எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
என்னங்க, “தீபாவளிக்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு”. “பசங்க டெய்லி பட்டாஸ் வாங்கணும், புது டிரஸ் வேணும், எப்போ வாங்குவோம்னணு கேட்டுகிட்டே இருக்காங்க” அவங்க பிரண்ட்ஸ் வீட்டில் எல்லோரும் வாங்கிட்டாங்களாம்…! தினமும் காலைல, எழுந்தவுடனேயே… இதே தான் அவர்களுடைய கேள்வியே ….?உங்களுக்கு என்ன..? காலையில் கடைக்கு போயிடுவீங்க..!
“நான் தான் அவங்களை சமாளிக்க வேண்டி இருக்குது… !” என்றாள் காஞ்சனா, என் மனைவி.
“எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன்”. “இவர்களுக்கு மட்டுமே என்றால் கூட அவர்கள் கேட்கும் டிரஸ் என்ன விலையானாலும்…, அவர்களுக்கு கவலை யில்லை, கேட்பதை வாங்கி தந்தால் தான் திருப்தி அடைவார்கள், விலையை பற்றிய கவலை நமக்கு தான். “தோராயமாக பார்த்தால் கூட பசங்களுக்கும், என் மனைவிக்கும் சேர்த்து dress க்கு ஒரு 5000/- பட்டாஸ் வகையில் சுமார் 2000/- மேற்கொண்டு +1000/- என குறைந்தபட்சம் ரூ.8000/- தேவைப்படும்”. “எனக்கு புது டிரஸ் தேவையில்லை, என்னை பற்றி யாரும் கவலைப்படவும் மாட்டார்கள்” .
கடை வாடகையே ஒரு வாரத்திற்கு முன்பு 20ந் தேதி தான்கொடுத்தேன்”வழக்கமாக 10 ம் தேதிக்குள் தந்து விடுவேன். போன மாதம் வியாபாரம் சரியில்லை, பண்டிகை மாதம் என்றாலே அந்த மாதத்திற்கு முன்பே என் கடையின் வியாபாரம் மிகவும் டல்லடிக்கும். தீபாவளி காரணமாக இந்த மாதமும் என் வியாபாரம் சரியில்லை. அதனால் இந்த முறை வாடகை தருவதற்க்கு 10 நாட்கள் தள்ளி போய் விட்டது. கடை உரிமையாளர் மிகவும் நல்ல மனிதர். இரண்டு மாதம் சேர்த்து கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். வாடகை லேட்டாக தந்த போது, அடுத்த மாதம் சேர்த்து கொடுப்பா, தீபாவளி செலவுக்கு வைத்துக் கொள் என்றார் , இது வரை அவர் என் மீது வைத்துள்ள் மரியாதையின் காரணமாக. நான் தான் பரவயில்லை, தீபாவளி செலவுக்கு பணம் இருக்கு என்று பொய் சொன்னேன். மனுஷனுக்கு மரியாதை முக்கியம் இல்லையா..?
“நான் என்ன செய்வது? இப்போதெல்லாம் வியாபாரம் சரியாகவே நடப்பதில்லை”, “மாசத்துல பத்து நாட்கள் வியாபாரம் நடப்பதே அபூர்வமாக உள்ளது”. அதில் வரும் வருமானம், கடை வாடகை, கரண்ட் பில் , வீட்டு செலவுகள் போன்றவைகளுக்கே சரியாக இருக்கும் . சில சமயங்களில் கைமாத்தாக வாங்கி தான் இந்த மாதிரியான செலவுகளை சமாளிக்க வேண்டி உள்ளது.
“அதுவும் கடைக்கு வர்றவங்க எல்லாம் பிராண்டட் ஷூ இல்லையா..?, பிராண்டட் செப்பல்ஸ் இல்லையா..?, புது மாடல்கள் இல்லையா..?, வேற டிசைன்ஸ் இல்லையா..?, என பல்வேறு கேள்விகளை வேறு கேட்கிறார்கள்” .
“ஏதோ ஒரு சிலர் கடைக்கு வந்து விட்டோமோ, எதுவும் வாங்காமல் போக கூடாது என்ற நல்ல எண்ணத்தில், வாங்கி செல்கிறார்கள்”. “அதிலும் ஒரு சிலர் விலையை பார்த்து சொல்லுங்க… என்று தள்ளுபடி வேறு கேட்கிறார்கள்”.
“பிராண்டட் வேண்டும் என்பவர்கள் அந்த கடைகளில் எந்த விதமான தள்ளுபடியும் கேட்க மாட்டார்கள்”.
“தள்ளுபடி எல்லாம் நம்மை போன்ற கடைகளில் தான் கேட்பாங்க”. என்ன செய்வது? “இரண்டா எடுத்துக்கோங்க தள்ளுபடி தர்றேன்..! என்று முடிந்த வரை அன்றைய வருமானத்திற்காக வியாபாரத்தில் சில அட்ஜஸ்மெண்ட் செய்ய வேண்டியது வரும்”.
“பிராண்டட் அயிட்டம் வாங்கி விற்பனை செய்தால் இலாபம் மிகவும் குறைவு, பிராண்டட் அயிட்டம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாறி கொண்டேஇருக்கும். தவிர அதற்கு மூலதனம் அதிகம் தேவை . கடையை நன்றாக அலங்காரம் செய்ய வேண்டும், குளிர் சாதன வசதி செய்ய வேண்டும், வேலைக்கு குறைந்தது 4 ஆட்களையாவது அமர்த்த வேண்டும், அவர்களுக்கு மாதம் சம்பளம், தீபாவளிக்கு போனஸ் , அவர்கள் கேட்கும் போதெல்லாம் அட்வான்ஸ் வேறு தர வேண்டும். இல்லையென்றால் வேறு கடைகளுக்கு வேலைக்கு போய் விடுவார்கள். குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் கஷ்டம்”. இவைகள் போக கடை வாடகை, கரண்ட் பில், என ஏகப்பட்ட செலவுகள். இவைகள் போக நமக்கு மிச்சம் எதுவும் மிஞ்சாது”.
“இதையெல்லாம் நான் வேலை பார்த்த கடையில் கிடைத்த அனுபவங்கள். எனவே தான் சொந்தமாக கடை வைக்க வாய்ப்பு கிடைத்த போது, லோக்கல் தயாரிப்பாளர்கள், மொத்த வியாபாரிகளிடம் வாங்கி விற்பனை செய்து வந்தேன். வேலைக்கு யாரையும் வைக்காமல், ஆரம்பத்தில் நான் ஒருவனே கவனித்து கொண்டேன். ஆரம்பத்தில் வியாபாரம் நன்றாகவே நடந்தது. எனவே கடையில் ஒரேயொரு நபரை மட்டும் வேலைக்கு வைத்து வியாபாரம் செய்து வந்தேன். எல்லா செலவுகளும் போக இலாபமும் நன்றாகவே கிடைத்தது.
“முன்பெல்லாம் முப்பது நாளூம் வியாபாரம் நல்லா நடக்கும், தினமும் குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகும், இலாபம் சுமார் இரண்டாயிரம் வரை கிடைக்கும்.
“எப்போ..? இந்த ஆன்லைன் வியாபாரம் வர ஆரம்பித்ததோ…, அப்போதிருந்தே என் வியாபாரம் மட்டுமின்றி, அனைத்து விதமான 90% வியாபாரிகளின், வியாபாரங்களும், தொழில்களும் அவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிப்புகுள்ளாக்கியது”.
” தவிர சீனா நாட்டு பொருட்களின் இறக்குமதியால், நம் நாட்டு சிறு உற்பத்தியாளர்களையும், அவர்களிடம் பணி பரிந்து வந்த வேலையாட்கள், கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வந்த சிறு வியாபாரிகள், போன்றவர்களின் குடும்பங்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்” .
“இதையெல்லாம் நான் வீட்டில் கூற முடியாதே….!”
அதானால்,
“சரி, சரி , இரண்டு நாட்கள் பார்க்கிறேன், இல்லையென்றால் யாரிடமாவது கடன் கேட்டு பார்க்கிறேன்” என்று என் மனைவியிடம் கூறி விட்டு கடைக்கு வந்தேன்”.
கடையை திறந்தேன். “அப்பா கணேசா.!என்னைப் போன்ற சிறு வியாபரிகள் பக்கம் கொஞ்சம் கண் திறந்து பார்த்து, கருணை காட்டுப்பா… என்று கூறிக்கொண்டே” ஊதுவத்தி ஏற்றினேன்.
பக்கத்து கடை ரகுமான் பாய் வந்தார். என்ன குமாரு? வேண்டுதல் பலமாக இருக்கு…? பக்கத்து கடையில் இருக்கிற எனக்கு கேட்குது..! என்றார்.
அவர் பக்கத்தில் ரெடிமேட் , ஜவுளி கடை வைத்திருப்பவர். மூன்று இடங்களில் கிளைகள் வைத்துள்ளார். அவருக்கு ஒரு கடையில்சுமாராகவும், மற்ற இரண்டு கடைகளில் ஓரளவுக்கு நன்றாகவும் வியாபாரம் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி வியாபாரம் நடப்பதாக கூறுவார். அவரும் நான் கூறுவதை தான் கூறுவார். ஆன்லைன் வியாபாரத்தால் தன் வியாபாரமும் பாதிக்கப்பட்டிருப்பதாக அடிக்கடி கூறுவார்.
“இல்ல பாய், பசங்களுக்கு தீபாவளிக்கு டிரஸ் எடுக்கணும், பட்டாஸ் வாங்கணும் , வியாபாரம் சரியில்லை, கையில் பணமில்லை, பசங்க ரொம்ப தொந்தரவு பண்றாங்க.”. “அதான் கடவுள் கிட்ட நம்ம மாதிரி சிறு வியாபாரிகள் பக்கம் கொஞ்சம் கருணை காட்ட சொல்லி கேட்டு கொண்டிருந்தேன் என்றேன்”.
“பரவாயில்லை குமாரு, நீ உனக்கு மட்டும் வேண்டிக்காம… நம்மை போன்ற சிறு வியாபாரிகள் அனைவர்க்கும் சேர்த்து வேண்டி கொண்ட பாரூ, நீ ரொம்ப நல்ல மனுஷன்யா..! என்று சொல்லி, “குமாரு எவ்வளவு வேண்டும்னு கேட்டார் ?” இல்ல பாய், இன்னும் இரண்டு நாள் பார்க்கிறேன், இல்லன்னா கேட்கிறேன் என்றேன்.
“அட என் கிட்ட வேணும்னா உன் பசங்களுக்கு டிரஸ் எடுத்துக்கோப்பா, இன்னொரு கடையில புடவை, வேஷ்டி, ஷர்ட்டு இருக்குது எடுத்துக்கோ, 3 கடையில எந்த கடையில உனக்கும், உன் பசங்களுக்கும் டிசைன் புடிக்குதோ அங்கே எடுத்துக்கோ, எல்லாம் என் கடைதான், உனக்கு தான் தெரியுமே.. பணம் வரும் போது கொடு. அவசரம் இல்ல. மத்த செலவுக்கு எவ்வளவு வேணும்..? ஒரு பத்தாயிரம் தரட்டுமா? என்றார் பாய்”.
பத்தாயிரமா..? நீங்க வேற பாய் , காசு அதிகம் இருந்தா..? செலவு அதிகம் பண்ண சொல்லும் பாய். நீங்க இத சொன்னதே அதிகம் . இரண்டு நாள் பாக்கறேன், பணம் வந்ததுன்னா, உங்க கடையிலேயே வந்து எடுக்கிறேன் என்றேன்.
“என்னா குமாரு..? இப்ப தானே உங்க கடவுள் கிட்டவேண்டிக்கினே…! உனக்கு மட்டுமா வேண்டிக்கினே..? எல்லா சிறு வியாபாரிகளுக்கும் கருணை காட்டுன்னு தானே…?”
என் பேரு என்னா? ரகுமான். முதல் இரண்டு எழுத்து உங்க கடவுள் பேரு தானே..! ரகு என்பது ராமரின் இன்னொரு பெயரான ரகுராமன் தானே…? ஏன்? நான் கொடுக்கிறதா நினைக்கிறே..? உங்க கடவுள் ராமர் கொடுக்கிறதா நினைச்சிக்கோ.. அவர் வந்து கொடுத்தா வாங்கிக்க மாட்டியா..? என்றார் ரகுமான் பாய்.
“நமக்கு, கடவுள் வேண்டுமானால் வெவ்வேறாக இருக்கலாம் குமாரு.. ஆனா, நாம எல்லோரும் மனிதர்கள், அத மட்டும் மறக்க கூடாது”
ஒருத்தருக்கு ஒரு கஷ்டம்னா தெரிஞ்சா, முதல்ல ஓடிப் போய், நம்மால முடிந்த உதவி செய்யணும். அதுக்குதான் ஆண்டவன் நமக்கு ஆறாவது அறிவை தந்திருக்கார்” என்றார் ரகுமான் பாய்.
“நான் அப்படி நினைக்கல…பாய்” கடனுக்கு வாங்க கூடான்னு நினைச்சு தான் இரண்டு நாள் பார்த்துவிட்டு வாங்கிக்கிறேன்னு சொன்னேன் என்றேன் “
யார் கடன் வாங்கல..? அவசர அவசியத்திற்கு கடன் வாங்குவது தப்பேயில்லை..! நான் கூட கடைக்கு தேவையான சரக்குகளை பாதி கடனுக்கு தான் வாங்கியிருக்கேன். சரக்கு வித்து போனா கடனை கொடுத்துட்டு திருப்பியும் சரக்கை வாங்கி வர போறேன். வியாபரதில் இதெல்லாம் சகஜம் குமாரு.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings