எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த ரோடில் வண்டிகள் வேக, வேகமாக சென்று கொண்டிருந்தது. நானும் சுமார் அரைமணி நேரமாக நின்று கொண்டேயிருந்தேன், அந்த ரோடை கிராஸ் செய்து எதிர் பக்கம் போக வேண்டியிருந்தது சில பொருட்கள் வாங்க.
மிக டிராபிக் ஆன அந்த ரோடில் வேகத்தடை எதுவும் அங்கே இல்லை. அந்த நேரத்தில் என் பக்கத்தில் ஒரு நாய் வந்து நின்றது. நாய் என்றால் எனக்கு ஒரு பயம். அதை துரத்தினால் எங்கே கடித்து விடுமோ என்ற பயம் வேறு. சற்று தூரம் வந்து தள்ளி நின்றேன்.
அந்த நாய் என்னை ஒரு முறை பார்த்து விட்டு திரும்பி சென்று விட்டது. இப்படியும், அப்படியும், நடந்து சென்று முன்னே செல்ல முயல்வேன், சர் என்று ஒரு வண்டிக்கார் வருவார். பின்னால் வருவேன். இப்படியே ஒரு மணி நேரம் ஆகியும் அந்த ரோடை என்னால் கிராஸ் செய்து எதிர் பக்கம் உள்ள கடைக்கு செல்ல முடியவில்லை.
அப்போது ஒரு கண் தெரியாத பெரியவர் கையில் ஒரு walking stick வைத்துக் கொண்டு அந்த ரோடை கிராஸ் செய்ய வந்தார். நான் திகைத்து போனேன். இரண்டு கண்கள் நன்றாக இருக்கும் நானே, ஒரு மணி நேரமாக ரோடை கிராஸ் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் இவர் எப்படி கிராஸ் செய்வார்? என்று எண்ணிக்கொண்டே அவரைப் பார்த்த போது, அவர் அருகில் அந்த நாயும் நின்று கொண்டிருந்தது.
என்னைப் பார்த்து குரைத்தது. ஏன்? என்னைப் பார்த்து குறைக்கிறது என்று புரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்த என்னை நோக்கி, அந்த கண் தெரியாத பெரியவர் வந்தார். அவருடன் அந்த நாயும் கூட வந்தது.
அவர் என் அருகில் வந்தவுடன், “தம்பி ரொம்ப நேரமா இந்த ரோடை கிராஸ் செய்ய முடியாமல் கஷ்டபடுகீறீர்களோ?” என்று கேட்டார்.
“ஆமாம் உங்களுக்கு எப்படி தெரியும் என்றேன்?”.
சொல்றேன், “முதல்ல இந்த கொம்பின் ஒரு பகுதியை பிடித்து கொண்டு என்னை எதிரே அழைத்து செல்வது போல நடந்து சென்று கொண்டே இருங்கள், வழி தானாக கிடைக்கும்” என்றார்.
நானும் அவர் கூறியபடியே செல்ல, உடன் அந்த நாயும் வந்தது. “ரகு நீயும் வர்றீயா, என்று அந்த பெரியவர் கேட்க, அந்த நாய் ஆமாம், என்பது போல் குரைத்தது”.
இரண்டு நிமிடத்தில் எதிர்புறம் வந்து சேர்ந்தோம். “தம்பி உங்க வேலையை முடிச்சிட்டு வாங்க, நாங்க இங்கேயே இருக்கோம்” என்றார் அந்த பெரியவர்.
அய்யா நீங்க..?,
சொல்றேன், “உங்க வேலையை முடிச்சிட்டு வாங்க” என்று அவர் கூற,
‘நான் வாங்க வேண்டிய பொருள்களை வாங்கி கொண்டு வரும் வரை, அந்த பெரியவரும், அவருடன் அந்த நாயும் அங்கே நின்று கொண்டிருந்தனர்’ .
நாய் குரைக்க அந்த பெரியவர் “தம்பி போகலாமா என்று கேட்டு அவர் கொம்பை நீட்ட”
நான் அதை பிடித்து கொண்டு முன் செல்ல அவரும், ரகுவும் பின்னால் வர இந்த பக்கம் ஒரே நிமிடத்தில் வந்து சேர்ந்தோம்.
நான் அவருக்கு நன்றி கூற, அவர் தம்பி, “இதோட பேரு ரகு, என்னோட உயிர் நண்பர் பெயரை வச்சிருக்கேன். இந்த ரகுக்கு தான் நீங்க நன்றி சொல்லணும். அவன் தான் என்னை உனக்காக இங்கே அழைத்து வந்தான். தினமும் குறைந்தது ஒரு ஐந்து பேருக்காவது, இது போல உதவி செய்ய சொல்லி என்னை கட்டாயப்படுத்தி அழைத்து வந்து வந்து விடுவான்” என்று அவர் கூற, அந்த நாய், சாரி, ரகு ஆமாம் என்பது போல குரைத்தார்.
அந்த ரகுவுக்கு நன்றி கூறும் விதமாக பக்கத்தில் இருந்த ஒரு டீ கடையில் பிஸ்கட் வாங்கி கொண்டு வந்து பார்த்தால், அவர்கள் இருவரும் வெகு தூரத்தில் சென்று கொண்டிருந்தார்கள், எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings