இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“இதுதான் உனக்கு கடைசி வாய்ப்பு. இந்த. சான்ஸை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அப்புறம் நீ இந்திய டீமிலே கிரிக்கெட் விளையாடுவதே கடினம் தான்” கபூர் சொல்லிக் கொண்டிருக்க
“நீ.. என்ன தான் சொல்ல வருகிறாய்..” தேவ் கேட்டான்.
“உன்னை எப்படியாவது பெரிய கிரிக்கெட்டராக்கி காட்டுறேன்னு சவால் விட்டிருக்கேன்”
“ நான் நல்லாத்தானே விளையாடுகிறேன். “ என்றான் தேவ்
“பாரு தேவ். இந்த சென்னை கிளைமேட் உனக்கு ஒத்துப்போகுது ஆனா நீ விளையாடப்போறது .. முதல் மேட்ச் குவைத்திலேங்கிறதை மறந்துடாதே….”
“ஏன் கபூர். பயங்காட்டுற…. “ என்றான் தேவ்
“அந்த பாலைவனத்துல எப்படி விளையாடப்போறங்கிறது தான் முக்கியம், அந்த சீதோசண நிலை உனக்கு ஒத்து வரணும்”
”அதல்லாம் கவலைப்படாதே.. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன். சீக்கிரம் ஏர்போர்ட்டுக்கு போகணும்” என்றான் தேவ்.
விமானி குமார், மூன்றாவது முறையாக பாத்ரூமிலிருந்து வயிற்றைத் தடவிக் கொண்டு வெளியே வந்தவாறு “நேற்றுக் குடித்த ரம் சரியில்லை என்று நினைக்கிறேன்.” என்று எண்ணிக் கொண்டார்.
”வனிதா ஏர்ப்போர்ட் அதாரிட்டிக்கு ஒரு போன் பண்ணி இன்று நான் வர முடியாது என்று சொல்லிவிடு. வயிற்று வலி மிகவும் கஷ்டப்படுத்துகிறது” என்றார்.
”என்ன டியர் ரொம்ப கஷ்டமாக இருந்தால் டாக்டரிடம் போய் வரலாமா?” என்று கேட்டாள் குமாரின் மனைவி வனிதா.
“வேண்டாம் வனிதா. ரெஸ்ட் எடுத்தால் எல்லாம் சரியாகப் போகும்” என்றவர் திரும்பவும் வயிற்றை பிடித்துக் கொண்டு பாத் ரூமுக்குள் ஓடினார்.
வனிதா போனை எடுத்து டயல் பண்ணி “ஹலோ, மிஸ்டர் பிரேம்சந்தைக் கூப்பிடுகிறீர்களா?” என்றாள்
”ஒரு நிமிடம் லைனில் இருங்கள்” என்றது எதிர் முனையில் ஒரு மின்னல் குரல்”
”ஓ.கே”
”ஹலோ மிஸ்டர் பிரேம் சந்த் லைனில் இருக்கிறார் பேசுங்கள்”
”ஹலோ சார் நான் மிஸஸ் குமார் பேசுகிறேன்”
“ஹாய் எப்படியிருக்கீங்க?”
”நன்றாக இருக்கிறோம்”
”சரி என்ன விஷயம்? ஆமாம் குமார் எங்கே? இன்னும் காணோம் இன்னும் ஒரு மணி நேரத்திலே குவைத்திற்கு போகின்ற விமானத்தை மேலே ஏற்றி ஆகணுமே”
“அதற்காகத் தான் சார் போன் பண்ணினேன்”
”என்ன ஆச்சு?”
“திடீரென்று வயிற்றுவலி என்றார் இப்போது கூட பாத்ரூமில் தான் இருக்கிறார்”
”பொய் சொல்லவேண்டாம். திடீர் மூட் வந்து ரெண்டுபேரும் பிக்னிக் போறீங்களா?”
“அப்படியெல்லாம் இல்லை சார் “
“வனிதா ஒரு நிமிடம் குமாரிடம் போனைக் கொடுங்கள்”
”சார் அவர் பாத்ரூமில் இருக்கிறார்”
”இதோ பாருங்கள் வனிதா இன்றைக்கு வரக் கூடிய மூன்று பைலட்டுக்களும் இன்னும் வரவில்லை. குவைத் விமான சர்வீசைக் கான்சல் பண்ணவும் முடியாது. குமார் வந்து விட்டால் நான் சமாளித்துக் கொள்வேன்” என்றார் பிரேம்சந்த்.
”அது வந்து….” என்று வனிதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்த குமார் ”போனை இப்படிக் கொடு” என்று வாங்கி “சார் நான் விமானி குமார் பேசுகிறேன்” என்றார்.
”ரொம்ப நல்லதாகப் போச்சு குமார் ஏற்கனவே சிங், ரட்சகன், நிகில் மூன்று பேறும் விடுமுறையில் இருக்கிறார்கள். அது போக இன்று காலையில் இன்னும் மூன்று விமானிகள் விடுமுறை சொல்லிவிட்டார்கள். இப்போது நீங்கள் வராவிட்டால் நான் குவைத் சர்வீசை கேன்சல் பண்ணவேண்டிய சூழ்நிலைதான்”
கொஞ்சம் தெம்பாக உணர்ந்த குமார், “பரவாயில்லை சார் நான் உடனடியாக புறப்பட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings