in ,

இஸ்மாயில் (சிறுகதை) – சத்யநாராயணன்

எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

டீ கடை .

இது நூலகம் போல .

நல்ல புத்தகங்களுக்கு ஈடாக நல்ல நண்பர்கள் கிடைக்கும் இடம்.

சுமார் 10 ஆண்டுக்குக்கு முன் மெயின் ரோடில் ஒரு டீ கடை இருந்ததது.தினமும் காலை மாலை இரு நேரங்களிலும் செல்வேன். மாலையில் நண்பர்கள் வருவார்கள். சரவணன் , குமார். பூபதி , சுரேஷ், வினோத் என்று ஒரு நீண்ட பட்டியல் . டீ கடை முதலாளி, மற்றும் டீ மாஸ்டர் எல்லாருமே நண்பர்கள். நான் அவர்களிடம் அரசியலும் பேசுவேன் …ஆன்மீகமும் பேசுவேன். டீ கடைக்கு பக்கத்தில் ஒரு 10 அல்லது 15 கடைகள் . மேல் தளத்தில் சில ஆபீசுகள் மற்றும் கடைகள்.

நவீனமயமாக்கம் இந்த பில்டிங்யை விடவில்லை . எல்லோர் வயற்றிலும் அடித்து பில்டிங்யை இடித்து என்பிஎல்ட் ( இரு சக்கர வாகனம் ).பெரிய ஷோ ரூமை கட்டிவிட்டார்கள் .எனக்கு அந்த டீ கடை ரொம்ப பிடிக்கும். அதிகாலை 3 மணிக்கே திறந்து விடுவார்கள் ஒரு நாய் பட்டாளம் என்னை விடவே விடாது . நான் பிஸ்கட் வாங்கி போடுவேன்.

சரி அந்த டீ கடையை பற்றி ஏன் எழுதுகிறேன் என்ற விஷயத்திற்கு

வருகிறேன்.

மாலை 5 மணி முதல் 7 மணி வரை பல டீ .+ தம் . மேல் தளத்தில் வேலை செய்பவர் தான் இஸ்மாயில் . அவர் 5 மணிக்கு சிகெரேட் குடிக்க வருவார். என்னிடம் தான் லைட்டர் வாங்குவார் . அதில் பழக பழக நாங்கள் நல்ல நண்பர்கள் ஆணோம் . பிறகு 6 மணிக்கு வருவார். அப்போது ஒரு தம். அவரிடம் நான் என்ன பேசினேன் என எனக்கு சரியாக ஞாபகம் இல்லை.

பொதுவாகவே பேசினோம் . அவர் பார்பதற்கு 30 அல்லது 35 வைது போல் தான் இருந்தார். நிறம் மிக வெள்ளை. ஒல்லியான உருவம். சற்று குட்டை . ஒரு நாள் கடையில் உள்ளே உட்கார்ந்து பேசும் போது அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதா ..? மேலும் எத்தனை குழந்தைகள் என கேட்டேன். அவர் மீண்டும் ஒரு சிகெரேட் பற்ற வைத்து விட்டு பேச ஆரம்பித்தார் .

” சார் ..எனக்கு இளம்வயதில் கல்யாணம் ஆகி விட்டது . எனக்கு

இரண்டு குழந்தைகள் ….பார்க்க மிக அழகு . நான் அப்போது தென்

ஆப்பிரிக்காவில் குடி இருந்தோம் . ஒரு நாள் ஷாப்பிங் செல்ல என் மனைவியும் குழந்தைகளும் என் காரில் போனார்கள் . நான் அவர்களை உயிருடன் பார்த்தது அதுவே கடைசி …! “

என் மனம் சற்று பதறியது . மேலே அவரே சொன்னார்.

” அவங்க போன கார் மீது லாரி மோதி கார் சுக்கு நூறாக உடைந்தது .

மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். “

” சார் ….உங்க கஷ்டம் புரிகிறது . இது எப்போது நடந்ததது ..?”

” 25 வருடங்கள் ஆகிவிட்டது . ஆனால் அவர்கள் என் மனசில் தான்

குடி இருக்கின்றன்ர். “

” சார்…தப்பா எடுக்காதீங்க …நீங்க ஏன் மறுபடியும் கல்யாணம்

செய்யவில்லை …? “

” சார்….. என் மனைவியை நான் இப்போதும் காதலித்து கொண்டு

தான் இருக்கிறேன் . என் குழந்தைகள் என் நெஞ்சை விட்டு அகல வில்லை…” இஸ்மாயில் பேசியது எனக்கு ஷாக் . அவர் எந்த பதட்டமும் இன்றி சர்வ சாதாரணமாக பேசினார்.

” சார் …நான் சந்தோஷமாக வாழ்ந்த காலத்தை நினைத்தே என்

காலத்தை ஒட்டுகிறேன் …”

” சார்….நீங்க மறுபடி கல்யாணம் செய்தால் வாழ்க்கை சற்று மாறுமே ..?”

” இல்லை சார். என் மனைவியை என்னால் மறக்க முடியவில்லை . இது இப்படி இருக்க நான் எப்படி மறுகல்யாணம் செய்ய முடியும்… ? “

” சார் ….”

” ஆம் . சார் .நான் என்மனைவியை இப்போதும் காதலித்து கொண்டே

 இருக்கிறேன் . மறு கல்யாணம் என் வாழ்வில் நினைத்து பார்க்கவே

முடியாது …! “

இஸ்மாயில் எந்த வித வேதனை , துக்கம் எதுவுமே இல்லாமல் மெதுவாக ஆனால் ஆணித்தரமாக பேசினார். அவர் பேச்சில் உண்மை இருந்ததது.உறுதியும் இருந்ததது.

” சார் நீங்க ரொம்ப வித்யாசமானவர் …”

” அப்படி எல்லாம் இல்லை. …

நான் என் மனைவியை மிகுந்து காதலிதத்தேன் .

என் குழந்தைகள் மீது கொள்ளை பாசம் .

சார் ….நான் கிழம்புறேன் …..! “

அவர் சொல்லி விட்டு போய் விட்டார் . எனது லப் -டப் அதிகரித்தது .

இஸ்மாயில் மாமனிதர் …!

அவரது காதல் அழிவு இல்லாதது …!!

அவரது பாசம் எல்லை அற்றது ,,,!!!

அவருக்கு நிகர் அவர் மட்டுமே …!! !!

இஸ்மாயில் என் உள்ளத்தை

  உலுக்கியவர் …!

எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ரூ’பாய்’…! (சிறுகதை) – சத்யநாராயணன்

    டேய்…! (சிறுகதை) – சத்யநாராயணன்