எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
செல்வனின் அம்மா அழுது கொண்டு இருக்கிறாள் .ஆம் …!ஒரே நாளில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது .நேற்று காலை செல்வனக்கும் அவன் அப்பாவிற்கும் பெரிய சண்டை.” “யோவ் “செல்வம் தான் தன் அப்பாவை இப்படி கூப்பிட்டான் .அப்பா பதில் பேசவில்லை .
” யோவ் …! எனக்கு பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் . இந்த வீட்டை விற்று எனக்கு பணம் கொடு .இல்லாவிட்டால் வீட்டை என் பெயருக்கு உடனே மாத்து …”அப்பா பதில் பேச வில்லை . அவருக்கு லப் – டப் அதிகரித்தது .
” அட …ஏண்டா இப்படி அப்பா கூட இப்படி சண்டை போடுறே …? ” ம்மா …எனக்குனு என்ன சொத்து வைச்சு இருக்கான் …? ஒரு பாங்க் அக்கவுண்ட் கூட இல்லை …”” டாய் …உன்னை இன்ஜினியரிங் படிக்க வைச்சாரே …? அது போதாதா …? பிசினஸ் எல்லாம் வேண்டாம் . நீ …நீ …வந்து ஒரு வேலையை தேடு.” “ம்மா …இந்த ஆளு படிக்க தான் வைச்சான் . வேலை கிடைக்கலை …எனக்கு பிசினஸ் தான் செட் ஆகும் . அதை துடங்க எனக்கு பணம் வேண்டும் …! “
” பணம் இருந்த அவரு குடுக்க மாட்டாரா …? ” செல்லு …நான் பணம் இருந்த கூடுக்க மாட்டேனா ..? “- அப்பா .”” யோவ்…கிழிச்சே ….இந்த சின்ன வீடு ஒண்ணுதான் இருக்கு .நீ
உடனே அதை எனக்கு எழுதி தா ….இல்லைனா அம்மியை உன் தலையில் போட்டு விடுவேன் …! “அப்பாவிற்கு லப் – டப் மேலும் அதிகரித்தது .
திடீர் என நெஞ்சு வலி .”யோவ்….நடிக்காதே …! “
” டேய் …அப்பா உயிரை எடுத்துடாதே …!”செல்வத்தின் அப்பா நெஞ்சை பிடித்து கொண்டு எழும் போது அப்படியே கீழே முடியாமல் விழுந்து விட்டார் .
மாரடைப்பு ….ICU . அரசு மருத்துவ மனை .செல்வனின் அம்மா அழுது கொண்டு இருந்தாள் . செல்வன் எங்கும் இல்லை ..ICU -வில் செல்வனின் அப்பாவின் நினைவுகள் பின்னோக்கி செல்ல துவங்கியது . ஆபீசு – லிருந்து வரும் போதே செல்வனுக்கு பிடித்த போண்டா , பஜ்ஜி வாங்கி வருவார். ” “செல்லு ” என குப்பிட்டு கொண்டே உள்ளே வருவார் . வந்து காபி குடித்து விட்டு செல்வத்தை தன் மார்பிலே சுமந்த படி வெளியே செல்வார் .
” ம்மா “…..
” சொல்லு இது தான் மாடு …! ம்மா என கத்தும் …!”
“சர் “…..என ஒரு பஸ் வந்த்தது .” செல்லு ..இது தான் புஸ் . சர் …..என வேகமா செல்லும் …!”செல்வம் அவர் தோளில் குஷியாக இருந்தான் . அப்பா அவனை ஐஸ் கிரீம் கடைக்கு கூட்டி போயி அவனுக்கு தினம் ஒரு ஐஸ். .செல்வதிற்கு ஐஸ் என்றால் கொள்ளை பிரியம் .ரொம்ப ரொம்ப பிடிக்கும் .
ஞாயிறு முழுவதும் அவன் உடன் விளையாட்டு தான் . அவர்
ஒரு நாள் முழுக்க அவன் உடன் தான் பொழுதை கழிப்பார் . முடிந்தால் சினிமாவிற்கு கூட்டி செல்வார் .செல்வன் படு குஷியாக அப்பாவுடன் வெளியே செல்வான் . சினிமாவை பார்க்கும் போது ஐஸ் கிரீம் நிச்சயம்.பின் காலையில் செல்வனை பள்ளி கூடத்தில் விட்டு விட்டு தான் செல்வார் .
அப்பாவிற்கு செல்வன் என்றால் உயிர் . அப்படிபட்ட செல்வன் .இன்று பெரிய ஆள் ஆகிவிட்டான் . வளர்ந்து விட்டான் .வேலைக்கு போக அவனுக்கு பிடிக்க வில்லை . அதனால் தான் பிஸினஸ் என்கிறான் .அப்பாவிற்கு செல்வனின் பழைய ஞாபகம் எல்லாம் வந்து போனது .டாக்டர் இடம் அவரால் பேச முடியவில்லை . கை எழுத்து போடுவது போல் செய்கை செய்தார் . டாக்டர்-க்கு புரிய வில்லை . அவர் செல்வனின் அம்மாவிடம் …… ” ஆமாம் சார் …உயில் எழுத வக்கீலை குப்பிடுகிறார் . ” அம்மா கண்ணீர் விட்டார் . மதியம் வக்கீல் வந்தார் . செல்வனின் அம்மா வக்கீல் இடம் எல்லாம் சொன்னார் .வக்கீல்டாக்குமென்ட் எல்லாம் கொண்டு வந்து இருந்தார் . வக்கீலை பார்தத்தும் முகத்தில் சின்ன சிரிப்பு . வக்கீல் டாக்குமென்ட் படித்து காட்டி ” சம்மதமா” என கேட்டார் . அப்பா “ம்ம ” என இசைவு தெரிவிதத்தார் .அவர் கை எழுத்து போடும் போது சிறு வயதில் செல்வன் தனக்கு கொடுத்த முத்தங்களை நினைத்து பார்த்து கை எழுத்து போட்டார் . உயில் ரெடி ஆனது .முத்தம் நினைத்து கொண்டே உயிர் பிரிந்தது .பேனா கீழே விழுந்தது. செல்வன் வரவில்லை . மாலை தான் வந்தான் .அவனிடம் அம்மா ” இந்தா நீ கேட்ட உயில் ” என சொல்லிவிட்டு கதறி கதறி அழுதாள் .” அப்பா …எப்படி இருக்கார் …?” என செல்வம் கேட்க அம்மா ” அது தான் நீ அவரோட உயிரயே எடுத்து விட்டாயே ?…”. அவள்
தொடர்ந்தாள். ” நீ எல்லாம் ஒரு மனுஷனா ….? ஈவு இரக்கம் இல்லா மிருகம் .நீ …? உன்னோடு ஒரு கொலையாளியோடு என்னால் வாழமுடியாது . “
” ம்மா …!”
“சீச்சீ ….நீ மனுஷனே இல்லை . ஏமன் :
“ம்மா …”
” நான் உனக்கு அம்மாவும் இல்லை . நான் உன் கூட வாழ முடியாது ..!”
“ம்மா “
” சீச்சீ …நீ பணதுக்காக என்னை கூட கொலை செய்வயே …?”அம்மா தொடர்ந்தாள் .உறுதி இருந்தது .. ” நான் போறேன் …அப்பா உடம்பை ஆஸ்பித்திரிக்கு கொடுத்து வீடு …
இல்லை என்னமோ செய் …”
” ம்மா …எங்கே போறே …? “
” எங்கையோ ….போறேன் …நான் சாகும் போது கூட நான் உன்னை பார்க்க விரும்ப மாட்டேன் …நீ …தான் என்னை விதவை ஆக்கினாய் ..!”
“ம்மா …”
“சீச்சீ …நான் போறேன் ….! “
வளர்த்த கெடா நெஞ்சில் முட்டுதடா….! ! !
எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings