எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நான் 10ம் வகுப்பு படிக்கும் போது என் அம்மா இறந்து விட்டார். அப்பா அதற்கு முன்பே 3 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார் .எனக்கு என்று எந்த உறவும் இல்லை .எனக்கு என்று உறவினர்கள் யாரும் இல்லை.
என் பெரியாப்பா துபாயில் இருப்பதாக கேள்வி பட்டு இருக்கிறேன் .ஆனால் அவருடன் எந்த தொடர்பும் இல்லை. என்னை இத்தனை நாள் காப்பற்றியது
என் அம்மா தான் .என் அம்மா வீட்டு வேலைக்காரியாக பல வீடுகளில் வேலை செய்தார். காலையில் 4 வீடுகள் மாலையில் 3 வீடுகள் என கடுமையாக உழைத்தார் .வறுமையிலையே நான் படித்தேன் .
சில நாள் 2 வேளை தான் உணவு. அம்மா எனக்காக இரவில் சமைப்பார் .அம்மா ஏதாவது வேலை செய்யும் இடத்தில் சாப்பிட்டு விடுவார் . எனக்கு காலை உணவு தண்ணீர் ஊற்றிய சோறு தான் .எனக்கு ரெண்டும் கெட்டான்
நிலை .அம்மாவிற்கு நான் வேலைக்கு போயி சம்பாதிக்க வேண்டும் என ஆழமான எண்ணம் இருந்த்து .நான் பணம் கேட்கும் போது எல்லாம்
எங்கிருந்ததாவது பணம் புரட்டி கொடுப்பார் .இந்த நிலையில் தான் அவர் மரணம் .
நான் அனாதை ஆகிவிட்டேன் . இனி என்ன செய்வேன் ..? 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தேன் .அடுத்த மாதம் வீட்டு வாடகைக்கு எங்கே போவேன் ….? என் உணவு தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வேன்…?
உடனே …
உடனே …
வேலை தேடினேன் .அம்மா அட்வான்ஸ் கொடுத்திருந்த ரூபா 5,000மட்டும் என் கையில். நான் வீட்டை காலி செய்து விட்டேன் . எங்கே தங்குவது?
என் நண்பன் எனக்கு உதவினான் . அவன் அம்மாவோட அனுமதியோடு
தற்காலிகமாக அவன் வீட்டில் தங்கினேன் .
எனக்கு ஒரு பெரிய துணி கடையில் சேல்ஸ் மேன் வேலை கிடைத்தது . நான் எனக்கு என்று ஒரு சின்ன வீட்டை …இல்லை …இல்லை ..ஒரு சிறு ரூம் தேடினேன் . கிடைத்தது .
ரூம் மொட்டை மாடியில் ஒரு ரூம் . பொது குளியல் அறை .இப்போது என் ரூமிலிருந்து தான் வேலைக்கு போகிறேன். 3 வருடங்கள் சமாளித்து விட்டேன். +2 தனியார் தேர்வில் பாஸ் செய்து , அண்ணாமலை தொலை தூர கல்வியில் பி .காம் . சேர்ந்தேன் . முதல் 4 செமெஸ்டெர்களில் முதல் வகுப்பில்
தேர்ச்சி அடைந்தேன் . இன்னும் ஒரு வருடம் தான் நான் டிகிரி வாங்கி விடுவேன் . பின் ஒரு நல்ல வேலைக்கு போக திட்டம் . கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்.
அதற்குள் கோடை காலம் ….!
கடுமையான சூடு . வெப்பம் அதிகம் . என்னால் வெப்பம் தாங்க முடிய வில்லை இரவு நேரத்தில் கூட அதிக வெக்கை . நான் தினமும் இரவு படுக்கும் போது குளித்து விட்டு , ஒரு பெட்-ஷீட் -ஐ தண்ணீரில் நனைத்து தூங்குவேன் . என்னால் நிம்மதியாக துங்க முடியவில்லை . ஒரு ஃபேன்
இருந்த்து . ஆனால் அதில் இருந்தும் உஷ்ண காற்று தான் வந்தது . என்னால் தாங்க முடியவில்லை . நல்ல தூக்கமும் இல்லை. சூடு ஓவ்வமை .
உடல் முழுக்க சூட்டு கொப்பளங்கள் . அரித்து கொட்டியது.
வேர் கூர் இல்லை. மிகவும் கஷ்ட பட்டேன் . ஞாயிறு ஒரு நாள் கூட புரண்டு புரண்டு படுத்து விடுவேன் . சுருண்டு விடுவேன். என் சாப்பாடு கையேந்தி பவனில் தான். என்னால் படிக்கவும் முடியவில்லை .
நான் யோசித்தேன் . எ .சி இருந்தால் நன்றாக இருக்கும் . நான் என் கடை எலெக்ட்ரீஷியன் இடம் வாடகைக்கு எ .சி கிடைக்குமா ? என கேட்டேன் .
அவர் இல்லை அப்படி கிடைதாலும் அட்வான்ஸ் பாதி பணம் வாங்கி விடுவார்கள் என்று சொன்னார். மேலும் தன்னிடம் ஒரு செகண்ட் -ஹேண்ட் எ. சி. இருப்பதாக சொன்னார். ரூபா 13,000 ஆகும் என்றார். என்னிடம் பணம் இல்லை . நான் 7,000 சேமித்து வைத்து இருந்தேன் . வேறு வழி இன்றி என் நண்பனின் அம்மாவிடம் கடனாக ரூபா 6,000 வாங்கினேன் .
மறு நாளே எ .சி -ஐ இன்ஸ்டால் செய்ய சொன்னேன் . எ. சி. நன்கு வேலை செய்ய வேண்டும் . பழையது என்பதால் சந்தேகம் . அம்மாடி …! நான் எ . சி. போட்டு 6 மாதங்கள் ஓடிவிட்டன .
இப்போது நன்கு படிக்கிறேன் .
நன்கு தூங்குகிறேன் .
என் உடல் புண்கள் மறைந்தன .
இனி டிகிரி வாங்குவது தான் என் வேலை…!
எ.சி…..!
எ.சி …!!
இது ஆடம்பரம் இல்லை. அவசியம் . கட்டாயம் . நிச்சயம் அத்யாவசியம் .
இது 100% உண்மை …!
பி .கு . : அரசு இலவசமாகவோ அல்லது மலிவு விலையில் A/C யை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் .
நடக்குமா …?
ஏழை சிரிப்பு பார்க்க முடியுமா …??
எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings