பொட்டுக்கடலை மாவு stuffed பரோட்டா.. தொட்டுக்கொள்ள முள்ளங்கி தொக்கு..
இந்த இரண்டு ரெசிபியையும் பார்க்கலாமா..
பொட்டுக் கடலை மாவு stuffed பரோட்டா ரெசிபி:
- முதலில் ஒரு கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- அத்துடன் சிறிதளவு உப்பு, நறுக்கிய வெங்காயம், பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிறிதளவு ஊறுகாய் விழுதை சேர்த்து கலக்கவும்.
- எந்த ஊறுகாய் விழுதாக இருந்தாலும் பரவாயில்லை. சிறிதளவு எண்ணெயையும் ஊற்றி தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி உருண்டை பிடிக்கும் பதத்திற்கு கலந்து வைக்கவும்.
- இந்த ஒரு கப் பொட்டுக் கடலை மாவில் ஐந்து அல்லது ஆறு பரோட்டாவிற்கு stuff செய்யலாம்.
- உங்களின் வீட்டிலுள்ள நபர்களுக்கு ஏற்றவாறு எத்தனை வேண்டுமோ அத்தனை அரைத்து கொள்ளவும்.
- பிறகு தேவையான அளவு கோதுமை மாவையும் உப்பையும் போட்டு சப்பாத்தி மாவை பிசைந்து கொள்ளவும்.
- மாவு சிறிது ஊறிய பிறகு மாவை எலுமிச்ச பழ அளவு உருண்டைகளாக போட்டுக் கொள்ளவும்.
- முதலில் சப்பாத்தியை பூரி சைசுக்கு இடவும். இப்போது மாவின் உள்ளே கலந்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவை சிறு உருண்டை அளவிற்கு வைத்து நன்றாக மூடவும்.
- மூடிய பிறகு சப்பாத்தியை மறுபடியும் இடவும். மிகவும் மெல்லியதாக இதை இடக்கூடாது. சிறிது கனமாகத்தான் இடவேண்டும்.
- பிறகு தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நெய்யையோ அல்லது எண்ணெயையோ தடவி வேக வைத்து எடுக்கவும். பொட்டுக்கடலை மாவு ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.
- மழை காலத்திற்கு மிகவும் ஏற்ற உணவு இது. பொட்டுக்கடலை மிகவும் உடம்பிற்கு நல்லது. குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம்.
முள்ளங்கி தொக்கு ரெசிபி:
- முதலில் அரை கிலோ முள்ளங்கியை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்த பிறகு மூன்று ஸ்பூன் எண்ணெயை விடவும்.
- பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.
- நறுக்கிய இரண்டு தக்காளி, நான்கைந்து பூண்டு பல், பொடிதாக நறுக்கிய இஞ்சி மற்றும் நறுக்கிய வெங்காயத்தையும் (ஒரு வெங்காயம்) போட்டு வதக்கவும்.
- தக்காளி சிறிது வதங்கிய பிறகு துருவி வைத்துள்ள முள்ளங்கியை போடவும். மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பையும் போட்டுக் கலக்கவும்.
- மிதமான தீயில் வைத்து முள்ளங்கி நன்றாக வேகும் வரை கிளறி விடவும். நாம் மாங்காய் தொக்கை எப்படி செய்வோமோ, அதை போலத்தான் இதையும் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இடையே தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் எண்ணெயையும் ஊற்றலாம்.
- முள்ளங்கி நன்றாக வெந்த பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூளை போட்டு வதக்கவும். காரம் அதிகம் விரும்புவர்கள், இன்னும் கொஞ்சம் மிளகாய் தூளை போட்டுக் கொள்ளலாம்.
- இரண்டு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும். கொத்தமல்லி தழையை தூவவும்.. முள்ளங்கி தொக்கு ரெடி.. சாப்பிட மிக அருமையாக இருக்கும்.
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings