2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
வீட்டில் உள்ள தூசி துப்பட்டைகளையெல்லாம் ஒரு ஓரமாக குவித்து அள்ளி ஒரு கூடையில் வைத்தாள் சித்ரா.
அதிகாலை சூரிய ஒளி ஆனது வீட்டுக்குள் உதயமாகியும் சுட்டெரிக்கும் வேலையிலும் சந்துரு எந்திரிக்காமல் அமைதியாக படுத்து உறங்கினான்
ஒரு ஒரு புறமாக பார்க்க வேண்டிய வேலைகளை எல்லாம் பார்த்து முடித்தாள் சித்ரா
இன்னும் இரண்டு நாட்களே உள்ளது….உங்களுக்கு அதனால் வீட்டில் உள்ள அனைத்தையும் உடனே, சுத்தம் செய்து ஒரு ஓரமாக ஒதுக்கினால், பிறகு வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தது….
அதனால் ஆங்காங்கே பொருட்களை எல்லாம் ஒதுக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு தேவையான வண்ண பூச்சி கலவைகளை கலக்கினாள் சித்ரா
அவள் மகள் சிந்தியா அவள் கூடவே இருந்து அனைத்து வேலைகளுக்கும் உதவி செய்து கொண்டிருந்தாள்….
உங்க அப்பா எங்க போனாரு வீட்டு வேலை இவ்வளவு இருக்கு இத விட்டுட்டு எங்க தான் போனார் என்று தெரியவில்லை கடிந்து முகத்தை சுழித்து மகளை பார்த்தாள்…
காலையில எந்திரிச்சா அவரு எங்கம்மா போவார் டீ கடையில போய் டீ குடிச்சிட்டு தேவையில்லாத அரட்டை பேசிக்கிட்டு அப்புறம் மொத்தமாக வருவாரு வீட்டுக்கு மாமா நம்ம வீட்டு வேலையில் போறோம் பார்ப்போம்…..
ஒரே ஒன்று கூடி திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன…
அதேபோல் அக்கம் பக்கத்து வீட்டுக்காரரும் வெள்ளை அடிப்பது வீட்டை சுத்தம் செய்வது என்று பல வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தன….
உங்க அண்ணன் எங்க போனா அலமாரியில் இருக்க பொருளை பூராம் எடுத்து வைக்க சொன்ன ஒரு வேலையும் பார்க்க மாட்டேன்…
அவனும் இந்த திருவிழாவை நடத்தும் பசங்களோட சேர்ந்து வேலை பார்த்துகிட்டு இருக்கேன் போல இருக்கு அது வீட்டு பக்கமே ஆள காணோம்….
நேத்து நைட்டு போன இன்னும் வரவே இல்ல எல்லா வேலையும் நம்மளே பாக்கணும் தலை எழுத்து வா சிந்தியா இந்த பெஞ்சை எடுத்து அலமாரி பக்கத்துல போடு ஒவ்வொரு பொருளா இறக்கி தரேன் எடுத்து வச்சிட்டு சுத்தம் பண்ணுவோம் சரிமா அப்படியே செய்றேன் அம்மா….
அடுத்தடுத்த வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள் அதிக வேலை பார்த்ததால் உடல் அளவில் மிகவும் சோர்வாக இருந்தனர் ஆம்பள பையனை பற்றி என்ன புண்ணியம் நம்ம அவசரத்துக்கு ஒரு வேலை என்ன செய்ய தேவையில்லை பூரா நம்மளே பார்க்கிறேன் அதுக்கு இன்னொரு பொட்ட புள்ள பிறந்திருந்தால் கூட நல்லா இருந்திருக்கும் என்று புலம்பி தீர்த்தாள் சித்ரா
புலவியது ஏனோ டீக்கடையில் இருக்கும் அவருக்கு அவளது கணவன் காதுகளுக்கு எட்டியதோ எண்ணமோ மெதுவாக வீட்டிற்குள் நுழைந்தான் சண்முகம்…..
முகத்தை சுழித்த படியே எங்க போனீங்க? இவ்வளவு நேரம் எல்லா வேலையும் நானும் அந்த பொம்பள புள்ளையும்தான் பார்க்கணுமா ஏன் நீங்க? இருந்து கூட மாட உதவி பண்ண மாட்டீங்களா திருவிழா எங்களுக்கு மட்டும்தான் உங்களுக்கு இல்லையா? புது துணி மட்டும் எல்லாரும் எடுத்துக்கிறான்….
ஆனா, வீட்டு வேலையை மட்டும் யாரும் பகிர்ந்து கொள்ள மாட்டீங்க…..
அது ஒன்னும் இல்ல சித்ரா இன்னக்கி செய்தித்தாள் ஏதோ முக்கியமான செய்தி போட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க அதையும் போனேன் இந்த அரை நொடியில் எல்லா வேலையும் பார்த்து வைத்துவிடுகிறேன்…
நீ எதுக்கு கவலைப்படுகிறாய் இந்தப் பாரு அரை நொடியில எல்லா வேலையும் பார்த்து வச்சிடுறேன் என்றான் சண்முகம்…..
சரி சரி போங்க வீட்டு வேலையை பாருங்க எல்லா வேலைகளையும் ஆரவாரத்துடன் செய்து மாலை 4 மணி அளவில் முடித்தனர் இப்பதான் வீடு பார்க்க லட்சுமி கடாட்சியம்மா இருக்கு இப்ப அந்த ஆத்தாவே நம்ம கும்பிட்டா நம்ம வீட்டுக்கு வந்துருவா என்று முகத்தில் பூரிப்போடு இருந்தாள் சித்ரா….
பிறகு சாமி கும்பிடுவதற்கு தேவையான பூஜை பொருட்களையும் அம்மனுக்கு அபிஷேகம் பண்ண வேண்டிய பொருள்களையும் வாங்க சண்முகம் கடைக்கு சென்றான்…
கடைக்காரர் அதிக கூட்டம் இருப்பதால் சற்று நேரம் நில்லு சண்முகா என்றார்…..
சரிங்க அண்ணே
கூட்டம் கலைந்ததும் அவன் கூறிய பொருட்களை எல்லாம் எடுத்து கொடுத்தார்…..
எதிரில் அவன் மகன் சுந்தர் வருவதை கண்டான் டேய் வீட்டுக்கு வாடா அம்மா ரொம்ப திட்டுறா வீட்ல பார்க்க வேண்டிய வேலை நிறைய இருக்கு இப்ப வந்துடறேன் திருவிழாவுக்கு கொடுத்த சட்டத்துணிய வாங்கிட்டு வந்துடறேன் அப்பா…..
சரி சீக்கிரம் வீடு வந்து சேரு….. மறுநாள் காலையில் திருவிழா கோலாகலமாக சிக் கச்சேரியுடன் நடக்க ஆரம்பித்தது….
அதிகாலை 6:00 மணிக்கு எழுந்து குளித்து முடித்து அனைவரும் புத்தாடைகளை போட்டு சாமியை கும்பிட்டு அபிஷேகம் செய்து வீடு திரும்பினர்….
அன்று முழுவதும் தடபுடலான விருந்துகளும் வரும் உறவினர்களுக்கு வரவேற்று, அவர்களையும் உபசரித்து மகிழ்ந்தனர்….
இந்த திருவிழா என்றாலே ஒரு சிறப்பு உண்டு….
திருவிழாவுக்கு 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுவார்கள் அதற்கிடையில் யாரும் எந்த ஊருக்கும் போக கூடாது என்ற வழக்கம் இருந்தது எங்கு போயினாலும் சாயங்காலத்துக்குள் வீடு திரும்ப வேண்டும் என்ற கட்டுப்பாடும் இருந்தது….
வருடம் முழுவதும் சேர்த்து வைத்த காசை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு தேவையான பொருட்கள் தடைகள் தங்க நகைகள் வெள்ளி கொலுசுகள் என அனைத்தையும் வாங்கி திருவிழாவில் அணிந்து மகிழ்வர்….
இதனால் பெண் குழந்தைகளுக்கு வருட வருடம் நகை எடுத்து வைப்பதால் அவர்களின் திருமணத்திற்கு உபயோகமாகிறது அது போக வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களுக்கு ஒரு மகிழ்வான நாளாக இந்த நாள் அமைகிறது…..
இவர்கள் பெரும்பாலும் தீபாவளி பொங்கலை கூட பெரிதாக கொண்டாடுவதில்லை அந்த ஊரில் உள்ள காவல் தெய்வமான காளியம்மனையே தனது முதல் கடவுளாக அனைத்து மக்களும் வணங்குவர் இதுவே இந்த ஊரின் சிறப்பு எனலாம்….
சித்ராவும் சண்முகமும் அவர்களுக்கான வேண்டுதல்களை நிறைவே ற்றி வீடு திரும்பினர் மனநிறைவோடு சித்ரா அனைத்து வேலைகளையும் பார்க்க ஆரம்பித்தாள்….
இந்த முறை சிறப்பான தரிசனம் அம்மன் அலங்காரம் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சி ஏங்க? என்றாள் சித்ரா….
ஆமாம் இந்த முறை பச்சைப் பட்டுடுத்தி விவசாயிகளின் துன்பத்தை போக்கக்கூடிய வகையில்லாத ஆத்தா இருந்துச்சு சித்ரா….அழகாவும், சாந்தமாகவும் இருந்தாங்க நம்ம கேட்ட வார்த்தை கொடுத்துடுவாங்க….
அதெல்லாம் எல்லாமே நல்லபடியா நடக்கும் சித்ரா கவலைப்படாதே ஒவ்வொரு வருடமும் ஆத்தா நம்ம கேட்காம எல்லாத்தையும் அள்ளிக் கொடுக்கத்தான் செய்யுது இந்த முறை கொஞ்சம் கூடுதலா நமக்கு கொடுக்க போகுது என்றான் சண்முகம்…..
திருவிழா என்றாலே சிறப்பு தான்…. அதுவே ஜாதி மத பேதங்கள் பார்க்காமல் ஐந்து உறவின் முறைகள் ஒன்று கூடி நடத்தும் இந்த “காளியம்மன் கோவில் திருவிழாக்கு”ஒரு தனி சிறப்பு தான்…..
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings