in ,

வயது கடந்த காதல் (சிறுகதை) – வித்யாஸ்ரீ. S

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

லக்ஷ்மி காலை எழுந்தவுடன் கோலம் போட்டு, உள்ளே சமயல் அறையில் சென்று காபி போட்டு கணவர் கோபாலுக்கு. குடுத்து விட்டு மாமியார் அறைக்குள் சென்று முதல் வேலையாக டிவி ஸ்விட்ச் தட்டி  சங்கரா சேனலை போட்டு விட்டு  வெங்கடேச சுப்ரபாதம் ஓடிக் கொண்டிருந்தது.

அவள் மாமியார் பங்கஜம் வயதானவர்.. அவருக்கு குளிப்பாட்டி சிஷ்ருஷை எல்லாம் சிரித்த முகத்துடன் செய்தாள். பிறகு காலை சிற்றுண்டி மதியம் சாப்பாடு சற்று பரபரப்பாகவும் மிகுந்த அன்பு அக்கறையுடன் கட்டி முடித்தாள்.  ஆர அமர்ந்து காபி தனக்கு போட்டுக்கொண்டு.  சமையல் அறையில் கண் மூடி இறைவனை மனதில் நினைத்து ருசிச்சு குடிக்க தொடங்கினாள்.

திடீரென ஒரு கணீர் குறல். “ஏய். சனியனே என் ஆபீஸ் ஃபைல் எங்கே ? பத்து நிமிடத்தில் கிடைக்கவில்லை என்றால் செருப்பு பிஞ்சு…”.  அவளுக்கு கண்ணீர். வரவில்லை கோபம் துளிக்கூட வரவில்லை ஏனென்றால் இதெல்லாம் பழகிவிட்டது.

அவள் அழகான பெயர் சீதா லக்ஷ்மி, அவளுக்கு மறந்து விட்டது. வீட்டில் எல்லா இடங்களிலும் தேடி மூச்சு வாங்க ஓடி கண்டுபிடித்து அவன் கையில் கொடுத்தாள்.

“சரி சரி போ வேலைய பார்” என்று எரிச்சலை முகத்தில் காட்டினான்.

அவள் படித்த பட்டதாரி, குணத்தில் அரசி, அழகில் களையான முகம், அன்பு  கலந்த பண்பு புன்னகை.

அவள் எதிர்பார்த்தது கார் பங்களா வசதி அல்ல,  அன்பான பேச்சும் உற்சாகம் தன் மனதின் குரல் தான். சிறிதளவு சாதனை செய்யவேண்டும் நல்ல திறமைசாலி நம் பள்ளியில் பாராட்டு வாங்குவது போல் …..தனக்கு ஓரு அங்கீகாரம்.

மீதி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு  பூஜை செய்து மாமியாரின் கூப்பிட்ட குறலுக்கு ஓடி கவனித்து அவருடன் உட்கார்ந்து அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை அனுபவங்களை கேட்டு விட்டு மதியம் ஹாலில் சற்று நேரம் டிவி பார்ப்பாள் ….

அவள் மனதில் ஆறாத ரணங்கள் , கண்ணீர் சொல்லும் ரகசிய வேதனைகள் , சத்தம் நினைவூட்டும் அனாகரீக வார்த்தைகள் , தட்டு டம்பளர் பறந்த வினாடிகள் .  இந்த மன குமுறல் யாரிடம் சொல்வது .

நம் பாரம்பரியம் அம்மா வீட்டில் ” நீ தான் கொஞ்சம் விட்டு கொடுத்து போகணும் பாவம் மாப்பிள்ளை ஆபீஸில் என்ன டென்ஷன , வேர யாரு மேல் காட்ட முடியும் “.  அவள் மாமனார் இருந்த வரை மகனை கண்டித்து லக்ஷ்மிக்கு ஆறுதலாக இருந்தார்..

இப்போது அவளுக்கு எல்லாம் இருந்தும் இல்லாதது போல் ஒரு அனாதை போல் அடி மனதில் உணர்ந்தாள். பக்தி சேனல் தினமும் பார்ப்பாள்.

ஒரு நாள் வேதனையில் அந்த சேனல் அலைபேசி எண்ணை டயல் செய்துபேசினாள்.  எதிர் முனையில் ” ஹலோ சொல்லுங்க ” என்று ஒரு குறல் நான் கணேஷ் பேசறேன்….

“சார் நா லக்ஷ்மி பேசறேன்… அந்த விளக்கு பூஜை எங்கே நடக்கிறது எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்”  என்று  கேட்டு விட்டு அலைபேசியை வைத்தாள் .  ஏனோ. அவள் மனதில் ஒரு அமைதி அந்த நிதானமான கூரிய பதிலில் அவர் பேச்சில் … எதிர் முனையில் யார் , எங்கே இருக்கிறார் , சேனலில் பணிபுரியும்  ஆஃபீஸ் பையனா இல்லை சேனல் நிர்வாகியா எதுவும் தெரியவில்லை . பேஸ்புக்கில் அவர் பெயரை தேடினாள் .

ஆம் அவள் நினைத்தது போல அவர் சேனல் ஓனர் தான் . அடுத்த வாரம் திரும்பவும் போன் செய்தாள் .

“சொல்லுங்க மேடம் போன் வாரம் பேசின லக்ஷ்மி தானே நீங்கள் … விளக்கு பூஜை போனீர்களா ? “

ஓ என்று அழ தொடங்கினாள் லக்ஷ்மி . ” நா ரொம்ப பெருமையாகத்தான் இருக்கேன் … என்ன யாருக்கும் பிடிக்கவில்லை சார்”…..என்றாள் .

“கவலை படாதீங்க மேடம் நான் உங்களுக்கு ப்ரார்த்தனை செய்கிறேன்” என்றார் கணேஷ்.

சற்று மனபாரம் நீங்கியது போல் உணர்ந்தாள்.  அடுத்து வரும் நாட்களில்  அவள் வாட்ஸ்அப் பில் அவள் கவிதைகள் , கட்டுரைகள் அனுப்பினாள்.  பாராட்டுக்கள் குவிந்து அவள் இரண்டு  டீனேஜ் குழந்தைகள் தாயாகியும். காலேஜ் பெண் போல் அவளை உணர்ந்தாள்.  அவள் பாரதி பாடல் இளையராஜா மெல்லிசைகள் ஆடியோவை அனுப்பினாள் .  கணேஷ் ஆபீசில் கேட்டார் .

  வீட்டில் பார்க்க முடியாது ஏனென்றால் அவருக்கும் மனைவி கலா மகன் ராஜேஷ் .  கணேஷ் 15; வயது  மூத்தவர் லக்ஷ்மியை விட .. அன்புக்கு வயதேது. யாரென்று தெரிவதர்க்கு இருவரும் அவரவர் குடும்ப புகைப்படங்கள் அனுப்பின.   நீங்கள் ஒரு தலை ராகம் ஷங்கர் போல் இருக்கீங்க என்று எழுதினாள்.

கணேஷ் படித்து சிரித்துக்கொண்டே தனது பிலிம் இன்ஸ்டியூட் சென்னையில் படித்து  பி எஸ் ஹை ஸ்கூல் மைலாப்பூர்  நினைவில் வந்தது.அவரும் நீ அழகா இருக்கிறாய் என்ற பதில் கொடுத்தார்.

இருவரும் என்னதான் புத்துணர்ச்சி பெற்றாலும் அவர்கள் கடமையை குடும்பத்தை மறக்கவில்லை அவர் மனதில் கிழித்த கோடுகள் தாண்டவில்லை.

ஏதோ போன் ஜென்ம பந்தம் என்று தோன்றியது இருவருக்கும் .   இந்த உலகம் ஆனால் வேறு விதமாகத்தான் நினைக்கும். ஆனால் அவளுக்கு அவரை ஒரு முறை சந்தித்து கை கூப்பி கண்ணீர் மல்க நன்றி உங்கள் அன்புக்கு என்று சொல்ல தடித்தது மனசு …அவர் இருப்பதோ அடையார் தாண்டி ரொம்ப தூரம்.

 ஆனால் தினமும் அவள் கஷ்டங்களை சந்தோஷங்களை தவராம பகிர்ந்து மகிழ்ச்சி அடைவாள்.அவள் இயல்பாக தானாகவே இருந்து தன்னையே நேசிக்க ஆரம்பித்தாள்.

கொஞ்சம் நாள் கழித்து ஒரு நாள் அவள் மொட்டை மாடியில் துணி உணர்த்தும் தருவாயில் அவளுக்கு பிடித்த முகம் எதிர் வீட்டு பால்கனியில் பார்த்தாள் .  இது கனவா நிஜமா அவள் கற்ப்னையா என்று சிலை போல் ஸ்தம்பித்து நின்றாள்.

கை ஆட்டினார் கணேஷ் , பரவசம் அடைந்து ஆனந்த கண்ணீரில் மூழ்கி கைகூப்பினாள் .எதிர் வீட்டு ஆண்டிக்கு சொந்தம் என்று அடுத்த நாள் அரிந்துகொண்டாள்.

சுடும் வெயிலில் அவரையே பார்த்துக்கொண்டு நின்றுவிட்டாள் .  அந்த பார்வையில் அன்பு அவர் மேல் மரியாதை  நன்றி. உணர்ச்சி மட்டுமே இருந்தது.

அவரை முதல் முறை பார்த்து போல் அவள் உணரவில்லை.  ஆயிரம் ஜென்மங்களாய் அவர் தன்னை புரிந்துகொண்டது போல் , அவரை ஒரு சிறந்த வழிக்காட்டியாக , அன்பு தரும் தந்தையாக , பெண்களை மதிக்கும் நல்ல ஆணாக உணர்ந்தாள்.  அவள் விடை பெற்று கீழே எறங்கும் வரை திரும்பி அவரையே  பார்த்துக்கொண்டு  அவரும் அவளையே பார்த்து மனமின்றி சென்றார்.

அப்படியே காலங்கள் உருண்டோடின இருவர் குழந்தைகள் காலேஜ் வரை வந்தன.

அவள் கண்கள் விசேஷ நாட்களில் அவரை தேடும்,  யூட்யூபில் அவர் நிகழ்ச்சியில் வந்தால் உடனே பார்த்து பாராட்டு தெரிவிப்பார்.

 சில காலம் கணேஷுக்கு.  போன் வரவே இல்லை அவளிடம் இருந்து. அவரும் புது எண்ணில் இருந்து கால் வந்தால் ஒரு வேளை லக்ஷ்மி என்று நினைத்து ஏமாற்றம் அடைவார்.

ஆனால் இந்த எட்டு ஆண்டுகளாக அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவர் திருமண நாள் அவர் மகன் பிறந்தான் எதுவுமே மறக்கமாடாள்.

சில நாட்கள் கழித்து மதியம் தூங்கி கொண்டிருக்கும் கணேஷ் ஏதோ புது எண் போல் இருக்கே என்று எடுத்தார்.  ஓ. என்று விக்கி அழும் குறல்….

“என்னங்க. நா இந்த நாட விட்டு போறேன். அவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைச்சிருக்கு. திரும்பி வரா மாதிரி இல்லை என்று சொல்றாங்க எல்லாரும் . இத்தனை நாள் என் போனை பிடுங்கி வைத்து விட்டார். அமெரிக்கா போய் பேச முடியுமா தெரியவில்லை.  என்றைக்காவது. ஒரு அனாதை பெண் உங்களை நேசித்தாள்  முடிஞ்சா நினைத்து பாருங்கோ. எப்போதாவது இந்தியா வந்தா உங்கள் ஆஃபீஸ்ல சந்திக்கிறேன் . நீங்கள் புதிதாக கட்டிய கோவிலுக்கு வெள்ளி விளக்கு நான் ட்யூஷன் எடுத்ததில் வாங்கி வைத்திருக்கிறேன்.அடுத்த பிறவியிலாவது உங்களுக்கு சேவை செய்ய உங்கள் மனைவியாக ஆண்டவனை வேண்டுகிறேன் ” அழுதுகொண்டே சொல்லி முடித்தாள்

கனத்த மனதுடன் கணேஷ் தூக்கம் கலைந்து .

“ஏ ண்டி.  எவ்வளவு தரவை என் ஆயுள் முடியும் வரை நீங்கள் சென்னையிலே இருங்க என்று சொல்லி விட்டு என்னை இப்படி ஏமாத்திடியே”

இது கடல் தாண்டிய காதல் அல்லது வயது கடந்த காதல் என்று சொல்லலாம்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    என்னைச் சொல்லிக் குற்றமில்லை (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 20) – தி.வள்ளி, திருநெல்வேலி