எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
உதகை அரசினர் கலை கல்லூரி .ரம்யாமான கேம்பஸ் . பல பல மரங்கள் . கல்லோரியை சுற்றியும் . மலை மேல் இருந்தது கேம்பஸ் டீ ரூம் எப்போதும் பிஸியாக இருக்கும் . டீ சாப்பிடுகிறாலோ இல்யையோ ‘ தம் ‘ அடிக்காமல் இருக்க மாட்டார்கள் . கிளாஸ்சிற்கு கட் அடித்து விட்டு அங்கே வந்து விடுவார்கள் .
“தம் ” + டீ …!
சாய்ராம் மற்றும் முகமது தினமும் பல மணி நேரம் அங்கே தான் இருபார்கள் ,கூடவே ஒரு நண்பர் கூட்டம் . ஆனால் சாயி மற்றும் முகமது ஆழமான
நட்பை கொண்டு இருந்தார்கள் . அதற்கு காரணம் 6-ம் வகுப்பில் இருந்தே ஒரே கிளாஸில் படித்தவரகள். பி. யு . சி -லும் ஒரே ஒரே கல்லூரி …ஒரே கிளாஸ். சாய் நன்று படிப்பான் முகமதுவும் நன்கு படிப்பான் . இருவருக்கும் போட்டி தான் . ஆனால் பொறாமை , காழ்ப்பூணர்ச்சி இருவருக்கும் இல்லை.
பி. யு .சி முடிந்த்ததும் அதே கல்லூரியில் இருவரும் வேதியல் பட்ட படிப்பில் சேர்ந்தனர். டிகிரி படிக்கும் போது இருவருக்கும் நட்பு ஆழமானது . சாய்முகமது வீட்டிற்கும் ….முகமது சாய் விட்டீற்கும் செல்வது வாடிக்கை ஆனது .
சுமார் 10 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தனார்.
இருவரும் ‘தம்’ அடிப்பார்கள் . இருவருமே ‘செயின் சோமக்கர்ஸ் ‘. அப்புறம் திட்டம் போட்டு வேஷ்டி கட்டி கொண்டு வருவார்கள் . எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். சாய் கோவில் போகும் பழக்கம் கிடையது . முகமதும் பள்ளி வாசல் போக மாட்டான் .
கல்லூரி நாடகத்தில் சாய் நடித்த போது முகமது அவனுக்கு ஒரு விலை உயர்ந்த ஷர்டை வாங்கி கொடுத்தான் . கல்லூரி நண்பர்கள் எல்லோரும் அவனை ” பாய் ” என்றே கூப்பிடுவார்கள் சாய் மட்டும் ” தோஸ்த் ” என்றே கூப்பிடுவான் .
1981
மறக்க முடியாத வருடம் . பட்ட படிப்பின் இறுதி ஆண்டு. 3- ம் ஆண்டு மாணவர்கள் சோகத்தில் இருந்தனர் . பிரிவு உபச்சார விழாவில் சாய் முகமது கட்டி கொண்டு அழுதார்கள் முகமதுவின் அப்பாவிற்கு வேலை கேரளாவிற்கு மாற்ற பட்டது .முகமது பரீட்சை முடிந்ததும் கேரளா செல்ல …சாய் அவனை பஸ் ஸ்டண்ட் வரை சென்று வழி அனுப்பி வைத்தான் . இருவர் கண்களிலும் கண்ணீர் .
தாங்க முடியாத பிரிவு ….!
2021
சாய் அதிர்ஷ்ட வசமாக முகமதுவின் போனே நம்பர் பெற்றான் உலகில் சாதித்தது போல் உணர்ந்தான் . உடனே ‘கால் ‘ செய்தான் . இருவரும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசினார்கள் .
முகமது : இப்போது ‘தம்’ அடிப்பதில்லை . விட்டு விட்டான் . துபாயில் ஒரு நல்ல வேலயில் இருந்தான் . தனது 2 மகன்களுக்கும் திருமணம் முடித்து விட்டான் . பள்ளி வாசல் போகும் வழக்கம் வந்தது . வெள்ளி
கிழமை 5 முறை தொழுக செல்கிறான் .இன்னும் ஒரு வருடத்தில் ரிடயர் ஆகி கேரளா வந்து விடுவான் . தான் சந்தோஷமாக இருப்பதாக சொன்னான் .
சாய் : ‘தம் ‘ + டீ -யை விடவில்லை . திருமணமும் ஆகவில்லை . வேலைக்கு செல்லும் இடங்களில் எல்லாம் காலை 2 முறையும் மதியம் 2 முறையும் தம் + டீ குடிக்க போய் விடுவதால் பணி நீக்கம் நியதி ஆனது . அவன்
சிறப்பாகவே வேலை செய்தாலும் மேல் அதிகரிகளுக்கு அவனது பழக்கம் பிடிக்காமால் பணி நீக்கம் செய்தனர் . சாய்-யின் அண்ணன் தான் வாடகை மற்றும் மருந்துகள் செலவை பார்த்து கொள்கிறார். கை செலவுக்கு பணம் போத வில்லை என்பதை உள்ளது உள்ள படி தெரிவித்தான் . முகமது
சாய் வங்கி விவரங்களை வாங்கி கொண்டான் . சரி …ஏதோ ரூபாய் …500 அல்லது 1000 அனுப்பி வைப்பான் என எதிர்பார்தான் .
அன்று மாலையே …
தங்கள் கணக்கில் ரூ பாய் 50,000
வரவு வைக்க பட்டு உள்ளது – வங்கி தகவல் .
” ஐயோ …அம்மா …! ” என சாய் குலுங்கி குலுங்கி அழுதான் .
” தோஸ்த் ” கோடான கோடி நன்றிகள் என்று
அவனுக்கு தகவல் அனுப்பி விட்டு அழுகையை
தொடர்ந்தான் .
முகமதுக்கு சாய் உயிர் …!
சாய்க்கு முகமது உயிர் …!!
உயிருக்கு உயிரான நட்பு …!!!
பி. கு : இந்த ரூ”பாய்” கதை இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கு
அர்ப்பணம் …!
எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings