2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
தினமும் சாம்பார் சோறா தின்னு சலிப்பு தட்டிருச்சு…. இன்னைக்காவது யாவரது ஒரு தேங்காய் உடைச்சு, பெரிய மாலையா போட்டு, சுருட்டு வாங்கி வச்சு கூம்பிட்டா உடனே அருள் பலித்து விடனும் முடிவெடுத்திருந்தார்…. கோடங்கி சின்னையா…..
அருகருகே ஊரில் உள்ள மாடசாமி,சுடலைமுத்து நல்ல குறி சென்னாலும் சின்னையா குறி சொல்லறதா கேட்குறதற்குன்னு ஒரு கூட்டமே இருக்கு…..
அதனாலவோ, என்னவோ அவருக்கு செருக்கு அதிகமாகவே தான் இருக்குன்னு சொல்லுவாங்க….
இதா விட, அவரிடம் குறி கேட்க போன கண்டிப்பாக ஒரு சேவலோ, கோழியோ கண்டிப்பாக கொண்டு போயே தீர வேண்டும்…. ஏன்னா?
அவர் ஏதாச்சும் பரிகாரம் சொல்லமா இருக்க மாட்டாரு…. அப்படி! அவர் சொல்வதை வாங்கி பரிகாரம் பண்ணிட்ட இனி வாழ்க்கையில கஷ்டமே இருக்காது….
அப்படின்னு மக்களுக்கு ஒரு “அபரிவிதமான நம்பிக்கை” இருக்கு ஆளு பார்க்க சற்று கரடு முரடா இருந்தாலும் சொல்ற கூறி மட்டும் தப்பாது….
எதுவும் காணாமல் போனாலும் சரி இல்ல ஊர்ல யாராவது ஏதாவது பிரச்சனைனாலும் சரி இவரிடம் வந்து கேட்டா எந்த ஒரு இதுக்கும் சரியான தீர்வு கிடைக்கும் என்பது மக்களோட ஒரு “ஐதீகம்”.…..
இருந்தாலும், சின்னையும் கோடாங்கிக்கு சுருட்டுமா ரொம்ப பிடிக்கும்….. அதுல ஒரு பட்ட சாராயத்தை கொடுத்தா ரொம்ப சந்தோஷமா அருள்வாக்கு சொல்வாரு அந்த “கருப்பனே நேர்ல இறங்கி கண்ணு திருதிறுன்னு உருட்டி பார்க்கிற மாதிரி நமக்கே ஒரு பயமா இருக்கும்…..
அப்படி! ஒரு சக்தி வாய்ந்தவர் இருந்தாலும், இவர ஆட்டி வைக்க வீட்ல ஒருத்தி இருக்கா அவ வேற “பொன்னாத்தாள்”, எப்ப பார்த்தாலும் சின்னயாவை குறைச் சொல்றதே அவளுடைய வேலை…..
இவே ஒரு ஆளுன்னு இவே கிட்ட வேற குறி கேட்க வந்துடறாங்க இவனோட பிள்ளைகளே! பார்க்கவே இவனுக்கு வழி இல்ல….
இதுல ஊர்ல இருக்கிற பிரச்சனையா இவே ஊர்ல இருக்கிற பிரச்சனையை எப்படி சரி பண்ண போறேன்னு தெரியலா?
என்று எப்போது அவனை சாடிகிட்டே இருப்பாள்…ஆனா, அதை அவன் பெருசா காதுல வாங்கி கிர மாட்டான்….
அவே வேலையை பார்த்துகிட்டு வழக்கம் போல அவனோட குறி சொல்லிற வேலைக்கு கிளம்பிடுவான்அன்னைக்கு கிடைக்கிற ஐம்பதோ, நூறோ, சேவலோ,கோழியோ தனக்கு கிடைத்ததை வைத்து தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வான்….
வழக்கம்போல காலைல எந்திரிச்சு குளிச்சிட்டு பட்டைய போட்டுட்டு இரண்டு சுருட்டை வாங்கி உள்ள இழுத்துட்டு தெம்பா “அருள் வாக்கு” சொல்ல உட்கார்ந்து இருந்தேன்….
இன்னையின் பார்த்தா வெள்ளிக்கிழமை அதிகமான கூட்டம் க்யூ கட்டி நின்றாங்க படிச்சவங்கள இருந்து படிக்காதவங்க வர பக்கத்து ஊர்ல இருந்து எட்டத்தூர் வரை வெளியில் வரிசையில் நின்றிருந்தாங்க….
நாலு வெத்தலை காம்பை கிள்ளி அதன் பின்பகுதியில் லைட்டா சுண்ணாம்பை தடவி வாயில போட்டு நன்கு மென்று வாயெல்லாம் சிவந்த பிறகு துப்பினான்…..
அதை புரிச் என்று துப்பி விட்டு மூன்றாம் வரிசையில் உட்கார்ந்து இருந்த மஞ்சள் கலர் சேலையை அழைத்தான்…..
என்னம்மா தெற்கு பக்கம் இருந்து வரியா வீட்ல ஒரே பிரச்சனையா வீடு கட்டினதுல இருந்து ஒரே நிம்மதி இல்லையா? புது வீட்டுன அப்படி இருக்கும்மா என்றதும்….
சற்று திகைப்புடன் பார்த்தாள்….. மகனும் சரியா படிக்க மாட்டேங்கிறானா மகளும் சொன்னபடி கேட்க மாட்டேங்கிறாள் அதுதான் உன் பிரச்சனையா என்று கேட்டான்
ஆமாங்க சாமி எப்படி சாமி இவ்வளவு கரெக்டா சொல்றீங்க…..
அதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க சாமி புது வீடு கட்டினதிலிருந்து கண் திருஷ்டி ஓவரா இருக்கு அக்கம் பக்கத்தில் ஒரே பிரச்சனையா பண்ணிட்டு இருக்காங்க….
அதனால, நான் மந்திரிச்சு கொடுக்குற இந்த எலுமிச்சம் பழத்தை நால வெட்டி வடக்கு தெற்கு கிழக்கு திசையா பார்த்து எறிஞ்சு விடு….
அது போக இந்த விபூதியை பூசி கால கழுவிட்டு திரும்பி பார்க்காம வீட்டுக்குள்ள போயிட்டேனா உன் வீட்டில் எந்த ஒரு பிரச்சனையும் நடக்காது சந்தோஷமா இருப்பா…
உன்னோட பிள்ளைகளும், உன் சொல்றபடி கேட்பாங்க வீட்டிலேயே அடிக்கடி சண்டை ஏதும் வராது இது “கருப்பனோட அருள் வாக்கு இது மாறாது தவறாது”…..
இப்படியே ஒவ்வொரு நபருக்காக அருள் வாக்கு கூறி முடித்தான் சின்னயா…..நிறைய நபர்களுக்கு பரிகாரத்திற்காக சொன்னதில் சேவல்கள் நான்கும் கோழிகள் மூன்று ரென வாங்கி வந்திருந்தன…..
வழக்கம் போல தனது முதல் வேட்டையாக சேவலை குறி வைத்தான் அதன் கழுத்தை நன்கு திருகி தலையை தீயில் வாட்டி பிறகு நெருப்பை மூட்டி அதன் உடல் முழுவதும் சுட்டு எரித்து ஒரு வட சட்டியில் போட்டு முழுமையாக மசாலா தடவி பிரட்டி எடுத்தான்….
சுருட்டை பத்த வைத்து ஊதி தள்ளி விட்டு, தட்டில் சோற்றைப் போட்டு சேவல் கறியை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தான்….
அங்கும் இங்குமாய் ஓடி விளையாட களைப்பில் அவனது மகன் அவன் அருகில் உட்கார்ந்து மீத கரியை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தான்….
பொன்னாத்தாள் விளக்கமாற்றை எடுத்துக் கொண்டு விரட்டினால் மகனை, ஏண்டி இப்ப அவனை விரட்டுற சாப்பிட்டு போறன் சின்ன பையன் தானே அவனுக்கு பசிக்காத? விளையாண்டு வந்த களைப்புல தான் சாப்பிடுறியா? விட்டுட்டு வேலை பாரு….
நீயே ஊரை ஏமாத்திட்டு திரியிற ஒரு அயோக்கியன்… அதுல கிடைச்சதுல என் மகனும் சாப்பிட்டு ஒன்னும் உயிர் வாழ வேண்டாம் வீட்டில் இருக்கிற சாம்பார் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தால் போதும்….
ஜடமாடையாக திட்டி தீர்த்தாள் சிறிது நேரம் கழித்து வீட்டு வேலைகளை பார்க்க ஆரம்பித்தால் பொன்னாத்தாள்….
மறுநாள் காலையில் எழுந்து வீட்டு வேலைகளை பார்க்க துவங்கினால் பொன்னாத்தா வழக்கம்போல குழந்தைகள் பள்ளிக்கு கிளம்ப ஆரம்பித்தனர் கூறிய கவர்ந்த அனைவரும் கூட்டம் கூட்டமாக அங்கும் இங்குமாக அமர்ந்திருந்தனர்
பொன்னாத்தாவிடம் ஒரு சில நபர்கள் குறி சொல்லும் சின்னையா அவை ஆளவே காணோம் அவர் எங்கம்மா அப்படி என்று கேட்டனர்
தூங்கிட்டு இருப்பாரு நான் பார்த்து உசிப்பி வந்து சொல்ல சொல்றேன் அப்படின்னு சொன்னா பொன்னாத்தாள்…
கதவை மெதுவாக திறந்து பார்த்தால் அங்கு மயங்கிய நிலையில் சின்னையா படுத்து கிடந்தான் அவனை பல முறை கூப்பிட்டு பார்த்தும் அவன் சற்றும் செவிமடுக்காத அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் பிறகு அவன் அருகில் சென்று உசுப்பே ஆரம்பித்தால் அதற்கும் அவன் எந்திரிக்கவில்லை
ஐயோ வேணா கத்திக் கூப்பாடு போட்டால் அனைவரும் அந்த அறைக்கு ஓடி வந்தனர் அங்கு வந்து பார்த்தால் மயங்கிய நிலையில் சின்னையா இருந்தார் பிறகு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்
அங்க மருத்துவரிடம் கேட்டபோது அளவுக்கு அதிகமாக நைட்டு குடித்து இருப்பார் போல அதனால் உடல் சரி இல்லாமல் போனது பிறகு அங்கு கூடி இருந்த கூட்டம் அனைத்துமே கலைந்து சென்றன
மருத்துவர் இவர் இதற்கு மேல் குடித்தால் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்து விடும் அதனால் இவர் குடிப்பதை நிறுத்த வேண்டும்…..
குறி சொல்றேன் என்ற பேர்ல என் அடிக்கடி அடித்த கூத்துனால தான் உனக்கு உடல்நிலை இப்படி சரியில்லாமல் போனது…
இதற்கு மேலே நீ குடிச்சேன்னா நீ உயிரோட இருக்க முடியாதா டாக்டர் சொல்லிட்டாரு இதோட நீ சொல்ற பொய்யான குறிய விட்டுடு குடியை விட்டுட்டு குடும்பத்தை பாரு என்று பொன்னாத்தாள் கூறினாள்…..
ஏய், நான் கருப்பன் வந்து இருக்கேன் டா என்று இப்ப பாத்தியா உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்ன உடனே கூட்டினா கூட்டம் எல்லாம் அப்படியே கலைஞ்சு போயிருச்சு…. உன் கூட இருக்கிறது உன் பொண்டாட்டியும், உன் நம்ம பிள்ளைகளும் மட்டும் தான் அதனால உன் குடும்பத்தை மட்டும் பாரு இதெல்லாம் நமக்கு தேவையில்லை உங்க அப்பா காலத்துல பார்த்ததெல்லாம் உங்க அப்பாவோட முடியட்டும் நீ ஒழுங்கா ஒரு வேலைக்கு போய் உன் குடும்பத்தை கவனி இதுதான் உனக்கும் நல்லது உன் குடும்பத்துக்கு நல்லது…… என்று “அருள்வாக்கு” கூறி மயங்கினாள் பொன்னாத்தாள்…..
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings