எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இதுதான்…எங்க ஊரின் அடையாளம் ‘எத்தனை ஆண்டுகள் ஆனதோ?!’. இவ்வளவு கிளைகளும்…விழுதுகளும் பரந்து விரிந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு…
நிழலில் இளைப்பாற தூங்கும் மூத்தகுடி மக்கள் ஒருபுறம்
பொழுது போக வேண்டுமே… ‘போடு தாயம்’ என்று இளைஞர்கள் கூட்டம் மறுபுறம்
பள்ளிச் சிறுவர்கள் குரங்குகளாய்த் தொங்குகின்றனர் விழுதுகளில்…
பனையோலை வேயப்பட்ட கடையில் ஆவி பறக்க டீ ..
பக்கத்திலேயே பணியாரக்கடை பாட்டியின் குழிப்பணியாரம், முறுக்கு, அதிரசம், போண்டா, வடை, பஜ்ஜி…
நகரத்தில் நடுநிசி நேரம் பேருந்து ஏறினால் விடியலில் வந்திறங்குமிடம் ‘ஆலமரத்து டீ கடை.’.
நாட்கள் நகர்ந்தன… கிராமங்கள் சுருங்க… நகரங்கள் பெருகின…போய்வர போக்குவரத்து வசதிக்கு
ஒத்தையடிப் பாதையெல்லாம் நான்கு வழிச்சாலைகள் ஆகினவாம்…!
தினமும் அம்மாகிட்ட பேசும்போது…சொல்ல மறந்தேயில்லை அம்மா ..
பழைய நினைகளுடன்…
என் கிராமத்திற்குச் செல்கிறேன்
இரவு நேரப் பேருந்து …விடியக்காலை போகுமென்ற கணக்கு தவறானது…
சற்று கண்ணயர்ந்து உறங்க..சத்தமொன்று எழுப்பியது
“ஆலமரத்து டீ கடை…வண்டி பத்துநிமிஷம் நிக்கும்…டீ காப்பி சாப்பிடறவங்க வாங்க “
விழித்தெழுந்து பார்க்கிறேன்…
அடுக்குமாடி கட்டிடத்தில் அலங்கார விளக்கொளியில்..
பெயர் பலகையில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது
“ஆலமரத்து டீ கடை”
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings