எந்தையும் தாயும் மகிழ்ந்து வாழ்ந்ததிந்த அன்னை நாடு..
என்னையும் உன்னையும் பெற்றெடுத்து ம்கிழ்ந்ததிந்த பொன்னாடு
எனக்கும் உனக்கும் மூத்த குடியை வாழ வைத்த பிறை நாடு…
என்றும் இந்த புவியில் வளர்ந்து செழித்த வளம் கொழித்த நாடு…
உலகின் மூத்த மொழியாம் தமிழன்னையின் பிறப்பிடமே..
உலகிற்கே கலாச்சாரம் சொல்லித்தந்த சிகரத்தின் அச்சிடமே..
உல்லாச நாகரீகத்தின் அடிப்படையாம்
ஆணிவேரின் அடிவாரமே…
உலக மக்களின் கோடான கோடி பேரின்
இதயங்களில் வாழ்பவளே….
மகிழ்ச்சியின் உச்சம் தொட்ட சிகரத்தின் தமிழகமே..
வாழ்வியலை உலகிற்கே கற்றுத்தந்த உயர்ந்த மகிழகமே…
அலைகளின் ஆடலிலும் நிலையாக நின்ற சித்திர லெமூரியமே…
உன்னைப் பாடுவதில் உள்ளம் நெகிழ்கிறேன் விழியகமே….
தமிழ் நாடே… தந்தை தாயின் அன்பின் பிறப்பிடமே…
மூவேந்தர் ஆண்ட வீரமிகு முக்குலத்தோரின் வழித்தடமே…
நாகரீகரீகத்தை உலகிற்கு பறை சாற்றிய வான் வழிசித்திரமே…
நானிலம் போற்றும் உலக வரலாற்றின் வரிசையின் முதலிடமே…
உலகின் உயர்ந்த அன்னைத் தமிழினை சுமந்த நாடு
உன்மத்தர்களை ஒழித்து உன்னதர்களை வாழ்வாங்கு வாழவைத்த
உன்னதத்தில் உயர்ந்து விளங்கும் அன்னை நாடு…
உன்னோடு உறவாட அழகுத் தமிழ் சுமந்த மணம் கமழ்ந்த நாடு…
தரணி போற்றும் தங்கத் தமிழ் நாடு…
தவமிருந்ததால் நம்மை பெற்றெடுத்த நாடு
தனக்கென வாழாமல் பிறர் நலமே சிறப்பென..
தானைத் தலைவர்களை அள்ளி வழங்கிய நாடு…
நம் தாய்த் தமிழ் நாடு……
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings