in ,

கீழ் போர்ஷன் வாடகைக்கு (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

ழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ராகவன்: காமாட்சி , “இன்னைக்கு நம்ம கீழ் போர்ஷனை பார்க்க ஒருத்தரை அழைத்துக்கொண்டு வருவதாக தரகர் பொன்னுசாமி சொல்லியிருக்கிறார், வந்தாருன்னா நல்லா விவரமா விசாரிக்கோ.. பிறகு என்னை குறை சொல்லக் கூடாது என்ன.. சரியா?” வர்வங்களால நமக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது. 

காமாட்சி: “ஏன் நீங்க இருக்கும்போது வர சொல்ல வேண்டியதுதானே..?” 

ராகவன்: “அவங்க வர ஆம்னி பஸ் காலை 12.00 மணிக்கு மேல தான் சென்னைக்கே வருமாம், அதனால் 2.00 மணி வாக்கில் அழைத்து வருவதாக சொன்னார். அதுக்காக நான் லீவு போட்டுட்டு வீட்டில இருக்க சொல்றியா..? என்னை விட நீ தான் நல்லா விசாரணை செய்வியே..! 

அதனால் தான்,  பரவாயில்லை, பொன்னுசாமி வாங்கன்னு சொல்லியிருக்கேன்”. “எல்லாத்தையும் மறக்க வேண்டி தான் நாம சென்னைக்கு வந்திருக்கோம், அத நீ மறக்காதே, சரியா..? நாம இங்க சென்னைக்கு வந்தது யாருக்கும் தெரியாது,  தெரியவும் கூடாது, அதனால் தான் நம்ம இரண்டு பேர் போன் நம்பரையும் கூட மாத்திட்டேன்

காமாட்சி: “சரி நீங்க தப்பிச்சிக்க இது ஒரு காரணம்,  சரி கிளம்புங்க நான் பாத்துக்கிறேன்”.

பொன்னுசாமி: சார்,  சார்

காமாட்சி : ‘வாங்க, நீங்க வீடு பார்க்க யாரையோ அழைத்து கொண்டு வருவீங்கன்னு சார் சொன்னார்’, ஆனா நீங்க மட்டும்  தான் வந்திருக்கிறீங்க..?

பொன்னாசாமி : அவங்களுக்கு பஸ்ல வந்ததுல ரொம்ப களைப்பா இருக்காம்.  உங்கள பத்தி கேட்டாங்க,  நானும் உங்க இருவரையும் பத்தியும்,  வீட்டை பத்தியும் சொன்னேன். அதுல அவங்க இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷப்பட்டு,   நான் சொன்னதே போதுமாம்,  அதனால வீட்டை பார்க்க வேண்டிய அவசியம் இல்லையாம்,  என்னையே உங்கள பார்த்துட்டு அட்வான்ஸ் கொடுத்துட்டு வரச் சொன்னாங்க .

காமாட்சி: “அது எப்படி? அவங்களை பத்தி நாங்க தெரிஞ்சிக்க வேண்டாமா..?”

பொன்னுசாமி: அம்மா,  அவங்க இரண்டு பேருக்கும் ஒரு மாசத்துக்கு முன்ன தான் கல்யாணம் நடந்திருக்கு. லவ் பண்ணியிருக்காங்க, இரண்டு பேர் வீட்டிலும் ஒத்துக்கலையாம். அதனால் பதிவு திருமணம் செய்துக் கொண்டு அந்த ஊரில் இருக்க விரும்பாம,  சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்திருக்காங்க. தற்சமயம் அந்த பொண்ணோட பிரண்ட்ஸ் வீட்டில் தான் வந்து தங்கியிருக்காங்க.

காமாட்சி: எந்த ஊரிலிருந்து வந்திருக்காங்க.. அவங்க பேரு என்ன?

பொன்னுசாமி: திருச்சின்னு சொன்னாங்க, பேர் எதுவும் கேட்கல, கேட்டு சொல்லவா..?

காமாட்சி:  திருச்சியா..? அங்க எந்த ஏரியா..?,   ஆமாம் உங்களுக்கு எப்படி அவங்களை தெரியும்.?

பொன்னுசாமி: அவங்களை எனக்கு தெரியாதும்மா..! அவங்க பிரண்டோட அப்பா எனக்கு தெரிந்தவர். அவர் சொல்லி தான் எனக்கு தெரியும் .

காமாட்சி: எங்க கண்டிஷனை அவங்க கிட்ட சொல்லிட்டீங்களா..?

பொன்னுசாமி: நான் உங்களப்பத்தி, உங்க கண்டிஷன்,  வாடகை எல்லாத்தையும் சொல்லிட்டேன்.

காமாட்சி: அதுக்கில்ல, நாங்க திருச்சியிலிருந்து வந்து, சாரி,  சாரி தஞ்சாவூரில் இருந்து வந்து இந்த வீட்டை வாங்கி ஒரு மாசம் தான் ஆகுது. 

எங்களுக்கே இந்த ஏரியா பத்தி இன்னும் சரியா தெரியல.  எங்க இரண்டு பேருக்கும் இவ்வளவு பெரிய வீடு வேணாமேன்னு தான் கீழ் போர்ஷனை வாடகைக் விடலாம்னு யோசனை செஞ்சு உங்க கிட்ட சொன்னோம். புதுசா குடி வர்றவங்க ஏதாவது தகராறு பண்ற ஆளாக இருந்தா என்ன பண்றது அதுக்கு தான் கேட்டேன் 

பொன்னுசாமி: அம்மா நீங்க கவலையே படாதீங்க…!, அவங்க இங்க வந்து தங்கியிருக்கிற அந்த பொண்ணோட, தோழியோட  அப்பா,  எனக்கு ரொம்ப நல்லா தெரியும்.  நல்ல மனுஷன், ஸ்டேட் பேங்க்ல பிரான்ச் மேனேஜர். எந்த பிரச்சனையும் வராது.

காமாட்சி: என்னிக்கு வீட்டுக்கு குடி வரர்தா சொன்னாங்க..? 

பொன்னுசாமி: இன்னிக்கு திங்கட்கிழமை ,  நாளைக்கு செவ்வாய் கிழமை வேண்டாம் , அதனால் புதன்கிழமை நாள் நல்லா இருக்குன்னு, நான் தான் சொன்னேன். அவங்களும் சரி அன்னிக்கே பால் காய்ச்சி குடி வர்தா சொன்னாங்க.

காமாட்சி: “புதன்கிழமையா..?நாளன்னிக்கா..?”

பொன்னுசாமி: ஏம்மா..?

காமாட்சி: நாங்க இரண்டு பேரும் செவ்வாய்க்கிழமை இராத்திரி திருச்சிக்கு,  சாரி தஞ்சாவூருக்கு போறோம். வீடு ஒன்றை விற்க போகிறோம். திரும்பி வர ஒரு மூன்று நாள் ஆகும் . அதான்..

பொன்னுசாமி: அப்ப அடுத்த வாரம் நல்ல நாள் பார்த்து விட்டு வரச் சொல்லவா..?

காமாட்சி: “வேணாம், வேணாம்..  பாவம் எத்தனை நாள் பிரண்ட்ஸ் வீட்டில் தங்குவாங்க…? நீங்க இவ்வளவு தூரம் சொல்றதாலே, நான் சாவியை உங்க கிட்ட கொடுக்கிறேன், அவங்கள புதன் கிழமையே வந்து பால் காய்ச்சி குடி வரச்சொல்லுங்க..”

பொன்னுசாமி: “இந்தாங்க அம்மா அட்வான்ஸ் மூன்று மாத வாடகை ரூபாய் முப்பதாயிரம் இருக்கு” . “அம்மா, இங்கே சென்னையில எல்லாரும் பத்து மாத வாடகையை தான் அட்வான்ஸ் கேட்பாங்க‌ ஆனால் நீங்க மட்டும் தான் மூன்று மாதம் போதும்ன்னு சொல்றீங்க, இது தான் வர்வங்களுக்கு உங்கள் மேல் அதிக மதிப்பை கொடுத்தது”.

காமாட்சி: “அந்த பணத்தை வச்சி நாம என்ன பண்ண போறோம்..?  சொல்லுங்க”  ஏதோ அவங்களும் நம்ம வீட்டை பத்திரமா பார்த்துக்க வேண்டி ஒரு தொகையை வாங்கிக்கறேன், அவ்வளவுதான்..

உட்காருங்க சாவியை கொண்டு வந்து தருகிறேன். உங்க கமிஷனை சாயங்காலம் வந்து சார் கிட்ட வாங்கிக்கோ.

பொன்னுசாமி: “பரவாயில்லம்மா…! ஒன்னும் அவசரமில்லை,  நீங்க ஊர்க்கு போய்ட்டு வாங்க, நான் அப்பறமா வந்து வாங்கிக்கிறேன்”.

‘ராகவனும், காமாட்சியும்  செவ்வாய் இரவு கிளம்பி திருச்சிக்கு சென்று தங்கள் சொந்த வீட்டை விற்பனை செய்து விட்டு, இனி திருச்சி பக்கமே வரக்கூடாது என்ற முடிவுடன்  மற்றும் சில முக்கியமான வேலைகளை முடித்த பின்னர் திங்கட்கிழமை  இரவு திருச்சியிலிருந்து கிளம்பி மறுநாள் செவ்வாய் கிழமை மதியம் சென்னை வந்து சேர்ந்தனர்.  

ராகவன்: காமாட்சி கீழ் போர்ஷன் பூட்டியிருக்கே.. கவனிச்சியா..? இன்னும் அவர்கள் வரலையா..?

காமாட்சி :  பொன்னுசாமி அண்ணனுக்கு  போன் போட்டு கேளுங்களேன் , இது கூட நான் சொல்லணுமா..?

ராகவன்: சரி,  சரி.. கேட்கிறேன். என்ன பொன்னுசாமி வாடகைக்கு வர்றேன் சொன்னவங்க வரலையா.? வீடு பூட்டியிருக்கே..!

பொன்னுசாமி: சார் “அவங்க சொன்ன மாதிரியே புதன்கிழமை வந்து பால் காய்ச்சி,  சாமான் எல்லாம் கூட கொண்டு வந்துட்டாங்க”. “அவங்க சொந்தகாரங்க சிங்கப்பூர்ல இருக்காங்களாம், அங்கே போயிருக்காங்க, வருவதற்கு ஒரு பத்து நாள் ஆகும்ன்னு சொல்லிட்டு இன்னிக்கு காலைல தான் கிளம்பி போனாங்க”. 

ராகவன்: ஓ அப்படியா..? சரி. “நீங்க வந்து உங்க கமிஷனை வாங்கி கொள்ளுங்களேன்”.

 பொன்னுசாமி அங்கு வருகிறார்..

பொன்னுசாமி: சார்,  “நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க , அந்த பொண்ணு நம்ம அம்மா மாதிரியே நல்ல குணம், அந்த பையனும் ரொம்ப நல்லவானா தான் இருக்காரு, இரண்டு பேருக்கும் நல்ல பொருத்தம், ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து நடந்துகிறாங்க., அவங்களால் உங்களுக்கு எந்த விதமான தொந்தரவும் வராது, அதுக்கு நான் பொறுப்பு”.

காமாட்சி: சிரித்துக்கொண்டே “நல்லவங்கள தான் கொண்டு வந்து விட்டிருக்கிறேன்னு சொல்ல வர்றீங்க இல்லையா..?”

பொன்னுசாமி: அப்படி இல்லம்மா,   ஒருத்தரை பார்க்கும்போதும்,  ஒரு சிலரோடு பழகும் போதும், அவங்க எப்படி பட்டவங்கன்னு என்று தெரிந்து விடும், அதானல தான் சொன்னேன்.

காமாட்சி: அண்ணே,  “தப்பா எடுத்துக்காதீங்க, உங்க தொழில் எத்தனை பேரை பார்த்திருப்பீங்க, நீங்க சொன்ன அது சரியாக தான் இருக்கும்”

பத்து நாட்கள் கழிந்தது..

ராகவன்: “காமாட்சி கீழே சத்தம் கேட்குது சிங்கப்பூரிலிருந்து வந்துட்டாங்க போல இருக்கு”. 

காமாட்சி: ஆமாங்க , என்று கூறும்போது ஒருவர் மேலே வந்தார். 

பாஸ்கர்: சார், வணக்கம்  நான் தான் கீழ் போர்ஷனுக்கு வந்திருப்பவன் என் பெயர் பாஸ்கர் , என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டேன்.

ராகவன்: வாங்க, இப்படி உட்காருங்க.. காமாட்சி கீழ் போர்ஷனுக்கு வந்த தம்பி வந்திருக்காறரு,  வந்து பாரு. 

காமாட்சி : வாங்க தம்பி, என்ன சாப்பிடுறீங்க…             காபி, டீ  ஏதாவது..

பாஸ்கர்: இல்லிங்க எதுவும் வேண்டாம். ஒரு நாளைக்கு இரண்டு தடவைதான் காபி சாப்பிடுவேன். காலைல ஒன்னு நானே போட்டு சாப்பிட்டேன். இதோடு சாயங்காலம் ஆபிஸ்லிருந்து வீட்டிற்கு வந்த பிறகு , என் மனைவியின் கையால் தான் இன்னொரு காபி. . இது என் மனைவியின் கட்டளை . தண்ணி மட்டும் கொடுங்கள் போதும் என்றேன்.

காமாட்சி: உங்க மனைவி வரலையா..?

பாஸ்கர்:  நேற்று  நாங்கள் வந்து  தூங்குவதற்கு மணி 12 ஆகி விட்டது. தூங்கி கொண்டிருக்கிறாள்.

இன்னும் 2 மணி நேரம் கழித்து தான் எழுந்திருப்பாள்.  இரண்டு பேருக்கும் ஒரே ஆபீஸ்,  10 மணிக்கு தான் போவோம். இப்ப மணி 7.00 தான் ஆகிறது. பாவம் தூங்கட்டும்,  என்று அவளை எழுப்பாமல் நான் மட்டும் வந்தேன்.

ராகவன் : வீடு செளகரியமாக இருக்கா..?

பாஸ்கர்: “வீடு நல்லா இருக்கு, உங்களைப் பற்றி பெரியவர் பொன்னுசாமி  கூறியதை கேட்டதும்,  உங்களைப் பார்க்க வேண்டும் என்று இருந்தேன், அதனால் தான் காலையில் எழுந்ததும் உடனே வந்தேன். வர்றேங்க,  அவள் எழுந்து கொள்வதற்குள் டிபன் ரெடி பண்ணனும். சாயங்காலம் ஆபீஸ்லிருந்து வரும் போது அவளையும் அழைத்து வருகிறேன்.

ராகவன்: “காமாட்சி பார்த்தியா..? இந்த பையனை, இந்த காலத்தில் இப்படி ஒரு பையனா..? ரொம்ப நல்ல பையனா இருக்கானே..!”

காமாட்சி: ஆமாங்க, “பொன்னுசாமி அண்ணன் சொன்ன மாதிரியே பையன் தங்கமா இருக்கான், இந்த பையனை கல்யாணம் பண்ணிகிட்டவ கொடுத்து வச்சவ”…

அன்று மாலை..

பாஸ்கர்: அம்மா..,   என்ன யாரையும் காணோம்.. சார்.. , இதோ வரேம்பா..

ராகவன்: வாங்க பாஸ்கர், வாங்க உட்காருங்க., காபி சாப்பிட்டிங்களா..? இல்ல சார், இன்னிக்கு சாயங்காலம் அம்மா கையால  தான் காபி சாப்பிடணும்னு  என் மனைவி கிட்ட சொல்லிட்டேன், அவளும் சரின்னு சொல்லிட்டா.. கீழே பூ வாங்க போயிருக்கா, இப்ப வந்திடுவா .. காமாட்சி ஒரு மூணு காபி போட்டு கொண்டு வா..

ரோஜா: வணக்கம் சார்… என்று கூற, 

ராகவன் : திரும்பி பார்த்து நீயா..? என்று கேட்க

காமாட்சி: தம்பி காபி எடுத்துக்கோங்க..

பாஸ்கர்: சார் உங்களுக்கு ரோஜாவை தெரியுமா?

காமாட்சி: என்ன ரோஜாவா…?

ரோஜா: அப்பா.. என்னை மன்னிச்சிடுங்க.

காமாட்சி: ஏங்க..!?

ராகவன்: இந்த பையனை முதல்லே நம்ம வீட்டுக்கு அழைத்து வந்து காட்டியிருக்க லாமே.. ரோஜா..! நாங்க ஏன் வேண்டாம்னு சொல்ல போறோம்..? 

பாஸ்கர்: நீங்க தான் ரோஜாவின் அப்பா, அம்மாவா..? 

காமாட்சி: ஆமாம் தம்பி, “ஒரு நாள் உங்களைப் பத்தி எதுவுமே சொல்லாம நான்  ஒருத்தரை லவ் பண்றேன்னு, அவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னாலே தவிர வேறு எதையும் சொல்லவில்லை”.  அவர் யாரு? பேர் என்ன ?எங்கே வேலை பார்க்கிறார்ன்னு கேட்டோம்” . “நீங்க சரின்னு சொன்னா தான்,  உங்களைப் பத்தி சொல்வேன்னு சொன்னாள்”. “உங்களைப் பத்தி எதுவுமே தெரியாமல், நாங்க எப்படி தம்பி உடனே சரின்னு சொல்ல முடியும்?”,  நீங்களே சொல்லுங்க…  அவரைப் பற்றி எதுவும் தெரிஞ்சிக்காமல் சரின்னு சொல்ல முடியாது என்று நானும் அவரும்  கூற,  அன்று பெட்டியை தூக்கி கொண்டு கிளம்பியவள்தான், இதோ இப்ப தான் பார்க்கிறோம். அவ வேலை செய்த ஆபீஸ்ல கேட்டு பார்த்தோம்,  வேலை ரிசைன் பண்ணிட்டதா சொன்னாங்க. இவ பிரண்ட்ஸ் வீட்டில் எல்லாம் கேட்டு பார்த்தோம். யாருக்கும் எந்த விவரமும் தெரியல.. எங்க சொந்தகாரங்க  எல்லாம் தப்பா பேச ஆரம்பிச்சிட்டாங்க.. அதனால் நாங்க யார் கிட்டேயும் எதுவும் சொல்லாம, திருச்சியிலிருந்த வீட்டை வித்துட்டு சென்னைக்கு வந்துட்டோம். எங்க போன் நெம்பரையும் மாத்திட்டோம்.

பாஸ்கர்: “சாரி சார்” நானும் தான் தப்பு பண்ணிட்டேன், நானாவது உங்கள  நேர்ல வந்து பார்த்து பேசியிருக்கணும், மன்னிச்சிடுங்க என்று அவர் காலில் விழுந்தேன்.

ராகவன்: எழுந்திருங்க தம்பி, எல்லோர் மேலேயும் தவறு இருக்கிறது.

காமாட்சி: இன்னும் ஏன் அங்கேயே நிற்கிறே..? என் கிட்ட வாடா.. ரோஜா.

ரோஜா:  கண்ணீர் மல்க என் பாஸ்கரையும் அழைத்து கொண்டு ஓடிச் சென்று,  அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன்.

பொன்னுசாமி: என்ன எல்லோரும் ஒரு மாதிரியா இருக்கீங்க..?

ராகவன்:  ” பொன்னுசாமி,  இவ எங்க சொந்த பொண்ணுப்பா..! என்றேன்

காமாட்சி:  அண்ணே,  உண்மையிலேயே நீங்க எங்க பொண்ணை எங்க கிட்ட சேர்த்த “பொண்ணு சாமி”  தான்னே  என்று கூற 

அனைவரும் “ஒரே நேரத்தில் பொன்னுசாமிக்கு நன்றி”  என்று கூறினார்கள் 

ழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அய்யோ பாவம் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

    காதலில் பூத்த மலர் – அகிலா சிவராமன்