எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
” டேய் ..உன்னைதானே நம்பி இருக்கேன். ஏன் எனக்கு உதவி செய்ய மறுக்கிறாய் …? “
” என்ன உதவி வேணும் …? “
” போச்சுட …போச்சு …உனக்கு என்னை பத்தி தெரியுமா …? அல்லது தெரியதா …? “
” நன்கு தெரியும் …! “
” அப்புறமா நீ ஏன் என் கூட பேச மாட்டிங்கறே ..? “
” அதான் ….இப்போ உன் கூட பேசிக்கிட்டு தானே இருக்கேன் ? ” டே ..டேய் …உனக்கு என் பிரச்சனை தெரியதா ..? எனக்கு கல்யாணமும் ஆக வில்லை. வருமானமும் இல்லை…! “
” சரி ..அதற்கு நான் என்ன செய்யட்டும் …? “
” இப்படி விட்டேத்தியா பேசாதே …!”
” சரி …நான் என்ன பண்ணனும் …? “
” எனக்கு வழி காட்டு …”
” ஓ …! “
” டேய் உன்னை விட சிறந்த நண்பன் எனக்கு யாரும் கிடையாது … இது உனக்கு தெரியாதா …? “
” நான் உனக்கு நண்பனா …? “
” ஆமாம் . நண்பன் , தத்துவ ஞானி , வழி காட்டி எல்லாமே நீ தான் ..”” கொஞ்சம் விவரமா சொல்லு …! “
” டேய் …எல்லாம் தெரிஞ்சிருந்தும் என்னையே கேள்வி கேட்கிறாயா ..? “
” ம்ம் ….சொல்லு …! “
” டேய் எனக்கு ஒரு பிரச்சனை …”
” உனக்கு என்னிக்குதான் பிரச்சனை இல்லாமால் இருந்ததது “
” டே …டே ..நக்கல் வேண்டாம் …! “
” சரி ..பிரச்சனையை சொல்லு…”
” டே ….நாளை மறு நாள் அயல் நாட்டிலிருந்து என் அண்ணனின் மகன் சபரிஷ் வருகிறான் . அவனுடன் பொழுதை கழிக்க ஆசை படுகிறேன் “
” மம் …மேலே சொல்லு “
” நான் தோள் மீது போட்டு வளர்த்தவன் “
” இதிலே என்ன பிரச்சனை …மேலே சொல்லு “
” எனக்கு முதுகலை சரித்திரம் பரீட்சை டிசம்பரில் உள்ளது . எனக்கு படிக்க முழுதாக படிக்க குறைந்ததது 2 மாதம் வேண்டும் …”
” சரி இதில் என்ன பிரச்சனை …? “
” நான் படிப்பதை போன வாரமே நிறுத்தி விட்டேன்…”
” ஏன் ..? “
” அவன் வருவதக்ற்கு 3 நாட்கள் உள்ளன . என்ன செய்யலாம் என யோசனை கூட இல்லை …”
” மேலே சொல்லு “
” நான் கதை எழுதி வருகிறேன். இது வரை 40 கதைகள் எழுதி விட்டேன் . இப்போது கதை எழுத கரு கிடைக்கவில்லை …”
” உனக்கு சிந்திக்க முடியவில்லையா …? “
“ஆம் . அதனால் தான் உன்னிடம் ஐடியா கேட்கிறேன் …”
” நான் என்ன ஐடியா குடுக்க முடியும் …”
” டே ..அப்படி சொல்லாதே….”
” இல்லை . நீ ஆர அமர யோசித்து பார் . உனக்கு கதை கிடைத்து விடும் “
” என் மூளை வறண்டு போய் உள்ளது “
” சரி …..நான் யார் …?”
” என் நண்பன் “
” உனக்கு என் மீது நம்பிக்கை உள்ளதா …? “
” சத்யமாக 100% உள்ளது …”
” அப்புறம் என்ன யோசனை …? பேனா , பேப்பர் எடு எழுது …”
” என்ன கரு என்றே யோசிக்க முடியவில்லை …? “
” நீ எழுத எழுத வார்தைகள் தானே வெளிவரும் “
” உண்மையாகவா …?”
” சத்யமாக “
“டே …! உண்மையா …? “
” ஆம் .100% உண்மை …”
” சரி …எழுத முயற்சிக்கிறேன் …”
” சரி. வாழ்த்துக்கள் .யாரை பற்றி எழுதுவது என முடிவு செய்து விட்டாயா ? “
” டேய் ..தெரியாது போல் கேள்வி கேட்கிறாய் …நான் உன்னை பற்றி தான் எழுத போகிறேன்…. “” என்னை பற்றியா …?”” ஆம் . ஒரு சந்தேகம் என் அக்கா போன வாரம் குருவாயூர் சென்று இருந்தார். நான் அவரிடம் உன் போட்டோவை வாங்கி வர சொன்னேன் . என்ன ஆச்சர்யம் ..? உன் அழகு உச்சம் . ஆனால் நான் ஒன்றை கவனித்தேன் . உன் மார்பில் பூணூல் இல்லை ….”
” சரி ..இதில் என்ன ? நீ பூணூல் போட்டு இருக்கிறாயா …? “
” இல்லை “
“ஏன் …? “
” எனக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லை …”
” அப்போ ..எனக்கு ஜாதிகள் உண்டா …?”
” புரியவில்லை “
” உனக்கு என்ன வேண்டுமோ அது தான் கிடைத்து உள்ளது “
” அப்புறம் ஒரு சந்தேகம் …”
“கேள் “
” நீ லெமூரியா கண்ட தாவுதல் (CONTINENTAL SHIFT ) நடைபெறும் முன் தென்மதுரையில் இருந்த முதல் தமிழ் சங்கத்தில் பங்கு பெற்றதாக என் பாடத்தில் வருகிறது …அது உண்மையா ..?”
” நீயே கண்டுபிடி …”
“டேய் ..ஒரு நாள் கூட நான் உன்னை எண்ணாமல் இருந்தது இல்லை “
” தெரியும் “
” நீ எனக்குள் இருந்தாலும் உன்னை காண வேண்டும் என தீராத ஆசை “
” அது தான் உனக்கு போட்டோ கிடைத்து விட்டதே …?”
” ஆம் “
” நீ அதை பார்த்து பேசினால் நான் நிச்சயம் பேசுவேன் …!”
“நான் தினமும் உன்னை தியானிக்கிறேன் “
” நான் சொல்வது உங்களுக்கு கேட்கிறதா …?”” ஆம் . அதை உன் தியான ஸ்லோகத்தை அப்டியே எழுது . அது போய் சேர வேண்டிய இடம் சென்று விடும் …”
முருகா போற்றி
ஸ்கந்தா போற்றி
ஞான கடவுளே போற்றி
தமிழ் கடவுளே போற்றி போற்றி
என்றும்
எங்கும்
எப்போதும்
எனக்குள் குடி இருந்து
என்னை
சீராக சிரமம் இன்றி
சிறப்பாக
இயக்கி வைக்கும் படி
அன்புடன்
தியானிக்கிறேன் … ! ! ! ! ! ! !
ஓம் சரவணபவ …!!! !!!
எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings