2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
சோனாவிற்கு கூட பிறந்த ஒரே தங்கை மீனா. இருவரும் வீட்டில் இருந்தால் ஒரே கலவரம் தான். எப்போதுடா பள்ளிப் படிப்பை சோனா முடிப்பாள் என யோசிக்கும் அளவுக்கு இருந்தார்கள் பெற்றோர்.
ஒரு வழியாக சோனா பள்ளி படிப்பு முடிந்தவுடன் வெளியூரில் உள்ள கல்லூரியில் இடம் கிடைக்கவும் விடுதியில் சேர்த்து விட்டார்கள் பெற்றோர்.
விடுதியில் சேர்த்து விட்டு சோனாவிடம் விடைபெற்று வீட்டுக்கு கிளம்பினார்கள் பெற்றோரும் தங்கையும்.
நான்கு வருடங்கள் ஓடியது தெரியவில்லை படித்து முடித்து, இன்று ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் அளவுக்கு வளர்ந்து விட்டாள் சோனா.
மீனாவும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள். ஆனால் இருவருக்கும் சண்டை மட்டும் ஓயவில்லை.
சோனாவை கல்லூரியில் சேர்க்கும் போது ஏகப்பட்ட உடைகள் எடுத்து கொடுத்தார்கள் பெற்றோர்கள். இன்று மீனா கல்லூரிக்கு செல்லும் போது சோனாவின் உடையை எடுத்துக் கொடுத்து இந்த உடை எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. இதை நீ பயன்படுத்திக் கொள் என்று மீனாவிடம் அம்மா கூற அவளுக்கு அழுகையே வந்துவிட்டது.
வேற வழி இல்லாமல் அவளும் மனதை தேற்றிக் கொண்டு அக்காவின் உடை தானே என கல்லூரிக்கு அணிந்து கொண்டு சென்றாள்.
சோனாவிற்கு தன்னுடைய உடையை அணிந்து கொண்டு செல்வது தெரியும். ஆனால் தங்கை மீனாவே விருப்பப்பட்டு அணிகின்றாள் என நினைத்துக் கொண்டிருந்தாள்.
மீனாவிற்கு பிறந்தநாள் வந்தது. அதனால டிரஸ் எடுத்துக் கொடுப்பதற்காக கடைக்கு அழைத்துச் சென்றாள். அப்போது மீனாவின் தோழியும் டிரஸ் எடுப்பதற்காக வந்திருந்தாள்.
மீனாவை பார்த்தவுடன் என்னடி நீயும் வந்திருக்கிற என தோழி கேட்க எனக்கு பிறந்தநாள் வருகிறது தானே அதற்காகத்தான் டிரஸ் எடுக்க வந்தேன் என்றாள் மீனா.
ரெண்டு மூணு டிரஸ் புதுசா எடுத்துக்கோ, உங்க அக்கா போட்ட டிரஸ்சை தானே தினமும் போட்டுட்டு வரே, எனக்கே கஷ்டமாகத் தான் இருக்கிறது என மீனாவின் அருகே நிற்பது அக்கா சோனா என தெரியாமல் பேசிக் கொண்டிருந்தாள் தோழி.
சரிடி, நீ போய் உனக்கு பிடித்த டிரஸை எடுத்துக்கோ என சொல்லிவிட்டு கிளம்பினாள் தோழி.
சோனாவும் மீனாவின் தோழி பேசியதை கேட்காதது போல வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டிருந்தாள்.
உனக்கு பிடித்த டிரஸ் எடுத்துக்கோ என அக்கா சொல்ல ஒரு டிரஸ்ஸை மட்டும் எடுத்துக் கொண்டாள் மீனா.
இன்னும் ஒரு நான்கைந்து ட்ரெஸ்ஸை எடுத்துக் கொள் என்று சொன்னாள் சோனா.
எனக்கு வேண்டாம் அக்கா ஒரு டிரஸ் போதும் என்றாள் மீனா.
நான் சொல்வதைக் கேள் என 7 டிரஸ் எடுத்து கொடுத்தாள் அக்கா சோனா.
வீட்டுக்குச் சென்றவுடன் தன்னுடைய அம்மாவிடம் இனிமேல் என்னுடைய பழைய டிரஸ் அனைத்தையும் நாளைக்கு ஒரு பையில் போட்டு வையுங்கள். அதை நான் பெண்கள் காப்பகத்தில் கொண்டு கொடுத்து விடுகிறேன் என்று சொன்னாள் சோனா.
உன்னுடைய தங்கை தான் போட்டுக் கொண்டிருக்கிறாளே அதை எதற்கு கொண்டு போய் கொடுக்கிறாய் என அம்மா கேட்க நான் சொல்வதை கேளுங்கள் அவள் கல்லூரிக்கு செல்கிறாள். எல்லோரும் விதவிதமாக டிரஸ்ஸை உடுத்திக் கொண்டு வரும்போது இவள் மட்டும் என்னுடைய பழைய டிரஸைபோட்டுக் கொண்டு போவாளா, என சொல்லிவிட்டு தன்னுடைய வேலையை பார்க்க சென்றுவிட்டாள் சோனா.
அடுத்த நாள் காலை புது டிரஸ்ஸை அணிந்து கொண்டு மீனா சந்தோசமாக கல்லூரிக்கு செல்வதை கண்டு மிகவும் சந்தோசம் அடைந்தாள் அக்கா சோனா.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings