எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஒரு குளத்தின் அருகே கொக்கு ஒன்று வசித்து வந்தது. அது அந்தக் குளத்தில் கிடந்த மீன்களை உண்டு வாழ்ந்து வந்தது. குளத்தங்கரை மரத்தில் குரங்குக் கூட்டம் வசித்து வந்தது. அதில் ஓரு குட்டிக் குரங்கு: அது அவ்வபோது அந்த நீர்நிலையில் தண்ணீர் குடிக்க வரும்: அப்படி வரும்போது கணுக்கால் அளவு நீரில் கொக்கு ஆடாமல் அசையாமல் நிற்பதைப் பார்க்கும். அது தன் அம்மாவிடம் “இந்தக் கொக்கு ஏம்மா இப்படி நி;க்குது?” – என்று கேட்டது. “அது மீனைப் பிடிக்குறதுக்காக அப்படி நிக்குது!” – என்றது அம்மா குரங்கு;
குட்டிக்குரங்கு மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அதற்கு இந்தக் கொக்கு இப்படி ஓரிடத்தில் ஆடாமல் அசையாமல் நிற்பது விசித்திரமாகப் பட்டது. “சரியான சோம்பேறிக் கொக்கா இருக்கும் போல?” – என மனதிற்குள் நினைத்துக் கொண்டது. ஒருநாள் குட்டிக்குரங்கு தண்ணீர் குடிக்க போகும்போது கொக்கின் பின்னால் சென்று அதன் சிறகுகளை இழுத்துப் பார்த்தது. கொக்கு குரங்கை கண்டு கொள்ளவில்லை.
ஒவ்வொருமுறை நீர் அருந்தப் போகும் போதும் அது கொக்கிடம் வம்பு செய்தது. ஒருநாள்; நின்று கொண்டிருந்த கொக்கின் காலை இடறி விட்டது. தடுமாறித் தண்ணீரில் விழுந்த கொக்கு சுதாரித்து எழுந்து கொண்டது. அது குட்டிக்குரங்கின் பிடறியை தனது அலகால் கவ்வி ஒரு உலுப்பு உலுப்பித் தூக்கிப் போட்டது. தப்பித்தால் போதும் என குட்டி தலைதெறிக்க ஓடியது.
அது அம்மாவிடம் நடந்ததைச் சொன்னது. “கொக்கைப் பத்தி ஒளவையார் தன்னோட மூதுரைல ரொம்பப் பெருமையா சொல்லிருக்காங்க! கொக்கு உணவுக்காக வாடி நிக்குற மாதிரி தன்னோட காரியத்துல கண்ணா இருக்குறவங்க அடக்கமா இருப்பாங்க!
அப்படி அடக்கமா இருக்குறதப் பார்த்து அவங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு நாம நினைச்சுரக் கூடாது! இதை ஒரு பாடமா எடுத்துக்கோ! யார் கிட்டயும் தேவை இல்லாம வம்பு பண்ணாத!” – என்றது அம்மா குரங்கு;
குட்டி அம்மா சொல்வதை கவனமாகக் கேட்டுக் கொண்டது. அது இப்போதும் நீர் அருந்த குளத்திற்கு வருகிறது. ஆனால் கொக்கு இருக்கும் திசைப் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings