in ,

பத்ம வேலைக்கு போகிறாள் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

ழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“அப்பா அடுத்த வாரம் மகளிர் தினத்தை முன்னிட்டு எங்க காலேஜில எல்லாரும் ஒரே மாதிரியான பட்டு புடவை கட்டிக்கொண்டு வரச்சொல்லியிக்காங்க பிரின்சிபால், அதற்காக காலேஜில நாளைக்கு ரூ.5000/- கட்ட சொல்லியிருக்காங்க” என்று பத்மா கூற,

“அது என்ன பட்டுபுடவை..? ஐந்தாயிரம் ரூபாய்க்கு ..? ஒரு நாள் கட்டுவதற்கு இவ்வளவு விலை அதிகம் கொடுத்து வாங்கணுமா..?” என்று பத்மாவின் அம்மா ரேணுகா கேட்டாள்

“நான் உன்னையா கேட்டேன்?” என்று பத்மா, ரேணுகாவைப் பார்த்து கோபமாக கேட்க,

“ரேணு, நீ கொஞ்சம் நேரம் சும்மா இரேன்..! நான் பேசிக்கிறேன் என கோபால் கூறிக்கொண்டே,

“ஏம்மா பத்து, போன வாரம் தானம்மா காலேஜ்ல பேன்சி டிரஸ் காம்படிஷன்னு சொல்லி, ஏதோ ஒரு டிரஸ் எடுக்கணும்னு 3,000/- வாங்கினு போன.. இந்த வாரம் மகளிர் தினத்தை காரணம் காட்டி ஐந்தாயிரம் கேட்கறே..? என் மாத சம்பளமே 20,000/- தான்னு உனக்கு தெரியுமா..? தெரியாதா..? அடுத்த மாதம் பத்தாம் தேதிக்குள் செமஸ்டர் பீஸ், அப்புறமா எக்சாம் பீஸ் ஆக மொத்தம் ரூ.25,000/- காலேஜ்க்கு கட்ட வேணும்னு நேற்று தானே சொன்னே..? நல்ல வேளை உன் தம்பி அரசாங்க கல்லூரியில் படிக்கிறதால நான் தப்பிச்சேன். அவனுக்கு செமஸ்டர் எக்சாம் பீஸ் 6000/- மட்டும் கட்டிணா போதும்”

“அப்ப எதுக்கு என்னை தனியார் கல்லூரியில் சேர்த்து விட்டீங்க..?” என்று பத்மா கேட்க,

“ஏன் உனக்கு தெரியாதா..? நீ பிளஸ் 2ல எடுத்த குறைவான மார்க் தான் காரணம்” அது மட்டுமா..? வட்டிக்கு கடன் வாங்கி, காலேஜில் டொனேஷன் கொடுத்து தானே சேர்த்தோம்..!” என்று ரேணுகா கூற..

பத்மா தன் அம்மாவை முறைக்க.. “முடிஞ்சு போனத பத்தி பேசாதே ரேணு.. பத்மாவுக்கு இதான் கடைசி வருஷம், அரியர்ஸ் இல்லாமல் எல்லா செமஸ்டரிலும் நல்ல மார்க் எடுத்திருக்கா. கேம்பஸ்ல செலக்ட் ஆனா மாசத்துக்கு குறைந்த பட்சம் ஒரு 40,000/- சம்பாதிக்க போறா…! என்ன பத்து..? நான் சொல்றது கரைக்ட் தானே..?” என்று கோபால் கேட்க,

“கரைக்டா சொன்னீங்க கோபால்” என்று பத்மா கூற

கோபத்துடன் “என்னங்க? உங்கள பேர் சொல்லி பேசறா..?” என்று ரேணுகா கேட்க

“பேர் சொல்லி கூப்பிட தானே பேரை வச்சிருக்காங்க” என்று கேஷூவலாக, கோபால் சிரித்துக் கொண்டே கூறினார்.

“நல்ல அப்பா நல்ல பொண்ணு, பொண்ணுக்கு ரொம்ப செல்லம் கொடுக்காதீங்க அது நல்லதுக்கு இல்லை..! அவ்ளோதான் நான் சொல்லுவேன் என்று ரேணுகா கூறினாள்.

“அப்பா part time job பார்த்ததிலே எனக்கு 7000/- வந்தது, நான் அதில செமஸ்டர் பீஸ் கட்டிக்கிறேன், நீங்க அக்காவுக்கு 5000/- கொடுங்க” என்று கூறினான் பத்மாவின் தம்பி ரகு.

“இது தான் என் வளர்ப்பு” என்று ரேணுகா ரகுவை பார்த்து கூற

“ரேணு நீ போய் உன் சமையல் வேலையை பாரேன்..!, காலைல பிரச்சினை பண்ணாதே” என்று கோபால் கூற, “என்னவோ பண்ணுங்க” என்று கூறி விட்டு சமையலறைக்கு சென்றாள் ரேணுகா.

காலேஜ் படிப்பு முடிந்தவுடன், கேம்பஸில் செலக்ட் ஆன பத்மா “முதல் ஆறு மாதம் Probationary period ல் ரூ.25,000/- சம்பளத்திலும், பின்னர் ரூ.45,000/- சம்பளம் கிடைக்கும்”, என்று தன் தந்தையிடம் கூறி விட்டு முதல் நாள் வேலைக்குச் சென்றாள்.

“ரேணு பார்த்தியா…! நான் சொன்ன மாதிரியே என் பொண்ணு சாதிச்சி காட்டிட்டா..!” என்று பெருமையாக கூறினார்.

“சம்பளம் உங்க கைக்கு வரட்டும் அப்ப பேசுங்க” என்றாள்.

மாலை 7.00 மணிக்கு வீட்டிற்கு வந்தாள் பத்மா. “ஏம்மா இவ்வளவு நேரம்?” என்று கோபால் கேட்க

பஸ்ஸே வரலப்பா.. பஸ் ஸ்டேண்ட்ல நின்னு, பஸ்ல வேற நின்னுக்கிட்டே வந்தேனா… காலெல்லாம் வலிக்குதுப்பா.. “என்று பத்மா கூறி விட்டு அப்பா எனக்கு ஒரு புது two wheeler வண்டி வாங்கிக்கவா..? நானே EMI கட்டிக்கிறேன், என்றாள்.

“அப்படி போடு அறிவாள..!! வேலைக்கு போன முதல் நாளே இப்படியா..? உங்கப்பா 25 வருஷமா பஸ்ஸல தான் ஆபீஸ்க்கு போராரு, திரும்பி வராரு, உனக்கு முதல் நாளே வண்டி வேணுமா..? என்று ரேணுகா கேட்க, ‘அம்மாவை முறைத்தபடியே கோபத்துடன் அவள் அறைக்கு செல்கிறாள் பத்மா’.

“ஏங்க, நீங்க வண்டியெல்லாம் வாங்கி தராதீங்க.. இன்னிக்கு two wheeler கேட்பா.. அடுத்த மாசம் கார் கேட்பா…! இவளுக்கு படிப்புக்கு வாங்கின கடனே இன்னும் அடையல.. அதுக்குள்ள இன்னொரு கடனா..?” என்று ரேணுகா கூற

இதை உள்ளேயிருந்து கேட்டு கொண்டிருந்த பத்மா, அறையிலிருந்து வெளியே வந்து, அப்படின்னா.. நான் கால் டாக்சில போரேன், என்று கூற, “சரிம்மா அப்படியே செய்” என்று கோபால் கூற, “ஆமாம்..கால் டாக்சியில ஆபீஸ்க்கு போய், வர என்ன செலவாகும்..?” என்று ரேணுகா கேட்க ,

“என்ன, ஒரு நாளைக்கு சுமார் 600 ஆகும், வாரத்துக்கு 3000/- மாசத்துக்கு ஒரு 15,000/- ரூபாய் ஆகும் thats all என்று பத்மா கூற,

சம்பளம் 25000/- கால் டாக்சி செலவு 15000/- “மீதம் 10,000/- . உனக்கு டிரஸ் எடுக்க, கேண்டீனில் சாப்பிட, பிரண்ட்ஸ் கூட வெளியே shopping போக இதுக்கெல்லாம் பத்தாயிரம் போதுமா என்று ரேணுகா கிண்டலாக கேட்க “போதாது தான்..!, நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்”, என்று பத்மா கூற

” பாத்தீங்களா…! உங்க பொண்ணு சம்பளத்தை நம்பி கடன் வாங்கி யிருக்கிங்களே.. அந்த கடனை எப்படி அடைப்பீங்க..? என்றாள் ரேணுகா.

“ஏம்மா two wheeler வாங்கினா EMI எவ்வளவு கட்ட வேண்டி வரும்? என்று கோபால் கேட்க , ரேணுகா, தன் பார்வையால் கோபாலை முறைக்க,

“என்ன.. நல்ல மாடல் வண்டியா பார்த்து வாங்கினா..ஒரு 5000/- ரூபாய் கட்ட வேண்டி வரும்..? என்று பத்மா கூற , “அப்படின்னா நல்ல மாடல் two wheeler வாங்கிக்கோம்மா..! “ஆமாம் வண்டியை ஓட்ட லைசென்ஸ் வேண்டுமே”..! என்று கோபால் கேட்க,

“அப்பா… நான் லைசென்ஸ் எடுத்து 3 வருஷம் ஆகுது..!, உங்ககிட்ட கேட்டா..? அம்மா குறுக்கால வந்து “இப்ப எதுக்கு லைசென்ஸ்ன்னு?” கேட்பாங்க, “அதனால உங்ககிட்ட சொல்லாம என் பிரண்ட்ஸ் எடுக்கும் போது நானும் எடுத்திட்டேன்” என்று பத்மா சொல்ல, கோபால் சிரித்துக்கொண்டே “சரிம்மா” என்றார்.

புது Two wheeler வாங்கி பத்து நாட்கள் தான் ஆகியது. ஒரு நாள் ஆபீஸ்க்கு போகும் வழியில், ஒரு சிக்னலில் இவள் வண்டியை நிறுத்த, பின்னால் வேகமாக கார் இவள் வண்டியை இடிக்க, இவள் கீழே விழுந்து அடிபட்டு, கையில் கட்டுடன், ஆபீஸ்க்கு லீவு போட்டுட்டு, இவள் வண்டியை இடித்த நபருடன் காரில் வீட்டிற்கு வந்தாள்.

அப்பா வீட்டில் இல்லை. ‘அம்மா இவர்கள் இருவரும் சேர்ந்து வருவதை சந்தேகமாக பார்க்க, ‘பத்மா அவரைப் பார்த்து’, அம்மா இவர் பெயர் ராஜா.. என்று கூறினாள், அதற்குள் நடந்ததை ராஜாவே கூறினார்.

“அம்மா மன்னிச்சிடுங்கோ, தப்பு என் மேல தான்”.ஆபீஸ் போற அவசரத்தில் சிக்னலை பார்க்கல, அதான் தெரியாம என் கார் இவங்க வண்டியில் மோதிடுச்சி.. என்று பயத்துடன் கூறினார். ரேணுகா வாயே திறக்க வில்லை.

பின்னர் பத்மாவை முறைத்தபடியே உன் வண்டி எங்கே..? என்று கேட்டாள். மெக்கானிக் ஷெட்டில விட்டிருக்கிறேன். சரியானதும் எங்க ஆபீஸ் பையன் கொண்டு வந்து தருவான் என்று மீண்டும் ராஜாவே பதில் கூறினான்.

“உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா இவங்க கை சரியாகும் வரை பத்மாவை ஆபீஸ்க்கு நானே என் காரில் அழைத்துச் சென்று பின்னர் மாலை வீட்டிற்கு கொண்டு வந்து விடுகிறேன்” என்றான் ராஜா.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்..! நீங்க கிளம்புங்க” என்றாள் ரேணுகா. ராஜா, சாரி பத்மா என்று கூறி விட்டு கிளம்ப, தன் வீட்டில் கார் நிற்பதை பார்த்துக் கொண்டே கோபால் வந்தார்.

தன் வீட்டிலிருந்து வெளியே வரும் ராஜாவை பார்த்து நீங்க.. யாரு..? என்று கோபால் கேட்க , இதை பார்த்த பத்மா வெளியே வந்து நடந்ததை கூறினாள்.

அப்படியா..! சரி, வாங்க ஒரு காபி சாப்பிட்டு விட்டு போகலாம், என்று கோபால் ராஜாவை அழைக்க, ராஜா தயக்கத்துடன் மீண்டும் உள்ளே வர, பத்மாவின் முகத்தில் ஒரு புன்னகை வந்தததை ரேணுகா கவனித்தாள்

மீண்டும் சாரி, என்று ராஜா கூற, its ok என்று கோபால் கூற , எத்தனை முறை சாரி சொல்லுவீங்க..? என்று பத்மா ராஜாவை பார்த்து கேட்க, கோபால் ரேணுகாவை பார்க்க, ரேணுகா பத்மாவை முறைத்தாள்.

அடுத்த பத்து நாளில் ராஜாவும், பத்மாவும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டு கழுத்தில் கல்யாண மாலையுடன் வீட்டிற்கு வர, அவள் அம்மா கதவை திறக்க, இவர்களைப் பார்த்து கோபமாக என்ன காரியம் பண்ணியிருக்கே..? உள்ளே வராதே.. என்று கூறி கதவை தாளிட்டு அழுதாள், ரேணுகா இருவரும் திரும்பி போக , அங்கே கோபால் நின்றிருந்தார் மௌனமாக…..

ழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தீபாவளி (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

    தீபாவளி செலவுக்கு (பகுதி 1) – வேலூர். D. சீனிவாசன்