எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சென்னை காய்கறி மார்கெட்டில் தக்காளி சில்லறை வியாபாரம் செய்யும் குமார் அன்று திங்கட்கிழமை காலையில் தின வட்டி முறையில் இரண்டு நாட்களுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு வட்டி தொகை ரூ.1000/- போக மீதம் ரூ.9000/- வாங்கி வந்து தக்காளி ஏலத்தில் கலந்து கொண்டார்.
அன்றைய தினம் தக்காளி வரத்து மிகவும் குறைந்து இருந்ததால் பத்து கிலோ எடை கொண்ட முதல் ரகம் ஒரு கூடை தக்காளி ஆயிரம் ரூபாய் வரை ஏலம் போனது. அறுநூறு வரை கேட்டு விட்டு மேற்கொண்டு கேட்காமல் யோசனை செய்தான் குமார், ஒரு கூடை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினால் நம்மிடம் உள்ள பணத்துக்கு 9 கூடை தக்காளி தான் கிடைக்கும்.
அதாவது தொண்ணூறு கிலோ தக்காளி தான் கிடைக்கும். இவைகளை இரண்டு நாளைக்குள் விற்று விட வேண்டும். இதில் குறைந்தபட்சம் ஒரு கூடைக்கு அரை கிலோ வீதம் கூடையின் கீழ் பகுதியின் உள்ள தக்காளிகள் அடிபட்டிருக்கும். எனவே சுமார் ஐந்து கிலோ தக்காளிகள் பயன்படாது. மீதம் 85 கிலோ தான் விற்பனை செய்ய இயலும்.
இவற்றை வாங்கி தன் கடைக்கு கொண்டு செல்ல வண்டி வாடகை சுமார் ஐநூறு ஆகும். ஆக வட்டி வகையில், தக்காளி அடிபட்ட வகையில் , வண்டி வாடகை 1000+ 500+ 500= 2000/-. மொத்தம் 2000/- + வாங்கிய விலை 9000 = 11,000÷ 85 கிலோ = ரூ.130/-அடக்க விலை ஆகிறது .
நமக்கு லாபம், கிலோவுக்கு ரூ.20/- வைத்து ரூ.150/-க்கு விற்பனை செய்தால் கூட இலாபம் 1700/- தான் வரும், அதுவும் மொத்தமும் விற்பனை செய்தால் மட்டுமே. என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டே தக்காளியை தவிர்த்து வேறு எதாவது வியாபாரம் செய்யலாமா என்று யோசித்த போது தான், நாம் ஏன் தக்காளி பயிரிடும் விவசாயிகளிடம் நேரிடையாக சென்று விலை பேசி, வாங்கி வியாபாரம் செய்தால் லாபம் அதிகம் கிடைக்குமே, தவிர தின வட்டிக்கு பதிலாக மாத வட்டிக்கு எவரிடமாவது கேட்டு பார்க்க லாமே.. என்று எண்ணினான்.
நேராக தின வட்டிக்கு பணம் கொடுத்தவரிடம் சென்று ஏலம் அதிகமாக போனதால் என்னால் வாங்க இயலவில்லை. வட்டியை பாதி தள்ளி கொள்ளுங்களேன் என்றான். வட்டிக்கு கொடுத்தவரும் குமாரின் நிலைமையை பார்த்து, ‘சரி தம்பி” என்றார். ரூ.9500/- கொடுத்து அவருக்கு நன்றி கூறிவிட்டு தன் மனைவியிடம் நடந்ததையும் , தன் யோசனையையும் கூறினான் குமார்.
அவன் மனைவி ரேவதி “ஏங்க இதுநாள் வரை இப்படி தான் தின வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரம் பண்ணிட்டு வர்றீங்களா என்று கேட்டு விட்டு, நான் ஒரு யோசனை சொல்லவா..? என்று கேட்டாள்.
“என்ன யோசனை? எனக்கு தெரியாத யோசனை” என்றான் குமார்.
“மறுபடியும் மாத வட்டிக்கு வாங்கி, தக்காளி விவசாயம் செய்யும் விவசாயிடம் நேரிடையாக வாங்கி வியாபாரம் செய்தால் அதிக லாபம் வரும்ன்னு சொல்றீங்க இல்லையா? அதனால வெளியில அதிக வட்டிக்கு கடன் வாங்காம என்கிட்ட இருக்கிற செயினை அடகு வைத்து பணம் வாங்கி அத கொண்டு வியாபாரம் பண்ணுங்க..! , வெளியில் வட்டிக்கு வாங்கறதை விட பேங்க்ல நகைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் தர்றாங்களாம். தவிர மாதம் தோறும் வட்டி மட்டுமே கட்டினா போதும் , ஆனால் ஒரு வருடத்திற்குள் அசலை செலுத்தி விட்டு நகைகளை மீட்டுக் கொள்ள வேண்டும். நமக்கு வட்டியும் குறைவு, தவிர ஒரு வருடத்திற்கு வியாபாரம் செய்து வரும் அந்த பணத்தை திரும்ப, திரும்ப முதலீடு செய்வதால் நமக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்” என்று கூறினாள்.
குமார் தன் மனைவி ரேவதியை பார்த்து “இந்த யோசனை எனக்கு வரலையே பலே , பலே” என்று மனைவியை பாராட்டி விட்டு தக்காளி விவசாயம் செய்யும் விவசாயியை தேடிச் சென்றான்.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings