in ,

நேர்மை – பணி ஓய்வு (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

ழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

நான் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் உள்ளது. முதலில் என்னப் பற்றி சொல்லிடறேன்.

என் பெயர் ரங்கராஜன். சொந்த ஊர் ஸ்ரீ ரங்கம், என் மனைவி பெயர் கோகிலா. எனக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவரும் நல்ல வேலையில் உள்ளனர். நான் இப்போது பணிபுரிவது சென்னையில் அரசு சார்ந்த அலுவலகத்தில் கண்காணிப்பு பொறியாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.  

எனது நேர்மையின் காரணமாக பல ஊர்களுக்கு மாற்றலாகி கடைசியில் பணி ஓய்வு பெறுவது சென்னையில்.  நான் ஓய்வு பெறும் நாளை,  என்னை விட,  என்னுடன் பணிபரியும் மற்றவர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து நாட்களை எண்ணிக் கொண்டு வந்தனர்.

கண்காணிப்பு பொறியாளர் ஆச்சே, பதவியின் பெயருக்கேற்ப அலுவலகத்தில் அனைவரையும் கண்காணித்துக் கொண்டே இருப்பேன். காரணம் நான் வேலையில் கண்டிப்பானவன். நேரம் தவறாதவன். நான் யாரிடமும் கையூட்டு  எதுவும் பெறாமல் வேலை செய்வதாலும் , மற்றவர்களையும் கையூட்டு பெறுவதை தடுத்து,  நேர்மையாக வேலை செய்ய சொல்வதால் அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தேன்.

என் காதில் விழ வேண்டும் என்றே என் பின்னால் சென்று யாரையோ சொல்வது போல் பேசுவார்கள்.  “இவருக்கு என்னப்பா..?, சொந்த வீடு, போதா குறைக்கு , மனைவி, மகன், மகள் அனைவரும் நல்ல பதவியில் உள்ளனர், நல்ல வருமானம் வருகிறது.  இவருக்கு தேவையில்லை என்றால் ஒதுங்கி கொள்ள வேண்டியது தானே..!, நம்மை ஏன் கண்காணிக்கிறார்..? நமக்கு தேவைபடுகிறதே” என்று.

ஆனால் நேரில் பார்க்கும் போது “சார்,  நீங்கள் ஓய்வு பெறுவதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது, உங்களைப் போல் இந்த அலுவலத்தில் எல்லா வேலைகளையும் தெரிந்தவர் யாருமே இல்லை” என்பார்கள்.

யாருக்கு எந்த சந்தேகம் வந்தாலும், சந்தேகத்திற்கு விடை கேட்காமல்,  சார் இந்த வேலையை நீங்களே முடிச்சு கொடுத்திடுங்க என்று பவ்யமாக கேட்பாங்க. அதனால் அந்த வேலையை வாங்கி நானே செய்து விடுவேன்.  எனவே அவர்களுக்கு வேலை பளு இருக்காது. அதனால் ஒரு சிலருக்கு என் மீது கோபம் இருந்தாலும், அவர்களுக்கு வேலை ஆக வேண்டும் என்பதால் மிகவும் அன்பாக இருப்பது போல் நடிப்பார்கள்.

என்னுடைய இருபத்தி ஐந்து வயதில் வேலைக்கு சேர்ந்தேன். முப்பத்தி ஐந்து வருட சர்வீசில் எத்தனை ஊரில்,  எவ்வளவு பேருடன் வேலை செய்திருப்பேன். யார்,  யார் எப்படிபட்டவர்? என்று நன்கு தெரிந்து வைத்திருப்பவன் நான் என்னைப் போலவே நேர்மையாக பணி புரிந்து கண்காணிப்பு பொறியாளராக கடந்த வருடம் ஓய்வு பெற்றவர் என் நண்பன் ராமானுஜன்.

ஓய்வு பெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் மனைவி இறந்து விட, அவருக்கு வாரிசுகள் யாரும் இல்லாத காரணத்தாலும்,  அந்த துக்கத்தில் கடைசி இரண்டு மாதங்கள் பணிக்கு வர விருப்பமில்லாமல் மருத்துவ விடுப்பில் இருந்து விட்டார்.

பின்னர் ஒரு மாதம் கழித்து ஓய்வூதியம் மற்றும் இதர தொகைகளை பெறுவதற்குண்டான Formalities Applications submit செய்ய அலுவலகம் வந்த அவரை, அவர் பணிபுரிந்த காலத்தில் அவரின் நேர்மை,  வேலையில் கண்டிப்பு,  வேலை துரிதம், போன்ற பழைய காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு ஒருவரும் கண்டு கொள்ளவேயில்லை. அவரைப் பார்த்து சிறிய புன்னகையுடன் நிறுத்தி கொண்டார்கள்.

அவர்களின் செயல்களை பார்த்து நான் மிகவும் வேதனை அடைந்து அவரை என் எதிரில் அமர வைத்து காபி கொடுத்தேன்.  பின்னர் அவர் பணி ஓய்வூதியம்  மற்றும் அவருக்கு அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய தொகை அனைத்து வேலைகளையும் நானே செய்து கொடுப்பதாக கூறி தேவையான விண்ணப்பங்களில் அவரின்  கையொப்பம் மட்டும் பெற்று கொண்டு அவரை அனுப்பி வைத்தேன்.

அவரின் பணி ஓய்வூதியம்,  சேமநல நிதி,  மற்றும் பணிக்கொடை ஆகியவற்றை பெற நானே ஒவ்வொரு டேபிளுக்கும் சென்று,  அவரவர்களின் வேலையை உடனடியாக செய்ய வைத்து, அவர்களின் தேவையற்ற சந்தேகங்களுக்கு விளக்கம் கூறியும்,  சம்மந்தப்பட்ட கோப்புகளை தயார் செய்ய வைத்து,  கோப்புகளை நகர்த்தி, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து நண்பர் ராமானுஜன் ஓய்வூதியம் மற்றும் இதர தொகைகளை பெறுவதற்கு நான்கு மாதங்கள் ஆனது.

அந்த நிலை எனக்கும் வந்து விட கூடாது என்று எண்ணி,  இரண்டு மாதத்திற்கு முன்பே எல்லாவற்றையும் தயார் செய்து வைத்திருந்து பணி ஓய்வு பெற்ற மறுநாள் நானே என் தலைமை அலுவலகத்தில் நேரில் சென்று சமர்ப்பித்தேன்.

என்ன தான் மனைவி, பிள்ளைகள் சம்பாதித்தாலும்,  நல்ல பிள்ளைகளாக இருந்தாலும், பணி ஓய்வு பெற்ற பிறகு, நம் செலவிற்கு அவர்களின் கையை எதிர்பார்க்காமல்,  நம் ஓய்வூதியத்தை கொண்டு நம் செலவுகளை பார்த்தக் கொள்வதுதான் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வராமல் இருப்பதற்கும், நிம்மதியான  ஓய்வு வாழ்க்கை வாழ‌ ஒரு  நல்ல தீர்வாக  இருக்கும். 

” தன் கையே தனக்குதவி “

எனக்கு நான் ஓய்வு பெற்ற மறுமாதமே,  என்னுடைய முன் யோசனையால் ஓய்வூதியம் கிடைத்தது. 

“நேர்மையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த சிறுகதை சமர்ப்பணம் “.

ழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    திருச்சி – சென்னை பேருந்து (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

    அம்மாவுக்கு ஒய்வு தேவையில்லை (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்