in ,

கொடுத்து வைக்காத வரம் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அதிகாலை…

கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாண்டிசேரியிலிருந்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் உறங்கி விட்டேன் நான். இரவு வெகுநேரம் பேருந்துக்காக விழித்துக் காத்திருந்ததில் கண்கள் சொருக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஆட்பட்டுக் கிடந்தனர் பேருந்தில் இருந்த அனைவரும் .

கல்பாக்கத்திற்கு முன்பாக மெதுவாக பேருந்து இப்படியும் அப்படியும் குலுங்க …உறக்கத்திலிருந்து விடுபட்டனர் சிலர் …பேருந்து நின்றதும் சூடான டீ ,காஃபி என்ற கூப்பாட்டில் மீதமிருந்தோரும் விழித்துக் கொண்டனர் .

 ஒரு 15 நிமிட இடைவெளிக்கு பின்னர் பேருந்து கிளம்பியது.டீ குடித்துவிட்டு திரும்பியதும் …என் இருக்கைக்கு பின்னிருக்கையில் அமர்ந்த இருவருக்கும் உறக்கம் சிறிதும் வரவில்லை …உரையாடல்கள் உற்சாகமாய் வெளிவந்தன.

 “ஏன்பா …ஒரு குழந்தை இருக்கிற பொண்ணை கல்யாணம் பண்ணியிருக்க…?”

“உனக்கு என்னப்  பத்தி நல்லா தெரியும் …  முன்னாடி நடந்த முடிஞ்சிச்போன கல்யாணத்தைப் பத்தியும் தெரியும்”

 “ஆமா …அவுங்க தான் விட்டுட்டு போய் திரும்பவும் வரவேயில்லையே”

“நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டு …நாய் வாலை நிமிர்த்திக் கொண்டு உக்காந்து இருக்கிறது முட்டாள் தனமான வேலையின்னு இந்த முடிவுக்கு வந்தேன்.”

“அது சரி …இது உங்க வீட்டுல பார்த்து செஞ்சாங்களா ?”

“ஹூம்…எங்க வீட்டுல எந்த முயற்சியும் எடுக்கல ..அண்ணண் வீட்டுல இருந்து சாப்பாடு மட்டும் தவறாம வந்திடும் …எவ்வளவு காலத்திற்கு அவுங்கள நம்பியே இருக்கிறது …அதான் இந்தியன் பேங்கல இருக்கிற சங்கர் மூலமா இந்த பொண்ணு வந்திச்சு …தாலி கட்டிட்டேன்.”

 “உங்க வீட்டுல எதுவும் சொல்லையே …நீங்க நல்லா வசதியா இருக்கீங்க …பிசினஸ் நல்லா போகுது …வேற வசதியான வரன் வரலயா ..?”

“ஒரு வரன் வச்சுச்சு… அண்ணாநகரில் இரண்டு வீடு லீசுக்கு விட்டு இருக்காங்களாம் …எல்லா சொத்தும் பொண்ணு பேருக்குதான் எழுதி வைக்க போறோம்ன்னு அவுங்க அப்பா வந்தாரு …ஆனா ஆயிரத்தெட்டு கண்டீஷன் போட்டாங்க …இது செட்டாவாது நீங்க வேற இடம் பாருங்கன்னு சொல்லி அனுப்பிட்டேன்…என்ன நான் சொல்றது …? வீட்டுக்கு வந்தா நம்மை கவனிச்சிக்க ஒரு அன்பான ஆள் வேணும் ..கண்டீஷன் போட்டு வரவகிட்ட அன்ப எதிர்பாக்க முடியுமா ..?”

“சரி விடுங்க ..அந்த அம்மாவுக்கு கொடுத்து வைக்காத வரம் …இந்தப் பொண்ணுக்கு  கொடுத்து இருக்கு …இவுங்க எப்படி ?”

“இவுங்க வீட்டுல மூணு பொண்ணு … மாமியாருக்கு மூணு மருமகனும் மாதம் ஆளுக்கு 5000/- பணம் கொடுத்திடறோம் …இந்த பொண்ணு வீட்டுக்காரன் இறந்துட்டானாம் ..அந்தக் கதை நமக்கு எதுக்கு ? குடும்பத்தை நல்லா பாதுக்கணும் …நம்மையும் பாதுக்கணும் …எல்லாம்  நல்லா பாத்துக்குது”

 “கொழந்தை ஒண்ணு இருக்கே ?!”

“எத்தனையோ பேர் கொழந்தை இல்லன்னு தத்து எடுத்துக்கிறாங்க …அந்த கொழந்தைங்க எல்லாம் இவுங்களுக்கு பொறந்தா? எனக்கு இப்போ 50 வயசு ஆகுது… இனி கொழந்த பொறக்குமுன்னு சொல்ல முடியாது…இதுவும் கடவுள் கொடுத்த வரமா நினைச்சுக்கிட்டேன் …சந்தோசமும் இருக்கேன்.. வயசான காலத்துல.. யம்மா கொஞ்சம் தண்ணி கொடும்மான்னா எடுத்து வந்து கொடுக்க ஒரு பொண்ணு இருந்தா தானே”

“கல்பாக்கம் இறங்குறவங்க வாங்க…” என்று நடத்துநர் கூப்பிட… ஒரு மனக்குழப்பத்திற்கு தெளிவு கிடைத்த திருப்தியுடன் இறங்கினேன் .

விடிய காலை வெளிச்சம் வானை நிரப்பியது.

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சொல்லில் அடங்காத வாழ்க்கை (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    இந்தியாவுக்குச் சுதந்திரம் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்