2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
எப்படியாவது இந்த முறையாவது பேங்க் மேனேஜர் கிட்ட லோன்னை வாங்கிடனும்…
இல்லைனா இன்னும் இரண்டு நாள் கடை வேற ஆள் கைக்கு போயிடும் என்று புலம்பிக் கொண்டே மணி குளித்துக் கொண்டிருந்தான்….
டேய் மணி குளிச்சிட்டயா?
இல்லம்மா…. குளிச்சிட்டு தான் இருக்கேன்….
“நாகேஷ்” கால் மேல் கால் போட்டு நியூஸ் பேப்பரை படிச்சுட்டு இருந்தாரு…..
ஏங்க…. மணிக்கு பணம் கொடுத்து உதவி பண்ணுங்க அவன் தான் டவுன்லா ஹோட்டல் வைக்கனும் ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கான்….
ஏன் அந்த ஹேட்டாலா இந்த கிராமத்துலா வைச்சா ஓடமயா போக போகுது….. அதா இங்க வைக்க சொல்லுடி….
மணி வேக வேகமாக சட்டையை எடுத்து மாட்டினான் …. அம்மா நான் போய் “சுந்தரம் மாமா” , வா பார்த்துட்டு வந்துரேன்….
சரி மணி…. பார்த்து போடா கொஞ்சமாவது சாப்பிட்டு போ…..
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…..
மணியும் அவனுடைய நண்பனும் சுந்தரம் வீட்டிற்கு சென்றனர்…..
வாப்பா மணி, மாமா அந்த கடையை எனக்கு வாங்கி கொடுங்க மாமா….. அதுலா நான் ஹேட்டால் வைச்சுக்கிறேன்….
மணி அதற்கு நிறைய பணம் செலவாகும்…. அந்த கடை 6,00,000 லட்சம் அது போக கடைக்கு தேவையான சாமான்கள் வேற வாங்க வேண்டும்…..
அப்படி இப்படி பார்த்தாலும் ஒரு ஏழு, எட்டு லட்சம் ஆகும் மணி…..
எவ்வளவு வந்தாலும் பரவாயில்லை எனக்கே அந்த கடையை கொடுங்க மாமா…..
அப்பனா, வர வெள்ளிக்கிழமை அட்வான்ஸ் காசா கொண்டு வா நம்ம போய் பேசி முடிச்சுருவோம்….
சரிங்க மாமா ……
இவ்வளவு பணத்திற்கு என்ன பண்ணுவது என்று புலம்பினான்…. அவனுக்கு தெரிந்தவர்கள் இடத்திலெல்லாம் வட்டிக்கு பணம் பார்த்தேன்…. ஆனால் யாரும் பணம் கொடுக்க முன் வரவில்லை…..
பிறகு தனது அம்மாவிடம் பேசி வீட்டு பத்திரத்தை வங்கியில் அடகு வைத்து பணம் வாங்கி தொழிலை தொடங்குவோம்…. லாபம் வந்தால் பின்னால் அதை திருப்பி தந்து விடுகிறேன் என்று சொன்னான்….
பதில் பேசாது அவள் அம்மாவும் பத்திரத்தை எடுத்துக் கொடுத்தால், பிறகு அதை வாங்கி கொண்டு வங்கிக்கு புறப்பட்டான் மணி….
வணக்கம் சார்….
வாப்பா மணி பத்திரத்தை கொண்டு வந்துட்டயா? இதோ எடுத்துட்டு வந்துடேன் சார்….
அதை வாங்கி இரண்டு, மூன்று முறை திருப்பி பார்த்து விட்டு, இந்த இடம் எந்த ஊரில் உள்ளது மணி….
மேலூர் அருகே சின்னபட்டியில் அமைந்துள்ளது சார்….
இது கிராமம் மணி …..
ஆமாம் சார்…..
வீடும் குடிசை வீடாக உள்ளது…. இடமும் கிராமத்தில் உள்ளது…. நீ கேட்கும் தொகையோ பெரியதாக உள்ளது….
எவ்வளவு தொகைக்கு இது சரி வராது மணி….. இதுக்கு போய் இவ்வளவு தொகை கொடுத்த பேங்க் அதிகாரிடம் நிறைய பதில் சொல்ல வேண்டியது இருக்கும் தம்பி….
நீ வேற எங்காவது பார்த்து ரெடி பண்ணி வைச்சுக்கோ தம்பி….
முகச்சோர்வுடன் வீடு திரும்பினான் மணி…. பத்திரத்தை அவன் அம்மாவிடமே திருப்பிக் கொடுத்தான்….
என்னப்பா மணி பணம் தரவில்லை என கேட்டாள் “சுமதி”
தர மாட்டேன் சொல்லிட்டாங்கம்மா…. இது கிராமம் அதனாலா தர மாட்டாங்களாம் அம்மா….
சரி விடு கவலப்படாத மணி அப்பா கிட்ட பேசி வாங்கி தரேன் மணி…
அவர் தர மாட்டாரும்மா…..
நாகேஷ் வீட்டுக்குள் நுழைந்தார்….. சுமதி…. சுமதி….. டீ போட்டு வா….
இந்த போட்டுட்டு வரேங்க…. சுவையான ஒரு டீ யை போட்டு வந்து கொடுத்தாள்….
அதை ‘நாவில் ருசி அறிய’ , மனதிற்கு இதமாக அமைந்தது அந்த டீ….
உனக்கென்ன வேணும் சுமதி கேள்? நான் வாங்கிட்டு வந்து தருகிறேன்…. அப்போது மணிக்கு பணம் கொடுக்க சொன்னாள் சுமதி…
முறைத்து பார்த்த நாகேஷ் பின்னர் சரி தருகிறேன்…. அவனுக்கு என்ன நல்ல பண்ண தெரியும் இந்த ஹேட்டாலை வைக்கிறான் …..
அதை மட்டும் சொல்ல சொல்லு பணம் தரேன்…..
மணி அறையிலிருந்து வெளியே வந்து எனக்கு வித்தியசமான சட்டினி. பீர்க்கங்காய் சட்னி, சுரைக்காய் சாதம், மிளகுப்பொடி ஆனியன் இட்லி, இப்படி வித்தியாசமான மெனுக்கள் ஏராளமான உள்ளதுப்பா
சுவையான, சத்துப் பொருட்கள் நிறைந்த கேழ்வரகு பாயசம், குதிரைவாலி புட்டு என்று நிறைய வித்தியாசமான மெனுக்கள் உள்ளதுப்பா….
சரி ஏதோ சொல்லற நான் உன் வீடு கட்டுவதற்காக கொஞ்சப் பணம் சேர்த்து பேங்கிலா போட்டு வைச்சுருக்கேன் அதை தரேன் …… நீ அதா வச்சு உன் தொழிலை தொடங்கு மணி…..
ரொம்ப சந்தோஷம் அப்பா….. என்று சொல்லிக் கொண்டே நாகேஷ் கட்டி தழுவி அணைத்து கொண்டேன்….
மறுநாள் காலையில் கடைக்கு போய் அட்வான்ஸ் காசை கொடுத்து விட்டு, கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தான்…
பிறகு அதை சுத்தப்படுத்தி ஹோட்டலுக்கு தேவையான பொருட்களை எங்கேங்கு வைக்க வேண்டுமோ அங்கங்கு வைத்து சரி செய்தான்….
ஒரு நல்ல நாளில் கடைக்கு திறப்பு விழா செய்து அனைவரையும் அழைத்து அவனுக்கு பிடித்தமான சமையல் வேலைகளை ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்தான் மணி….
அனைவரும் சாப்பிட்டு ஆஹா, ஓஹோ வென பாராட்டி சென்றனர்….. இருந்தாலும் அந்த மகிழ்வு இரண்டு நாளே….
இரண்டு நாட்களுக்கு பிறகு ஒருவர் கூட கடைக்கு சாப்பிட வரவில்லை….
இலவசமாக வடை, பேண்டா தருவதாக அறிவித்தேன்…. சிறிது கூட்டம் வந்தது….
பிறகு ஒரு ஆறு நாட்கள் வரவில்லை…. கடை பார்வையாக இல்லையென்று பெரிய அளவில் கடைக்கு பதகை ஒன்றை வைத்தான்….
பிறகு மெதுவாக மெதுவாக கூட்டம் வர ஆரம்பித்தது… அதான் பிறகு நல்ல முறையில் ஓட ஆரம்பித்தது….
ஒருவன் இந்த வேலைப் பார்த்த தான் நல்லவன், இந்த வேலைப் பார்த்த ஏராளமான பார்ப்பதும், சிரிப்பதும் தவற…. யார் யாருக்கு எது நல்ல வருமோ அதை பார்த்தால் வாழ்வில் சிறப்படையலாம் உதாரணத்திற்கு நம்ம மணியா பாருங்க…..
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமையான கதை சகோ வாழ்த்துக்கள் சகோ