in , ,

மீசைக்காரனின் காதலி (குறுநாவல் – இறுதிப் பகுதி) – ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்

எழுத்தாளர்  சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் எழுதிய மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

லெட்சுமியிடம் தனது காதலை கூறிவிட்டு அவளுக்கு சம்மதம் என்றால் நாளை கோவிலுக்கு வரும்படி கூறினான் முத்து. மீசைக்காரனின் காதலி வந்தாளா?  அவனின் காதலை ஏற்றாளா ?

உனக்கு என்ன கட்டிக்க சம்மதம்னா  நாளைக்கு இதே கோவில்ல நாம சந்திக்கலாம் . யோசிச்சு பதில் சொல்லு புள்ளநா வாரேன்.

முத்து அவ்விடம் விட்டு நகர்ந்தான். லெட்சுமி தான் உரைந்து நின்றாள் செய்வதறியாது

பொழுது விடிந்தது தன் வாழ்வின் விடியலை நோக்கி முத்து கோவிலுக்கு வந்தான். லெட்சுமி வரவில்லை. காத்திருந்தான் காலை பூஜைக்கு வந்தான் உச்சிகால பூஜையும் முடிந்து நடைசாத்தும் நேரமும் வந்தது லெட்சுமி மட்டும் இன்னும் வரவில்லை. மீண்டும் ஒரு ஏமாற்றம் வலியை தனக்குள் புதைத்தபடி கோவில் வாசலில் தன் செருப்பை தேடியவனின்  விழிகள் நிலைகொண்டது அவனின் லெட்சுமி வருகையால். 

ஆம்! லெட்சுமி வந்தாள் தனியாக அல்ல தன் பிள்ளைகளுடன் .

இளஞ்சிவப்பு வண்ணத்தில் அடர்பச்சை நிற பாடர்வைத்த வாயில் புடவையில் நேர்த்தியான தலைபின்னல் முகத்தில் ஒரு பொலிவு கண்களில் காதல் மின்னக் “கிளம்பிட்டிங்களா…, “என்றாள் முத்துவிடம் 

என்ன பதில் சொல்லவதென்று தெரியாது  இந்த முறை முத்து திணறினான்.

“நாங்க உங்கள பாக்கத் தான் வந்தோம். உங்ககிட்ட பேசலாமா என லெட்சுமியின்  மகனா கணேசன் கேட்ட கேள்விக்கு முத்துவின் தலைமட்டும் ஆடியது சரி என்று.

அனைவரும் கோவில் வெளிப்பகுதியில் இருக்கும் நாலுகால் மண்டபத்தில் அமர்ந்தார்கள். பெரியவர்கள் இருவரும் அமைதியாக இருக்க அந்த அமைதியை கலைத்தாள் லெட்சுமியின் மகள் சுஜா .

“நீங்க நேத்து அம்மாக்கிட்டப் பேசுனத அம்மா எங்ககிட்ட சொன்னாங்க. அப்பா இறந்ததுக்கு அப்பறம் எங்களுக்காகவே வாழ்ந்தவங்க எங்க அம்மா அவங்களுக்குனு தனியா விருப்பு வெறுப்புனு இருந்ததில்லை இத்தன வருஷத்துல அம்மா எங்கிட்ட ஒண்ணு கேட்டாங்கனா அது உங்களத் தான். யோசிச்சு பாத்த இதுல எதுவும் எங்களுக்கு தப்பா தெரியல. எங்க ரெண்டு பேருக்கும் இதுல முழு சம்மதம்”.

முத்துவுக்கு சப்தநாடியும் ஒடுங்கியது போல இருந்தது எதுவும் பேச நா எழவில்லை

கணேசன் பேச்சை தொடர்ந்தான் “நீங்க சரினு சொன்னா வர்ர வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்தம் அன்னைக்கே கல்யாணத்த வச்சுக்கலாமா?”

முத்து இதை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒருசேர அவன் முகத்தில் பிரதிபலித்து.

“லெட்சுமிக்கு எது விருப்பமோ அப்படியே பண்ணிடலாம் என்றான் திக்கித்திணறி .”

இதழ் ஒரச் சிறு சிரிப்பில் அழகாய் லெட்சுமியின் முகம் மலர்ந்து தான் பால்யத்தில் தொலைத்த அதே லெட்சுமியை மீட்டெடுத்த ஆனந்தம் அப்பட்டமாக தெரிந்தது முத்திடம். 

உறவுகளின் முணுமுணுப்புக்கும் சலசலப்புக்கும் இடையில் கோவிலில் மிக எளிமையாக நடந்தேறியது முத்து லெட்சுமியின் திருமணம் 

காதலும் தாம்பத்தியமும் ஒன்றல்ல. இங்கு பல தாம்பத்தியங்களில் காதல் இருப்பதில்லை. பல காதல்கள் தாம்பத்தியம் வரை செல்வதும் இல்லை. முத்துவுக்கும் லெட்சுமிக்குமான காதல் உடல் சார்ந்த தேவையாக இல்லாது மனம் சார்ந்தவையாக மட்டுமே இருந்தது. இப்படிக் காமத்தைக் கடந்த காதல்களுக்கு ஆயுள் நீளம். வயதும், வனப்பும் மனித மனதிற்குக் கிடையாது அது ஆறிலும் அறுபதாகும் அறுபதிலும் ஆறாகிடும் . 

நிறைவுற்றது மீசைக்காரனின் காதல் ஆதரவு அளித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி மீண்டும் அடுத்தக்கதையில் சந்திக்கிறேன் 

எழுத்தாளர்  சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் எழுதிய மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தக்காளி வியாபாரி (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

    உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 15) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை