இன்னல்கள் நீங்கி
இன்பங்கள் சேர்த்திட
மனதில் அமைதி
மதியாய் விரிந்திட//
அலைந்தே திரிந்தே
அலைகளின் ஆரவாரமாக//
மனமும் மூழ்கிட
மயங்கிய எண்ணங்களில்//
தொடுவானம் தொட்டிட
தொலைதூரம் விடைகளுக்காய்//
கேள்விகளில் வேள்விகள்
கேடில்லாதே வளர்த்தே//
தேடும் நிம்மதி
தேய்ந்தே போயிட//
மகிழ்வும் வலியும்
மலையாய் குவிந்திட//
கண்ட கனவுகள்
கலைந்து கரைசேரா//
கானல் நீராய்
காணுதல் ஏக்கங்களாய்…//
இதயமே சற்று
ஓய்வு தருவாயா?.
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings