நூலின் பெயர் : வையத் தலைமைகொள்
நூலின் ஆசிரியர் : வெ இறையன்பு
விமர்சனம் என்பது ஒரு நூலை ஒரு கருத்தை செயலாக்கத்தை படைப்பை நபரை அல்லது அமைப்பை மதிப்பீடு செய்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆகும் விமர்சனம் ஒன்றின் பயன் விலை நன்மை தீமை படைப்பின் தரம் அல்லது பிற மதிப்பீடுகளை முன் வைக்கிறது விமர்சனம் என்ற சொல் ஒரு எதிர்ம மதிப்பீட்டை பொதுவாக சுட்டுகிறது. எனவே நாம் விமர்சனம் செய்வதில் குறை நிறை சொல்வதில் தவறொன்றுமில்லை
இல்லையேல் சமீபத்தில் வந்த அழகு ராஜா என்ற திரைப்படத்தில் சித்ரா தேவி பிரியா என்ற ஒரு கதாபாத்திரத்தின் நிலை தான்……
*ஐஏஎஸ்* *ஐபிஎஸ்* என்றும் இப்பொழுது பதவியில் இருக்கிறார் என்றும் குறிப்பிடத் தேவை இல்லை இங்கு நாம் விமர்சகர் எழுதியவர் ஆசிரியர் அவ்வளவு தான் நாம் மாணவர்களுடைய விடைத்தாள்களை திருத்தும் போது எந்த மாணவர் யாருடைய பிள்ளை என்று பார்ப்பதில்லை மாணவர் விடைத்தாளில் உள்ள விடைக்கு ஏற்றாற்போல் மதிப்பெண் குறிப்பிட வேண்டும் அவர்தான் உண்மையான ஆசிரியர் அதுபோல எட்டாவது படித்தவர் எழுதிய நூலாக இருந்தாலும் ஐஏஎஸ் எழுதிய நூலாக இருந்தாலும் சரி நாம் நம் கடமையை செய்வோம். எனவே இந்த நூல் குறை கூறாதீர்கள் என அறைகூவல் செய்கிறது என்று கூறாதீர் அந்த நூலால் அறை(ரை )கூவல் மட்டுமே செய்ய இயலும் முழு கூவல் செய்ய இயலாது ஏனெனில் நிறையும் குறையும் உடன் பிறந்த இரட்டையர்கள்..
உங்கள் வீட்டு தோட்டத்தில் வந்து கத்தரிக்காய் நன்றாக உள்ளது அல்லது பூச்சாக உள்ளது என்றோ கூற இயலாது மார்க்கெட்டுக்கு வந்த கத்தரிக்காய் நன்றாக உள்ளது என்றோ பூச்சாக உள்ளது என்று கூறும் பெண்ணிற்கு விவசாயம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை..
அரிய நூலோ சிறிய நூலோ பொதுமக்களை வாசிக்க நேசிக்க வைக்கவேண்டும் விமர்சகரின் திறமையால்….. ஏனெனில் ஒவ்வொரு நூலும் ஒரு ஒரு பாடம் புகட்டும்.
*இதயத்தையும்* *மனதையும்* ஒரு நிலைப்படுத்த தெரியாதவன் முதலில் தன் நிலையை அறிய முடியாது இங்கே ஒரு நூலில் நிறை குறை எப்படி அறிய முடியும் என்னை பொருத்தவரை மனம் முடிவு செய்ய வேண்டும் இதயம் முடிவை மேல் முறையீடு செய்ய வேண்டும் அப்போதுதான் சாத்தியமாகும் ஒரு நூலின் நிறை குறைகள் நாம் சரிவர புரிந்துகொள்ள ஏன் ஒரு மாணவனின் நிறை குறையை புரிந்துகொள்ள……
ஒரு நூல் என்பது கடலினை போன்றது அதன் ஆழத்தை அறிய *உப்பு* *பொம்மையாக* போனால் அது உங்கள் *தப்பு* உதாரணத்திற்கு குழம்பின் ருசியை அறிய மிளகாய்தூள் பொம்மை செய்து குழம்பில் போட்டால் குழம்பு இன்னும் குழம்பிப் போகும் ருசி மாறிப் போகும் குழந்தையின் மனம் அறிய அம்மாவாக இருங்கள் மாணவனின் கருத்துறிய ஆசிரியராக இருங்கள் கடலின் ஆழம் அறிய பாத்தோ மீட்டராக ஆழமானியாக இருங்கள் நூல் கருத்தறிய நல்ல விமர்சகராக, வாசகராக இருங்கள்.
*கானல்* *நீர்* என்று கடமையைக் கூட தட்டிப் கழிக்க கூடாது *வாழ்க்கையே* *ஒரு* *கானல்* *நீர்தான்* ஒரு பிரச்சனை என்றால் அந்த இடத்தை விட்டு ஓடுவது தலைமை பண்பு தகுதியானது அல்ல கல்லடியோ சொல்லடியோ ஓடி ஒளிய கூடாது.
தலைமைப் பொறுப்பில் இருக்கும் பொழுது கண்டிப்போடும் கருணையோடும் இருக்கவேண்டும் கருணையோடு மட்டுமே இருக்கவேண்டும் என்று கூறுவது தாவரம் வளர தடவிக் கொடுத்தால் மட்டும் போதுமா போதாது தண்ணீரும் வேண்டும் வெப்பமும் வேண்டும். அன்பும் கருணையும் மட்டும் போதும் என்றால் எல்லைக்கோடுகளில் எல்லை வீரர்கள் எதற்கு?????
ஆசிரியர் பொருப்பு ஒரு தலைமை பண்பு தான் பள்ளியில் அதிகாரம் கண்டிப்பு இல்லையென்றால் கொரோனா முன்கொரோனா பின் என்ற இக்கட்டான நிலைதான் வரும் மாணவர்களின் நல்பண்பில் குறைபாடு ஏற்படும்.
தலைமை பண்பு அதிகாரம் கைக்கு வருவதும் போவதும் வழக்கமான ஒன்று அதிகாரத்தில் இருக்கும்போது அனைவரும் பாராட்டும் வண்ணம் இருக்க வேண்டிய அவசியமில்லை எல்லோருக்கும் பயன் தரும் வண்ணம் இருந்தாலே போதும் பயன் பெறுபவர் அனைவரும் பாராட்ட மாட்டார்கள் மழை அனைவருக்கும் பயன் தருகிறது உலகுக்குத் தண்ணீர் தந்து அதன் மூலம் விவசாய நமக்கு சோறு தருகிறார் என்பதை மறந்து வீதியில் கூறுகட்டி காய்கறி விற்பவர் இந்த மழையால் இன்றைய பொழப்பு நாசமா போச்சு என்று புலம்புகிறார் அதுபோல சில நேரங்களில் பலருக்கு நன்மை தரும் செயல் சிலருக்கு வருத்தம் ஏற்படுத்தும் இதற்காக கடமையை செய்வதில் தயங்காதவர் தான் தலைமை பண்பு மிக்கவன்.
சில நேரங்களில் பிரச்சனையை பிரச்சனையை கொண்டு தீர்வு செய்ய வேண்டும். பனிக்காலம் அதிகரிக்கும்போது ஓநாய் கூட்டம் மக்கள் வசிக்கும் இடம் நோக்கி வரும் கோழி ஆடு போன்றவற்றின் இரத்தைத் கத்தியில் தடவி
வைப்பார்கள் அந்த ஓநாய் கடிக்கடிக்க அதன் நாக்கு கீழே விழ அதை தன்நாக்கு என்று தெரியாமலேயே கடித்து தின்று இறந்து போகும்.
இனி இறையன்புவின் நம் மூளைக்கான இறை இதோ
வையத் தலைமை கொள் இதில் 46 நெறிகள் உள்ளன. ஒவ்வொன்றும் மிகச் சிறப்பு
உழைப்பே உயர்ந்த ஓய்வு ஓய்வு என்பது ஒன்றும் செயல் இல்லாமல் இருப்பது அல்ல ஒன்றிலிருந்து இன்னொன்று செய்கைக்கு சென்று மூளையில் பயன்படுத்தாத பக்கங்களையும் புழக்கத்திற்கு கொண்டு வருவது.
எந்த ஒரு மகத்தான செயலையும் தொடங்குகிறவர்கள் பெரிய நோக்கத்தை கக்கத்தில் வைத்திருக்க வேண்டும் அதை அடையும் வரை இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
தோல்வி தலைமையில் சகஜம் வழக்கமான வெற்றியை விட வித்தியாசமான தோல்வி மேன்மையானது அடிபணியும் சமரசத்தை விட நெஞ்சம் வளையாத தோல்வி மகத்தானது.
எதிர்பாராத திருப்பங்களையும் யூகிக்க முடியாத முடிவுகளை மேற்கொண்டு அனைவரையும் இருக்கையின் நுனியில் இருக்க வைத்தவன் சீசர்.
எதிர்ப்புகளோடு வளர்ப்பவர்களும் ஆபத்துக்களோடு வாழ்பவர்களும் அசாத்திய துணிச்சலை வளர்த்துக் கொள்கிறார்கள்.
எந்த மிகப்பெரிய பிரச்சினைக்கும் தீர்வு உண்டு கொஞ்சம் ஆழமாக யோசித்தால் எந்த நெருக்கடியையும் சந்திக்க முடியும்.
கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய நேரத்தில் தண்டித்தும் கனிவு காட்ட வேண்டிய நேரத்தில் கனிவு காடி வழி நடத்துபவர்களே சிறந்த தலைமை பண்பாளர்கள்.
பரிகசப்புகளே முன்னேறத் துடிப்பவர்களுக்கு பரிசளிப்புகள்.
காயம் அடையாமல் கனவை நனவாக்க முடியாது இரத்தம் வழியாமல் போரில் வெற்றி கொள்ள முடியாது.
ஏமாற்றங்களின் மூலம் தான் நாம் எழுச்சி பெறுகிறோம் ஒவ்வொரு ஏமாற்றமும் நமக்கு படிப்பினையை கற்றுத்தருகிறது.
வரலாற்றைப் படிக்கும்போது தலைவர்கள் பிறப்பது இல்லை உருவாகிறார்கள் என்பது நாம் உணரமுடிகிறது குறிப்பிட்ட அம்சங்களோடு பிறந்தால்தான் ஒருவன் தலைவராக முடியும் என்பது இல்லை சாமுத்திரிகா லட்சணம் என்று எதுவுமில்லை. தேவையெல்லாம் உழைப்பு படிப்பு முயற்சி யூகம் யுத்தி வைராக்கியம் தன்னம்பிக்கையை நேர்மை.
பணியில் யார் வேகமாக இருக்கிறாரோ அவரே வெற்றி பெறுகிறார் அவசரம் வேறு வேகம் வேறு பணிகளில் கவனம் செலுத்தினால் அது வேகம்.
நிறைகள்
ஒவ்வொரு வரியிலும் ஒரு வெற்றியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பது புரிகிறது
தன்னம்பிக்கை அள்ளித் தருகின்றன ஒவ்வொரு வார்த்தையும் உழைப்புக்கு உயர்வு உண்டு அச்சம் வேண்டாம் என்கிறார் அஞ்சாத ஆசிரியர்.
ஒப்பற்ற நாயகர்கள் என்று யாரையும் முழுமையாக கூறிவிடமுடியாது சின்னச்சின்ன குறைகள் தவிர்க்க முடியாதவை ஆசிரியர் அழகாக கூறியுள்ளார்கள்.
46 நெறிகள் ஒவ்வொன்றும் ஒரு ஒரு கதையைச் சொல்கிறது மிகச் சிறப்பு.
குறைகள்
புத்தகத்தின் முதல் பகுதியில் வெளிநாட்டு கண்டுபிடிப்பாளர் அறிஞர் கவிஞர் இவர்களை கூறிவிட்டுத் தான் உள்நாட்டு பெருமையையும் தமிழ் நாட்டின் பெருமையையும் கூறுகிறார். எடிசன் நெப்போலியன் கன்பூசியஸ் கிரேக்க ஞானிகள் பற்றி கூறிவிட்டு பின்புதான் நம்மவர்கள்…
முதலில் நாம் நம்மை நாமே மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா….
விளம்பரத்திலும் படப்பிடிப்புகளிலும் வெளிநாட்டு பிள்ளைகளை வைத்து படம் எடுக்கிறார்கள் என்றால் நமது மிகச்சிறந்த ஆசிரியரான இவர்களும்….
குலதெய்வத்தை கொண்டுதானே பூசை ஆரம்பிக்கணும் பிறகுதானே பிற தெய்வங்கள்
நன்றி வணக்கம்
வாசிப்பை நேசிக்கும்……..
ச.பூங்குழலி
வடசேரி
தஞ்சாவூர் மாவட்டம்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings