2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இதுவரை:
கல்லூரி மாணவி காவ்யா காதலன் ஜெய்யை எதிர்பார்த்து காத்திருக்கிறாள் ..அவள் அம்மா பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக அழைக்கிறாள்.. ஜெய்யும் அதிர்ச்சி தகவலுடன் வருகிறான்
இனி:
ஆதர்ஷின் சிவப்பு நிற பி.எம்.டபிள்யூ கார் கம்பெனி காம்பவுண்டுக்குள் நுழைய, கம்பெனி சுறுசுறுப்பை பொருத்திக் கொண்டது.கார் போர்டிகோவில் நின்றதும், டிரைவர் மணி இறங்கி பின்சீட் கதவைத் திறந்துவிட, ஆதர்ஷ் இறங்கினான்.மேனேஜர் ஓடி வந்து அவனுடைய லேப்டாப் பேக்கை வாங்கிக் கொண்டார்.
“நீரஜா வந்துட்டாங்களா”
“இன்னும் இல்ல சார்…”
“அவங்களுக்கு ட்ராபிக்ல வர்றதுக்கு டைம் ஆகுதுன்னு நினைக்கிறேன். நாளிலிருந்து ஆபீஸ் கார்ல பிக்கப் பண்ணிட்டு ட்ராப் பண்ணிட ஏற்பாடு பண்ணிடுங்க”
ஆதர்ஷ் நடந்து கொண்டே கூற… மேனேஜர் வேகமாக தலையாட்டினார். வேலை செய்து கொண்டிருந்த ஸ்டாப்கள் எல்லோரும் எழுந்து அவனுக்கு” குட் மார்னிங்” சொல்ல…அவனும் பதிலுக்கு ” குட் மார்னிங்” சொல்லிக் கொண்டே தன் கேபினை நோக்கி நடந்தான் ..
கம்ப்யூட்டரை தட்டிக் கொண்டிருந்த கோபியும், மதனும் ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்து கொண்டனர் ..”உள்ளே நுழைந்ததுமே சார் மேடத்தை தேடுறார் போல.நமக்கெல்லாம் இந்த யோகமேது.. நாம பஸ்சில இடிபட்டு ,மிதிபட்டு, டயத்துக்கு வந்து சேரணும். ஆனா மேடத்துக்கு மட்டும் ஆபீஸ் கார் பிக்கப்..டிராப் பேசாம பொண்ணா பிறந்திருக்கலாம்பா”
அவர்களை கடந்து சென்ற தலை நரைத்த பியூன் ராமசாமி, “பெரிய எடத்து பேச்செல்லாம் பேசாதீங்கப்பா..ஒரு சமயமில்லை ஒரு சமயத்தில் பிரச்சனைல்ல கொண்டு விட்டுடும் .ஒருத்தர போல ஒருத்தர் இருக்க மாட்டாங்க. நீங்க பேசுறது சார் காதுக்கு போச்சுன்னா அடுத்த நிமிஷம் வேலை காலி.. நீங்க என்ன அரசாங்க உத்தியோகமா பாக்குறீங்க? பாக்கிறது தனியார் கம்பெனி வேலை.”
ராமசாமி கூறிய வார்த்தைகளின் யதார்த்தம் மனதில் உரைக்க, கோபியும், மதனும் தலையை குனிந்து கொண்டு வேலையை தொடர்ந்தனர்.
‘ஈஸ்வர் எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் இம்போட்ஸ்..’ தமிழ்நாட்டின் டாப் 5 கம்பெனிகளில் ஒன்று ..ஆதர்ஷ்ஷின் அப்பா பரமேஸ்வரன் தான் எம். டி. வயதின் காரணமாகவும், சமீபத்தில் வந்த இருதய நோய் காரணமாகவும், அதிகமாக கம்பெனிக்கு வருவதில்லை. ஆதர்ஷ்தான் முழுப்பொறுப்பையும் பார்த்துக் கொள்கிறான்.
உள்ளே வந்தவன் .. தாத்தா ஈஸ்வரின் படத்தை வணங்கி விட்டு, தன்னுடைய சேரில் அமர்ந்தான். கை தானாக போனை எடுக்க..நீரஜாவின் நம்பருக்கு போன் அடித்தான் மணி அடித்துக்கொண்டே இருக்க பதிலில்லை ..
பொதுவாக பெண்களைப் பார்த்து அதிகம் சலனப்படாதவன் ஆதர்ஷ். எத்தனையோ பெண்கள் காலேஜில் படிக்கும்போது அவன் பின்னால் சுத்த, அவன் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை.. எந்தப் பெண்ணும் அவன் மனதை கவரவும் இல்லை …
அவன் அம்மா ருக்மணிதேவி “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப்பா” என்று நிறைய பெண்கள் படத்தை காண்பித்தாலும், அவனுக்கு கல்யாணத்தில் பெரிதாக விருப்பமும் இல்லை… ஆர்வமும் இல்லை ..பிசினஸ், கம்பெனி என்று ஒரே குறிக்கோளில் இருந்தவனை சற்று அசைத்துப் பார்த்துவிட்டாள் நீரஜா…
குடும்பப்பாங்கான அவள் அழகு…அதிர்ந்து பேசாத மென்மை. எப்போதும் உதட்டில் இருக்கும் ரெடிமேட் புன்னகை எல்லாவற்றுக்கும் மேலாக அவளுடைய சுறுசுறுப்பு கெட்டிக்காரத்தனம்..இவையெல்லாம் சேர்ந்து அவள் மேல் ஒரு ஈர்ப்பை உண்டாக்கியது. நடுத்தர குடும்பத்துப் பெண் என்பதால் தன்னை பார்த்து மிரள்கிறாள்.
நீரஜா அவனுடைய பர்சனல் செகரட்டரியாக வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் தான் முழுமையாக ஆகிறது .ஆனால் எல்லாவற்றையும் சூட்டிகமாக கற்றுக்கொண்டு, கெட்டிக்காரத்தனமாக வேலை பார்ப்பதால் அவள் பேரில் ஒரு நல்ல மதிப்பு உண்டு. மெதுவாக அவன் மனதையும் கவர்ந்து விட்டாள்.
‘என்ன ஆச்சு இவளுக்கு… ஏன் லேட்டு? போன் பண்ணி விஷயத்தை சொல்லக்கூட முடியலையா?’ மனதில் எரிச்சல் மண்டியது. இல்லை ஏதாவது காரணம் இருக்கும் அவசரப்படவேண்டாம்.. போன் பண்ணுவாள் ..மனம் சமாதானமானாலும்..வேலை ஓடவில்லை..
நீரஜா நடுத்தர குடும்பத்து பெண்.. அவளை நம்பி ஒரு பெரிய குடும்பம். ஒரு தங்கையும்.. ஒரு தம்பியும்..அண்ணன் மட்டுமே டெம்பரரியாக ஏதோ வேலை பார்க்கிறான். அவனும் இன்னும் செட்டிலாகவில்லை.. ஏதோ வேலைக்குப் போய் குடும்ப பாரத்தை அவளுடன் சேர்ந்து சுமக்கிறான்.. கால் ஊனமான அப்பா.. இவளுடைய சம்பளத்தில்தான் மெயினாக குடும்பம் நடக்கிறது .
நீரஜாவின் அப்பா குமாரவேல் அந்த கம்பெனியில் வேலை பார்த்தவர். அவர் ஒரு விபத்தில் கால் ஊனமானதால் தன் அப்பாவிடம் சொல்லி நீரஜாவிற்கு தன் கம்பெனியில் வேலை போட்டு கொடுத்தான் ஆதர்ஷ் .
ஆதர்ஷ் அவளுடன் நெருங்கி பழகினாலும், நீரஜாவுக்கு மனம் முழுக்க ஒரு அவநம்பிக்கையும் பயமுமே நிரம்பியிருந்தது. எட்டமுடியாத உயரத்தில் இருப்பவர் ஆதர்ஷ். அவர் எங்கே நான் எங்கே…எனவே தான் ஆதர்ஷ் நெருங்கி நெருங்கி வந்தாலும் அவள் தன் குடும்ப சூழலை எண்ணி சற்று விலகி நின்றாள்.
நீரஜா அவசர அவசரமாக உள்ளே வந்தாள்” குட்மார்னிங் சார்! சாரி சார்..லேட்டாயிடுச்சு…சீக்கிரம் கிளம்பி வந்துகிட்டிருந்தேன் …வர்ற வழியில ஒரு ஆக்சிடெண்ட்… அதனால பஸ்ஸை திருப்பி வேற ரூட்ல போக சொல்லிட்டாங்க… அதனால ஒரு பத்து பதினைந்து இருபது நிமிஷம் லேட் ஆயிடுச்சு சார்! ..வெரி சாரி சார்”
“கூல்..கூல்..ஏன் நீரஜா இவ்வளவு பதட்டப்படுறீங்க…கரெக்டா எப்போதும் வர்றவங்க.. இன்னைக்கு லேட்னா ஏதாவது ஒரு காரணம் இருக்கும்னு புரிஞ்சுகிட்டேன். நாளையிலிருந்து நீங்க கஷ்டப்பட வேண்டாம். ஆஃபீஸ் கார் உங்கள பிக்கப் பண்ணி.. ட்ராப் பண்ணிடும்.”
” சார்.. அதெல்லாம் வேண்டாம் நான் வழக்கம்போல பஸ்ல வந்துடறேன் “
“நீங்க என்னுடைய பி.ஏ. அதனால உங்களுக்கு ஆபீஸ் காரை அலாட் பண்றதுல எந்த பிரச்சனையும் கிடையாது.”
“மற்ற ஊழியர்கள் பஸ்ஸில் வரும்போது நான் மட்டும் கார்ல வந்தா நல்லாயிருக்காது சார்! “
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீரஜா “
“சார் நான் என் சீட்டுக்கு போறேன்.. அப்புறம் இன்னைக்கு முக்கியமான அப்பாயின்மென்ட்…சாயங்காலம் ஆறு மணிக்கு’ ராக்கேஷ் எக்ஸ்போர்ட்ஸ்’ கம்பெனில ஒரு மீட்டிங் இருக்கு.. நீங்க வர்றதா சொல்லி இருக்கீங்க.”
“நீரஜா நீங்களும் என் கூட வாங்க ..”
“சார்.. ஆறு மணியின்னா முடியறதுக்கு லேட்டாயிடும். வீட்டுக்கு போறது கஷ்டம்…அதனால மிஸ்டர் சதீஷ்ஷ உங்க கூட அக்கம்பெனி பண்ண சொல்லவா “
“நோ நோ நீங்க தான் வரணும். என் பர்சனல் செக்கரட்டரி நீங்க.. உங்களுக்கு தான் நிறைய விஷயம் தெரியும். லேட்டானா நான் உங்கள வீட்ல டிராப் பண்ணிடறேன். வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிடுங்கள்”
நீரஜா மென்று முழுங்க…” நீங்க கண்டிப்பா வர்ரீங்க “என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தான்.
மீட்டிங்கு தேவைப்படும் டாக்குமெண்ட் எல்லாவற்றையும் எடுத்து பேக்கில் வைத்தாள் நீரஜா..ரெஸ்ட் ரூம் போய் முகத்தை லேசாக கழுவிக்கொண்டு ஹேண்ட் பேக்கில் இருந்த மேக்கப் ஐட்டத்தை வைத்து லைட்டாக பிரஷ் ஆக்கிக் கொண்டாள். நல்லவேளையாக இருப்பதில் ஒரு நல்ல புடவையாக கட்டிக்கொண்டு வந்திருந்தாள்.நினைவாக அப்பாவிற்கு போன் பண்ணி மீட்டிங் முடிந்து வர இரவு பத்து மணியாகிவிடும். கம்பெனி காரில் வந்து விடுகிறேன் என்று சொன்னாள்.
சரியாக ஐந்து முப்பதுக்கு ஆபீஸிலிருந்து இருவரும் கிளம்ப, பல ஜோடி கண்கள் அவர்கள் ஒன்றாக போவதை பொறாமையுடன் கண்காணித்தன..
டிரைவர் வேண்டாம் என்று அன்று அவனே காரை ஓட்ட முன் சீட்டில் அவனுக்கு பக்கத்தில் நீரஜா அமர்ந்திருந்தாள். அவளுடன் கூட பயணிப்பதே அவனுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.காரில் மியூசிக் சிஸ்டத்தை ஆன் பண்ணினான்.
முன்பே வா என் அன்பே வா ..
ஓடி வா உயிரே வா ..
முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப் பூவாய் ..
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே..
ஸ்ரேயா கோஷல் குரலில் பாடல் தேனாய் வழிய ..தலையை ஆட்டியபடி இரசித்துக் கொண்டே வரும் அவனை ஆச்சரியமாக பார்த்தாள் …எத்தனையோ தடதடக்கும் புதுப்பாடல்கள் இருக்க.. இந்த மென்மையான பாட்டு இவன் மனதை வசீகரிக்கிறது என்றால்.. இவனுக்குள் இருக்கும் ஒரு மென்மை இப்பாடலை ரசிக்க வைக்கிறது என்று நினைத்துக் கொண்டாள் அவளுக்கும் இது மிகவும் பிடித்த பாடல் ..
“நீரஜா இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. பூமிகா, சூர்யா ரெண்டு பேருடைய பாடி லாங்குவேஜ் இப்பாட்டில ரொம்ப அருமையா இருக்கும்.சில்லுனு ஒரு காதல் பாட்டுல்ல” என்றான் ஆர்வமாய்..நீரஜா பதில் பேசவில்லை.
நேராக ‘ராகேஷ் எக்ஸ்போர்ட்ஸ்’ போகாமல் கார் ஒரு பெரிய ஷாப்பிங் மாலில் நிற்க..
” என்ன வேண்டும் சார்.. பொக்கே வாங்கணுமா?”
“நீரஜா உள்ளே வாங்க சொல்கிறேன்” இருவரும் உள்ளே நடந்தனர்.
லேடீஸ் செக்ஷன் போனவன் ஒரு நல்ல அழகான விலையுயர்ந்த மாடர்ன் டிரஸ் ஐ செலக்ட் பண்ணியவன் “இதை ட்ரையல் ரூம்ல போட்டு பார்த்துட்டு வாங்க நீரஜா”
” சார் என்ன செய்றீங்க?”
“நான் சொல்றத மட்டும் கேளுங்க” என்றான் அதட்டலாக ..
ட்ரெஸ்ஸிங் ரூமிமிலிருந்து வெளியே வந்தாள் நீரஜா..அந்த டிரஸ் அவளுக்கு மிக பொருத்தமாக இருந்தது அவளுக்குன்னு அளவெடுத்து தைச்ச மாதிரி சிக்கென அவள் உடலை தழுவியபடி இருந்தது.
“என் தேவதை வானத்திலிருந்து கீழே இறங்கி வந்து விட்டது . ஹய்.. யூ லுக் சோ பியூட்டிஃபுல்… அப்படியே கட்டிப்பிடித்து என் தேவதையின் கன்னம் சிவக்க இச்…இச்…”
“உங்க கற்பனை குதிரை எங்கெல்லாம் ஓடுது… கல்யாணத்துக்கு முன்னால கற்பனையில கூட என்ன கட்டிப் பிடிக்கக் கூடாது ..”
“இதெல்லாம் டூ மச் நீரு…ஆபீஸ் கேம்பஸ் தாண்டியாச்சு நான் பாஸ் இல்ல நீ பி.ஏ. இல்ல …நாம காதல் ஜோடி புறா … லவ் பேர்ட்ஸ்…”
“என்ன ஐயாவுக்கு மூடு பிச்சிகிட்டு போகுது ..அடக்கி வாசிங்க ..”
“இப்படி ஒரு அழகு தேவதைய பக்கத்துல வச்சிக்கிட்டு சும்மா இரு.. சும்மா இருன்னு சொன்னா எப்படி இருக்கமுடியும்? “
அருகில் இருந்த ஒற்றை ரோஜாவை எடுத்து அவன் கையில் கொடுத்து “ஐ லவ் யூ சோ மச் நீரு… ஐ லவ் யூ சோ மச் …”
“சார் சார்.. ரோஜாப்பூ வச்சுகிட்டு என்ன செய்றீங்க”
நீரஜாவின் குரல் கேட்டு திரும்பினான். உண்மையாகவே தேவதையாய் புது உடையில் நின்று கொண்டிருந்தாள்.
அப்போ எல்லாம் கற்பனையா ..’மனதுக்குள் நினைத்த தெல்லாம் ஒருநாள் நிஜத்தில் உன்னிடம் சொல்லுவேன் நீரஜா’ என்று எண்ணியவன்…
“வெரி நைஸ் உன்னுடைய பழைய டிரஸ்ஸ காருக்குள்ள வச்சுக்கோங்க ..இதே டிரஸ்ல மீட்டிங்கு போறோம்” என்றான்.
ராக்கேஷ் எக்ஸ்போர்ட்ஸ் மீட்டிங்கில் பல கண்கள் ஆதர்ஷ் நீரஜாவின் ஜோடி மேலேயே இருந்தது. ஜோடி பொருத்தத்தை மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருந்தனர்.
ஆதர்ஷ் நினைத்தது நடக்குமா? நீரஜா மனம் திறக்குமா? காலம் தா ன் பதில் சொல்லும்…
(அலை வீசும் 🐳)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings