தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் என்ற குக்கிராமத்தில், ராமைய்யா என்ற ஓர் விவசாயி, அவரது மனைவி ராஜலக்ஷ்மி மற்றும் மகன் ராகவனுடன் வாழ்ந்து வந்தனர்
ராமைய்யாவும் அவரது மனைவியும், பல வருடங்களாக விவசாயம் செய்து பிழைத்து வந்தனர்
ராகவன், அவர்களது கிராமத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறை நாட்களில், ராகவனும் விவசாயத்தில் பெற்றோருக்கு துணையாக இருந்தான்
ஒரு நாள் இரவு அவர்கள் எல்லோரும் சேர்ந்து உணவு உண்ணும் போது, ராமைய்யா ராகவனிடம், “ராகவா! நீ பெரியவன் ஆயி என்னவா ஆகணும்னு ஆசை?” என்று கேட்டார்.
அதற்கு ராகவன், “அப்பா நா உங்கள மாறி விவசாயி ஆகணும். ஒளவையார் கொன்றை வேந்தனில் ‘சீரைத் தேடின் ஏரைத் தேடு’ என சொன்னது போல, விவசாயம் செய்து நெறய புகழ் சேர்க்கணும்னு நெனைக்கிறேன் அப்பா. நா ஏழை மக்களுக்கு நெறய உதவி செய்யணும் அப்பா” என்றான்
ராமைய்யாவும், ராஜலக்ஷ்மியும் அவன் கூறியதைக் கேட்டு வாயடைத்து போனார்கள்
“நீ விவசாயி ஆகணும்னு நெனைக்கிறதுல தப்பில்ல, அதுக்கு நெறய கஷ்டப்படணும் ராகவா , உன்னால அது முடியுமா?” என்று ராமைய்யா கேட்டார்.
“அப்பா கண்டிப்பா என்னால முடியும்” என்றான் ராகவன்
“நீ சின்ன வயசிலிருந்து என்னையும் உன் அம்மாவையும் பார்த்திருப்ப, நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்னு. மழை இல்லனா தண்ணியில்லாம பயிர் வாடி வீணாப் போயிரும், மழை நெறய வந்துச்சுன்னா பயிர் தண்ணில மூழ்கிப் போயிரும். சாப்பாட்டுக்கே வழியில்லாம வங்கிக் கடன் வாங்கி கட்ட முடியாம பல முறை நிறைய கஷ்டங்களை அனுபவித்துள்ளோம். பல தரவை நாம் செத்து செத்து பிழைச்சிருக்கோம். இத்தனையும் தெரிந்து நீ விவசாயம் தான் செய்யணும்னு நினைக்கறியா?” என்று ராமைய்யா கேட்டார்
அதற்கு ராகவன், “இத்தனையும் பார்த்து தான் நான் விவசாயம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தேன்” என்று கூறினான்
“நீ கல்லூரி செல்ல மூன்று வருடங்கள் இருக்கின்றன. எனவே, நல்லா யோசனை செய்து ஒரு முடிவு எடுப்பா” என்று கூறினார் ராமைய்யா
பள்ளி இறுதியாண்டில் முதல் மாணவனாய் தேர்ச்சி பெற்றான் ராகவன். பின்பு, ஏற்கனவே கூறியது போல, விவசாயக் கல்லூரியில் சேர்ந்து வேளாணமை அபிவிருத்தி மற்றும் அனைத்து நுணுக்கங்களையும் கற்றான். கல்லூரி இறுதியாண்டில் முதல் மாணவனாய் தேர்ச்சி பெற்றான்.
கல்லூரிப் படிப்பை முடித்து, அவனுடைய கிராமத்தில் அவர்களுடைய நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தான் ராகவன்
இயற்கை முறையில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மகசூலை பன்மடங்காக பெருக்கினான்.
கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து அனைவரும் பயன்படும்படி உதவினான்
ராகவன் மற்றும் அவன் ஊரில் உள்ள அனைவரும் சேர்ந்து நீர் மேலாண்மை திட்டத்தை துவங்கினர். அதன் மூலம் நீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படும்படி செய்தனர். கிராமமே செழிப்பு அடைந்து, பச்சைப் பசேலென காட்சி அளித்தது
அனைவரும் ராகவனைப் பாராட்டினர்.ராமையாவும், ராஜலக்ஷ்மியும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
சில நாட்களுக்கு பின், அந்த கிராமத்தின் வளர்ச்சியை மாநில அரசும், மத்திய அரசும் அறிந்தது. இந்தியாவின் மிகச் சிறந்த கிராமமாக அந்த கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இவை அனைத்திற்கும் காரணமாக இருந்த ராகவனுக்கு, சிறந்த விவசாயி என்ற விருது கிடைத்தது. ராகவன் டில்லி சென்று பாரத பிரதமரிடம் விருதினை பெற்றான். ராமையாவும், ராஜலக்ஷ்மியும் ஆனந்தக் கண்ணீரில் திளைத்தனர்
ராகவனுடைய கிராமமக்கள்; மற்றும் பக்கத்து கிராம மக்களும் ராகவனை பாராட்டினர்.
டில்லியிலிருந்து ராகவன் வந்ததும், அவனுடைய பெற்றோர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டனர்
ராமைய்யா ராகவனிடம், “சின்ன வயசுல நீ சொன்னது போல சாதிச்சிட்டேடா ராகவா. ஒளவையார் வாக்கான ‘சீரைத் தேடின் ஏரைத் தேடு’ என்பதை உண்மையாக்கி விட்டாயே” என்று மகிழ்வுடன் கூறினார்
ராகவனும் மற்றும் கிராமத்தில் உள்ள அனைவரும் சந்தோசமாக வாழ்ந்தனர்.
நாம் படித்த படிப்பை, நாம் செய்யும் தொழிலில் பயன்படுத்தி, நாமும் நம் சமூகமும் வெற்றி பெற வேண்டும்.
ஏதோ கற்றோம், ஏதோ வேலைக்கு சென்றோம் என இல்லாமல், நமக்குப் பிடித்த பணியை தேர்ந்தெடுத்து, ஆர்வத்துடன் அந்த பணியில் ஈடுபட வேண்டும். இதைத் தான் நாம் ராகவனின் கதையில் பார்த்தோம்.
நன்றி
வாழ்த்துக்கள்
வகுளலக்ஷ்மி எழுதிய இந்த கதைக்கு, உங்கள் எல்லோரின் சார்பாகவும் எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்
கொன்றை வேந்தன் பாவினை மையமாய்க் கொண்டு எழுதியதோடு நில்லாமல், “நாம் படித்த படிப்பை, நாம் செய்யும் தொழிலில் பயன்படுத்தி, நாமும் நம் சமூகமும் வெற்றி பெற வேண்டும். ஏதோ கற்றோம், ஏதோ வேலைக்கு சென்றோம் என இல்லாமல், நமக்குப் பிடித்த பணியை தேர்ந்தெடுத்து, ஆர்வத்துடன் அந்த பணியில் ஈடுபட வேண்டும்” என முடித்தது அருமை
எதிர்கால இந்தியாவின் தூண்கள், ஸ்தரமாய் நிறுவப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு “ஒரு சோற்று பதமே” இந்த படைப்பு. எழுத்திலும், பண்பிலும் மென்மேலும் சிறந்து, வாழ்வாங்கு வாழ வகுளலக்ஷ்மியை வாழ்த்துகிறேன்
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
மனமார்ந்த வாழ்த்துக்கள் வகுளலக்ஷ்மி!
மிக்க நன்றிங்க
மனமார்ந்த நல்வாழ்த்துகள் வகுளலக்ஷ்மி. ராகவன் எடுத்த முடிவு நல்ல முடிவு. எங்க உறவிலும் இப்படித் தான் ஒருவர் ஊரில் உள்ள விவசாய நிலங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்னும் ஆசையிலேயே விவசாயத்தில் பட்டம் வாங்கினார். ஆனால் அவர் துரதிருஷ்டம் நிலங்களை எதிர்பாராமல் விற்கும்படி ஆகி விட்டது. அவருக்கு அந்த சோகம் கடைசி வரை மறையவே இல்லை. தற்காலகட்டத்தில் இதைக் “குலத்தொழில்” என்றெல்லாம் கேலி பேசலாம். உண்மையில் எல்லாவற்றுக்கும் பாரம்பரியம் என ஒன்று உண்டே! ஆகவே தந்தை விவசாயி எனில் சிறு வயதிலிருந்து பார்க்கும் குழந்தைகளுக்கும் அதில் தானாக ஈடுபாடு வரலாம். வரணும். விவசாயியின் மகனாகப் பிறந்ததைச் சிறுமையாக நினைக்காமல் விவசாயத்தில் ஈடுபாடு கொண்டு அதற்கெனப் படித்துத் தானும் முன்னேறித் தன் கிராமத்தவர்களையும் முன்னேற்றும் இம்மாதிரி இளைஞர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். வகுள லக்ஷ்மியின் முதிர்ந்த சிந்தனையும் பாராட்டுக்கு உரியது. பல மாணவர்களும் இதைப் புரிந்து கொண்டு தங்கள் பாரம்பரியத்தை விடாமல் காப்பாற்ற வேண்டும்.
நேரம் எடுத்து விரிவான மறுமொழி அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி. வகுளலக்ஷ்மிக்கு அளித்த வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
காப்பி, பேஸ்ட் ஆப்ஷன் டிசேபிள் பண்ணி இருக்கீங்களோ?
ஆமாம் மாமி, ஒரு safetyக்கு தான். Blog நாட்கள்ல அப்படி செய்யாம, என்னோட Post எனக்கே forwardல வந்த கதையெல்லாம் நடந்தது😊. அந்த அனுபவத்தில், Copy Paste Disable செய்துட்டேன். உங்களுக்கும் கூட அந்த அனுபவம் உண்டுனு சொன்ன நினைவு
நான் கொடுத்த நீளக் கருத்துரை போகவில்லை. அதற்குப் பின் கொடுத்தது மட்டும் போயிருக்கோ?
ரெண்டுமே கிடைச்சது, பதிந்து விட்டேன், நன்றி மீண்டும்
சீரை தேடின் ஏரைத்தேடு ஔவையார் சொன்ன பழ மொழிக்கு ஏற்ப தான் படித்த படிப்பை பயண்படுத்தி ஒரு தொழிலை உருவாக்கி எல்லார்க்கும் பயண்படும் படி வெற்றியைக்கண்டது மிகவும் சிறப்பு வெற்றிப்பெற்ற கதைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍