எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சரத் : அப்பா, “தீபாவளிக்கு நாம எப்ப பட்டாஸ், புது டிரஸ் எல்லாம் வாங்கப் போறேம் ?”
கோபி : சரத், இன்னும் ஒரு வாரம் இருக்கல்லே.. அதுக்குள்ள வாங்கிடலாம் சரியா..?
சரத் : போன வாரம் கேட்டதுக்கு இந்த வாரம் வாங்கிடலாம்னு சொன்னீங்க…?
சரத்: அம்மா, நான் உங்க கிட்ட சொல்ல மறந்துவிட்டேன் , இந்த தடவை நாம மூணு பேரும் ஒரே கலர்ல தீபாவளி டிரஸ் எடுத்துக்கலாம் சரியா..? என் பிரண்ட்ஸ் எல்லாரும் அவங்க வீட்டில அப்படிதான் இந்த தடவை எடுத்துக்க போறதாக எங்க மேம் கிட்ட சொன்னாங்க.
.சரஸ்வதி: ஸ்கூலுக்கு டைம் ஆகுது, ஆட்டோ கூட வந்துடுச்சு, கிளம்பு சரத் சாயங்காலம் வந்து பேசலாம்
சரஸ்வதி: என்னங்க உங்களுக்கு போனஸ் என்னிக்கு வரும் ?
கோபி: “போனசா..? இந்த மாதம் சம்பளமே வருமான்னு தெரியல”. இந்த இரண்டு மாசமா எங்க கம்பெனி யிலிருந்து ஒரு ஏற்றுமதி கூட ஆகல.. வரி அதிகமாக போட்டதால அமெரிக்காவுக்கு போக வேண்டிய நாங்க தயார் செய்த துணிகள் அப்படியே இருக்கு..
முதலாளி ரொம்ப மன வருத்தத்தில இருக்காரு.. அவர்கிட்ட போய் போனஸ் எப்படி..? கேட்கறது”.
சரஸ்வதி: அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? அதுக்கு பண்டிகையும் நாளும், வராம போகுமா? எங்கேயாவது கடனாவது வாங்கி நம்ம பையனக்கு மட்டுமாவது டிரஸ் எடுக்க பாருங்கள். அவன் ஒவ்வொரு நாளும் புது புதுசா கேட்கிறா
கோபி: சரி..எங்க போய் கடன் கேட்கிறது?முயற்சி பண்றேன்.
கோபியின் முதலாளி: அன்று மாலை தொழிலாளர்கள் அனைவரையும் அழைத்து அந்த மாத சம்பளத்தையும், தீபாவளி போனசாக ஒரு மாத சம்பளத் தொகையையும் சேர்த்து கொடுத்தார்.
கோபி: அய்யா இரண்டு மாசமா நம்ம பேக்டரியிலிருந்து ஏற்றுமதியே ஆகல..
அப்படி இருக்கும் போது தீபாவளி போனஸ் எதுக்கு…?
முதலாளி: கோபி.. எனக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு..! அதுக்காக பண்டிகை நாளும் அதுவுமா நீங்களும், உங்க குடும்பமும் கஷ்டப்படக் கூடாதுன்னு என் மனைவி தான் உங்களுக்கெல்லாம் இந்த மாத சம்பளத்துடன் தீபாவளி போனஸ் கொடுக்க சொன்னாங்க ..
” ஒரு பெண்ணின் மனதை ஒரு பெண் தான் அறிவாள்” என்பது சரியாக தான் உள்ளது.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings