டார்கள். 

வீட்டின் வெளியே கேட்டில் “உன் முகத்தைப் பார்க்க எங்களுக்கு விருப்பமில்லை, அதனால் சென்று விடு” என்று எழுதப்பட்டிருந்தது.

சதீஷ் தன்னுடைய காதலியை சமாதானப்படுத்தி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.  காலங்கள் கடந்து சென்றது. 

ராணி இன்று தன்னுடைய மகன், மருமகள்,  பேரக் குழந்தையோடு தன்னுடைய தோழியின் வீட்டு திருமணத்திற்கு சொந்த  மண்ணிற்கு சென்றுக் கொண்டிருக்கிறாள்.

கார் சென்று கொண்டிருக்கையில் திடீரென்று ஓரிடத்தில் நிற்க சொல்லி காரை விட்டு கீழே இறங்கி தான் வாழ்ந்த வீட்டை ஒரு முறை பார்க்கின்றாள்.  கேட்டில் எழுதப்பட்டிருந்த வாசகம் நினைவுக்கு வர வீட்டை பார்க்க முடியாமல் கண்ணில் கண்ணீர் வந்து மறைத்து விடுகிறது.  

பாட்டி எதுக்கு அழுகுறீங்க, அதான் உங்க ஊருக்கு தான வந்து இருக்கீங்க என்று சொல்ல கண்ணீரை துடைத்துவிட்டு இல்லப்பா,  எங்க ஊரை பார்த்த உடனே எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறி தன் தோழியின் திருமண வீட்டை நோக்கி சென்றாள் ராணி.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    செல்லக்குட்டி மணி – சத்யா பானு

    இனி இல்லை இந்தக் கொலை (குறுநாவல் – பகுதி 5) – சுஸ்ரீ