இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நாட்கள் வாரங்களாக கடந்தது…
“மணி” என்று தன் அறையில் அவள் அருகில் மெத்தையில் படுத்து இருந்த தன் கணவனை யாமினி அழைக்க
“ம்… சொல்லு மா” என்றவன் அவன் கையை தலைக்கு கீழே முட்டுக்கொடுத்து அவள் பேச வருவதை கேக்க காத்து இருந்தான்.
“என் studies நான் continue பண்றது எப்படி மணி? சென்னையில ஹாஸ்டல்ல தங்கி பண்ணட்டுமா? இல்ல சென்னையில அப்பா வீட்டுல தங்கி continue பண்ணட்டுமா? இது விஷயமா நானும் உங்ககிட்ட பேசணும்னு பார்த்தா நேரமே கிடைக்கல, நீங்க மாமாகிட்ட பேசிட்டு எனக்கு பதில் சொல்லுங்க, இல்லைனா நானே மாமாகிட்ட கேக்கவா?” என்று யாமினி கேட்டதும் தன் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவன்.
“என்ன சொல்லுற?… Studies continue பண்ண போறியா?” என்று கேக்க,
“ஆமா மணி.. one month தான் நான் லீவு போட்டு இருக்கேன்.Next வீக் காலேஜ் போனா தான் சரியா இருக்கும்” என்று தன் மனைவி சொன்னதை கேட்டு ஜோதிமணிக்கு என்ன சொல்வது என்று புரியாமல் தவித்து இருந்த சமயம்.
“அண்ணா” என்று இரட்டையர்களில் ஒருவரான ஜோதிமணியின் தம்பி அவனை அழைக்க.
“இதோ வரேன் டா” என்ற குரலுடன் ஜோதிமணி அறையில் இருந்து வெளியே வந்தவனை தொடர்ந்து யாமினியும் அறையில் இருந்து வெளியே வர, வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக ஹாலில் அமர்ந்து இருந்தர்கள்.
“டேய் சின்னவனே…உன் யாமினி அண்ணிக்கு சாக்லேட் கொடு டா” என்று தன் மாமியார் சொன்னதும்.
“என்ன குட் நியூஸ்?” என்று கேட்டுக்கொண்டே யாமினி தன் கொழுந்தன் நீட்டிய இனிப்பை வாங்கிக்கொள்ள.
“அண்ணி நான் 12th ல 1200க்கு 1000 மார்க் வாங்கி all pass அண்ணி.. அதான் ஸ்வீட் தரேன்” என்ற கொழுந்தனை பார்த்து சிரித்துக்கொண்டே
“சின்ன பொண்ணு, நீ என்ன மார்க்?” என்று தன் சின்ன நாத்தனாரை யாமினி கேக்க…
“நான் 1200க்கு 1180அண்ணி” என்ற பெண்ணின் முகம் பொலிவு இல்லாமல் இருந்ததை பார்த்து,
“வாழ்த்துகள் மா. ஏன் அதுக்கு சோகமா இருக்க, நல்ல மார்க் தானே எடுத்து இருக்கே, ஆமா எந்த காலேஜ் joint பண்ண போறீங்க?” என்று யாமினி எதார்த்தமாக கேட்டாள்.
“அவ எங்க இனி காலேஜ் எல்லாம் வர போறா. நான் தான் காலேஜ் போவேன்” என்று சொன்ன தன் கொழுந்தனை பார்த்து.
“ஏன்…. சின்ன பொண்ணு மேற்கொண்டு படிக்கலையா?” என்று யாமினி தன் சின்ன நாத்தனாரை கேக்க,
“இங்க தான் பொம்பள பிள்ளைங்கள 12thக்கு மேல படிக்க வைக்க மாட்டாங்களே”..என்று தன் நாத்தனார் சொன்னதும்,
“ஏன் அப்படி? ” என்று புரியாமல் கேக்கும் யாமினியை பார்த்து,
“வீட்டுல இருக்க போற பொம்பள பிள்ளைகளுக்கு படிப்பு எதுக்கு? சும்மா நாலு வார்த்தை படிக்க தெரிஞ்சா போதும்” என்ற தன் மாமனாரை யாமினி புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்த தருணம்.
“உங்க வீட்டு பொண்ணை 12thக்கு மேல படிக்க வைக்க மாட்டீங்க? ஆனா எங்க வீட்டுல டாக்டர்க்கு படிக்க வைத்த எங்க வீட்டு பெண்ணை மட்டும், வெறும் BA மட்டுமே படித்த உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பிங்களா?” என்று கேட்டுக்கொண்டே யாமினியின் தம்பி இவர்கள் வீட்டுக்குள் நுழைய,
“என்ன!? யாமினி டாக்டர்க்கு படித்து இருக்காளா?” என்ற கேள்வியுடன் ஜோதிமணியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் நின்று இருக்க, அவனை தொடர்ந்து, யாமினியின் பெற்றோரும் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கை பற்றி பேசுவதற்க்காக சம்மந்தி வீட்டுக்கு வருகை தந்து இருந்தார்கள்.
“என்ன சொல்லுற? நீ டாக்டர் படிச்சிருக்கியா?” என தன் மாமனார் கோவமாக கேட்டதும்..
“ஆமா மாமா.. நான் டாக்டர்க்கு தான் படிக்கிறேன்” என்ற யாமினியின் பார்வை வாசலில் நின்று இருந்த தன் பெற்றோரை பார்த்து, “அப்பா வாங்க, அம்மா, டேய் தம்பி” என்று ஆசையாக கட்டிக்கொண்டாள்..
“டேய் ஜோதி… யாமினி என்ன சொல்லுறாள்? அப்போ உன் பொண்டாட்டி உன்னை விட பெரிய படிப்பு படித்து இருக்கான்னு உனக்கு தெரியுமா?” என்று தன் தந்தை கேட்டுக்கும் கேள்விக்கு..
“ம் தெரியும் அப்பா” என்று பதில் சொன்னான் ஜோதிமணி.
“சம்மந்தி என்னாச்சு? ஏன் கோவமா இருக்கீங்க?” என்று யாமினியின் தந்தை கேட்டதும்.
“என்ன பித்தலாட்டம் இது, நான் உங்ககிட்ட முதல் முறை இந்த கல்யாணத்தை பற்றி பேசும் போதே உங்க புள்ள என்ன படிச்சு இருக்குன்னு கேட்டேன் தானே?” என்று ஜோதிமணியின் தந்தை கோபத்துடன் கேக்க..
“என் புள்ள 12th failன்னு நான் சொன்னேனே சம்மந்தி” என்று யாமினியின் அப்பா பதில் சொல்ல,
“மாமா.. அவரு நீங்க புள்ளைனு கேட்டதும், அவரோட ஆம்பளை பிள்ளையை பற்றி சொல்லிருக்காரு. அவன் தான் 12th fail… நம்ம யாமினி டாக்டர் படிக்கிறாள்” என்று தன் மருமகன் சொல்லும் பதிலை கேட்டு ஜோதிமணியின் தந்தைக்கு கோவம் தலைக்கேறியது.
“என்னாச்சு மணி? ஏன் எல்லோருமே என் படிப்பை சொன்னா ஆள் ஒரு மாதிரி ஆகுறிங்க, என்ன பிரச்சனை?” என்று யாமினி தன் கணவனிடம் கேக்க.
“ம்.. உன்னை விட உன் புருஷன் கம்மியா படிச்சி இருக்காருனு இவங்களுக்கு எல்லாம் வெளிய சொல்ல அசிங்கம் போல” என்று சபைநாகரிகம் தெரியாமல் பேசும் தன் மகனை கண்டிக்கும் விதமாக யாமினியின் அம்மா அவன் கையை பிடித்து கிள்ளி வைத்தார்.
“அப்பா… நீங்க கோவப்படுற அளவுக்கு இப்போ இங்க எதுவும் நடக்கல, யாமினி MBBS படிக்கிறான்னு எனக்கே எங்க கல்யாணத்துக்கு பிறகு தான் தெரியும். எனக்கு அதனால ஒரு பிரச்சனையும் இல்ல. நீங்களும் இத பெருசு படுத்தாதீங்க” என்று தன் மகன் தனக்கே புத்தி சொல்வதை பிடிக்காமல் முறைத்த ஜோதிமணியின் அப்பா
“ஓ… அப்போ நீயும் உன் பொண்டாட்டி குடும்பத்தை போல கூட்டு களவாணி தானா?” என்று அவர் கேட்டார்.
“என்ன நீங்க? களவாணி அது இதுன்னு பேசுறிங்க. இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று சண்டைக்கு நிற்கும் சேவலை போல சீரி பாய்ந்து கொண்டு வந்தான் யாமினியின் தம்பி.
“சம்மந்தி….. என்னாச்சு உங்களுக்கு? ஏன் ஒரு மாதிரி பேசுறிங்க? எதுவா இருந்தாலும் உடைத்து பேசுங்க” என்று யாமினியின் அப்பா கேக்க,
“மாமா…. இந்த வீட்டுல பொம்பள பசங்கள 12ஆம் வகுப்புக்கு மேல படிக்க வைக்க மாட்டாங்க. அதான் எனக்கும் அப்படி ஒரு பெண்ணை பார்த்தாங்க. ஆனா உங்க மகன் படிப்பை யாமினி படித்த படிப்பாக நினைத்து, உங்க மகளை எனக்கு பேசி முடித்து இப்போ எங்க கல்யாணமும் முடிஞ்சு போச்சு” என்று ஜோதிமணி சொன்னான்.
“என்ன மாதிரி எண்ணம் இது, ஏன் பெண் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க கூடாது? அவங்களுக்கும் படிப்பு முக்கியம் தானே? அவங்களும் அவங்க சொந்த காலுல நிக்கணும் தானே?” என்று யாமினி அவள் மனதில் உள்ள நியாயத்தை பேசும் தருணம்
“ம் போதும் நிறுத்து…. இப்படி எல்லாம் ஆம்பளைங்க எதிர்ல சத்தமா பேசக்கூடாது. இதுக்கு தான் படித்த பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வர கூடாதுன்னு நினைச்சேன்” என்ற தன் மாமனாரின் அறியாமையை பார்த்து பதில் சொல்ல பிடிக்காமல் நின்று இருந்தாள் யாமினி.
“ஏங்க…. என் அக்கா இப்போ என்ன தப்பா கேட்டுட்டான்னு அவகிட்ட நீங்க கோவமா பேசுறீங்க?” என்று யாமினியின் தம்பி கேக்க
“மணி…. இது நம்ம குடும்ப விஷயம்… உன் மச்சானை அமைதியா இருக்க சொல்லு” என்றான் ஜோதிமணியின் அண்ணன்.
“நான் ஏன் அமைதியா இருக்கணும்? அக்கா இங்க என்ன நடக்குது? ஏன் உன்னை குற்றவாளி போல நிக்க வச்சு எல்லோரும் கேள்வி கேக்குறாங்க?” என்று தன் தம்பி கேக்கும் கேள்வி நியாமாக இருக்கும் பட்சத்தில்
“எனக்கும் ஒன்னும் புரியல டா” என்ற யாமினி தன் கணவனை பார்க்க
“மினி…. நீ மாமா அத்தையை உள்ள அழைச்சிட்டு போ” என்றான் ஜோதிமணி.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings