2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
நான் 6வது வகுப்பு அந்த ஹைஸ்கூல் சேரற வரை எங்க வீட்ல சைக்கிள் கூட கிடையாது. எங்க வீட்ல இருந்து ஸ்கூல் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் இருக்கும். 10 மணி ஸ்கூலுக்கு 9.15 க்கு கிளம்பி ஆடி அசைஞ்சு போறதுக்குள்ளே பிரேயர் பெல் அடிச்சிடும். அதுவும் வெயில் காலத்துல ரொம்ப சிரமம்தான்.
ஏழாவது வகுப்பு சேந்தேனா, இப்ப ரெண்டு அம்பாசிடர் கார், ஒண்ணு இள நீலக் கலர்,ஒண்ணு வெள்ளைக்கலர்.என்ன பிராப்ளம்னா லன்ச் இண்டர்வெல் அப்ப கபடி ஆடுவேனா,வெள்ளைக் கலர் கார் அழுக்காயிடும்.மறு நாள் அம்மா திட்டிட்டே சன்லைட் துண்டு சோப் வச்சு திரும்ப வெள்ளையாக்கணும்.
ஓ விவரமா சொல்லலையா, விவேகநந்தன்தான் சொல்லிக் கொடுத்தான் எனக்கு கார் ஓட்ட. ரெண்டு கையையும் முஷ்டியை மடக்கி முன் பக்கம் மடக்கினாப்பல நீட்டணும்.புறப்படறப்ப வலது கை சாவி போட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணி ஓட்டணும். யாராவது குறுக்கே வந்தா வலது காலை அழுத்தி பிரேக் போட்டு நிப்பாட்டணும்.வாய்ல எப்படி புர்ர்ர்ர்னு கரெக்டா சத்தம் கொடுக்கணும்றத கத்துக்கதான் ரெண்டு மூணு நாளாச்சு. ஹார்ன் அடிக்கறது ஈசி, அப்ப மட்டும் பாய்ங்க் பாய்ங்னு சத்தம் வரணும். அடிக்கடி சன்லைட் சோப் போட்டு துவைச்சு வெள்ளைக் கலர் சீக்கிரம் அவுட். இப்ப புளூ கலர் அம்பாசிடர் மட்டும்தான்.ஸ்டியரிங்க அப்படி ஒடிச்சு திருப்பி அஞ்சே நிமிஷத்துல ஸ்கூல்ல இருந்து வீடு. திண்ணை ஓரமா பார்க் பண்ணிட்டு, இல்லை சில சமயம் திண்ணை மேலயே கூட.உள்ளே போய் அம்மா சுவத்து கூண்டுல வச்சிருக்கற ஆறின காபியை ஒரே மடக். சில சமயம் அதுதான் பெட்ரோல். கிட்டத்தட்ட 3 வருஷம் அந்த அம்பாசடர்தான்.
9 வது பரிட்சை டைம்ல சின்ன ஆக்சிடண்ட். அது ஒண்ணுமில்லை சந்தை பக்கம் காரை வேகமா ஓட்டிட்டு வரப்ப எதிர்ல திடீர்னு நாலஞ்ச்சு காலேஜ் அக்காக்கள், பிரேக் போட முடியாம மோதிட்டேன் மெத்துனு ஒரு மோதல்,தெரிஞ்சவங்கதான் கல்யாணி அக்கா.
“ஏய் லூசு எருமை வயசாச்சு இப்படி கற்பனைக் கார் ஓட்டற சாக்குல பொண்ணுங்களை இடிக்கறயா இரு உங்கம்மா கிட்ட சொல்றேன்னு”கத்தறாங்க.
லேசாதானே இடிச்சது ஏன் இப்படினு யோசிச்சேன். ஏதோ மாதிரிதான் இருந்தது. காரை விட்டுட்டு ராஜு அண்ணன் சலூன்ல கண்ணாடி பாத்து தலை சீவிண்டேன், மூக்குக்கு கீழே லேசா கருகருனு பூனை முடி ஓ இனிமே மீசை வருமா?
அன்னிக்கு போச்சு அம்பாசிடர் கார். எங்க வீட்டுக்கு வாரம் ரெண்டு நாள், அது அண்ணாவா, சித்தப்பாவானு தெரியாத ஒரு ரிலேடிவ், பத்துனு அம்மா கூப்பிடுவா, ஒரு பேர் இல்லாத ரேஸ் சைக்கிள்ல வருவார். சைக்கிளுக்கு ஸ்டாண்ட் கிடையாது திண்ணை ஓரமா சாத்திட்டு உள்ளே வருவார் நான் சாவியை அவர் கைல இருந்து பிடுங்காத குறையா வாங்கி சைக்கிளை தாக்குவேன்.
முதல்ல தள்ளிட்டே போறது, அப்பறம் குரங்கு பெடல் அப்பறம் ரெங்கு அண்ணன் தயவுல நல்லாவே ஓட்ட கத்துண்டேன். இப்படி கிட்டத்தட்ட ஒண்ணரை வருஷம்.
அவர் வர டைம்லதான் கரெக்டா பக்கத்து வீட்டு பாரு அக்கா உடைஞ்ச ஸ்டூல்ல உக்காந்து குமுதம் படிக்கும். சில சமயம் பத்து அண்ணா ஆனந்த விகடனுடன் வருவார். அது பாரு அக்கா கைக்கு எப்ப போச்சுனு தெரியாது. எப்பவோ பத்துவையும், பாரு அக்காவையும் காளியம்மன் கோவில்ல வச்சு பாரு அக்காவோட மாமா பாத்துட்டாராம். ஒரே ரகளை, அடுத்த ஆறு மாசத்துக்குள்ளே அந்தக்காவுக்கு கல்யாணம். பத்து அண்ணா வரது நின்னு போச்சு.என் ஓசி சைக்கிள் ரைட் கூட நின்னு போச்சு.
அதெல்லாம் பழைய கதை இப்ப நான் காலேஜ்ல ரெண்டாவது வருஷம்.எனக்குனு ஒரு ராலே சைக்கிள் வந்தாச்சு(2nd hand தான்) வார இறுதி, விடுமுறை நாட்கள்ல நண்பர்களுடன் சைக்கிள் பயணம்தான். கைல நாலணா செலவுக்கு இல்லாம மைல் கணக்குல சுத்தி, பஞ்சர் ஒட்ட காசில்லாம மைல் கணக்குல தள்ளிட்டு வந்தது, லைட் இல்லாம நைட்ல ஓட்டி போலீஸ் பிடிச்சு கோர்ட்ல மறுநாள் நிறுத்தினது, காசில்லைனு தோப்புக்கரணம் போட்டது எத்தனையோ சைக்கிள் சாகசங்கள்.
முதல்ல ஏதோ ஒரு சின்ன கம்பெனில ஸ்டோர்கீப்பர் வேலை கிடைச்சது. ஒரே வருஷம் புரொமோஷன் செக்யூரிடி ஆபிசர். கம்பெனி மேனேஜர் பரந்தாமனுக்கு என் மேல ஒரு பிரியம். தினம் சைக்கிள்ள வரயே ஒரு செகண்ஹேண்ட் மோட்டார்சைக்கிள் வாங்கிக்கோ, என் பிரண்ட் ஒரு நல்ல ஜாவா பைக் விக்கப் போறான்னார்.
எப்படி என் 200 ரூபா சம்பளத்துல பைக் வரும்.அவரே ஒரு வழி சொன்னார் ஒரு 500 ரூபா புரட்டு, மீதி எனக்கு தெரிஞ்ச பேங்க்ல லோன் வாங்கித் தரேன்னார். அம்மா கிட்ட இருந்து 300 ரூவா தேத்தினேன், சார் முடியலை 300 ரூபாதான் முடிஞ்சதுனு மேனேஜர் சார் கிட்ட சொன்னேன், சரி பரவாயில்லை வாடானு சிடில ஒரு பேங்க் கூட்டிண்டு போனார், மேனேஜர் அவரோட உறவுக்காரர். எங்கிட்ட 10 கையெழுத்து, என் மேனேஜர் கிட்ட ஸ்யூரிடினு 4,5 கையெழுத்து வாங்கிண்டு 2500 ரூபா கடன் சாங்ஷன் ஆச்சு.
அந்த ஞாயித்துக்கிழமை காலைல போய் பேங்க் ரூபா 2500, என்து 300, எங்க மேனேஜர் ஒரு 200 கொடுத்து ஜாவாவை ஓட்டிட்டு வந்து வீட்டு முன்னால நிப்பாட்டியாச்சு.( இது தான் நம்ம முதல் தங்க ரதம்)
அதுக்கப்பறம் மேனேஜர் பரந்தாமன் 200 ரூபா என் கிட்ட வசூல் பண்ண படாத பாடு பட்டார்.நான் வேற கம்பெனிக்கு வேலைக்கு போயிட்டேன், சென்னைல. பாவம் பரந்தாமன் சார் பேங்க் லோனை எப்படி கட்டினாரோ தெரியலை.
லைஃப்ல எத்தனையோ பைக் மாத்தியாச்சு, கார் வாங்கியாச்சு (இதெல்லாம் என் சொந்த சம்பாத்தியம்) ஆனா பழைய அந்த ஞாபகம்தான் பசுமையா நிக்கறது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings