2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ஏப்பா… ஏய்… என்ன வேலை பாக்குறீங்க எல்லாரும்…?” என்று காலையிலே சத்தம் போட்டு கொண்டு ஒர்க் ஷாப் உள்ளே நுழைந்தார், ஜே.கே.ஆட்டோ ஒர்க் ஷாப் மேலாளர் துளசிராமன்.
“பாதி வண்டி டெலிவரி கொடுக்கல …கஷ்டமர் எல்லாம் காட்டுகத்து கத்திட்டுப் போறாங்க …எங்கயா அந்த மோகன்…?!”
நூறு பேர் வேலை பார்க்கும் அந்தப் பிரிவுக்கு மோகன் தான் சீப் மெக்கானிக். மிகச் சிறந்த வேலை நுட்பம் தெரிந்தவர்….. வண்டிகளைக் கண்ணால் பார்த்தே பிரச்சனை என்ன என்று சொல்லிடுவார் .
அனைவரும் தலையைக் கவிழ்ந்த வண்ணம் அவரவர் பரபரப்பாக வேலை செய்துக் கொண்டிருத்தனர் .
“எந்த மங்குனியாவது வாய் தொறக்குதா பாரு…யாரது சொல்லங்கப்பா …எங்க அந்த மோகன்…?”
மோகனுக்கு அடுத்த நிலையில் இருந்த கலையரசன் தான் வாய்த் திறந்தார்.
“சார் …இன்னிக்குத் திங்கக்கிழம…உங்களுக்குத் தெரியாதா …?”
“அடச்சே…இதே ரோதனையாப் போச்சுப்பா இந்த மோகனோட.. .திங்கக்கிழம ஆனா ஆள் வேலைக்கு வர்ரதில்ல… கஷ்டமர்கள் போட்ட சத்தத்துல இன்னிக்குத் திங்கக்கிழமை என்பதே மறந்துப் போச்சு …சரி சரி …அவன் வரலேன்னா என்ன ….இன்னிக்கு சாயந்திரதுக்குள்ள ஒரு வண்டியும் பெண்டிங் இருக்கக் கூடாது ….முடிச்சிடனும் ..கலை எல்லாம் நீதான் பாத்துக்கணும்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
புதுசா சேர்ந்த பையன் ஒருத்தன் …கலையரசனிடம் வந்து … “அண்ணே …மோகன் சார் ஏன் திங்கக்கிழமை வேலைக்கு வர்ரதில்லை …?”
“எல்லோருக்கும் சனி ஞாயிறு ரெண்டு நாள் லீவு …அண்ணாத்தைக்குத் திங்களும் லீவு”
“அவருக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகையா ..?”
“சலுகையும் இல்ல சாம்பாரும் இல்ல”
“பின்ன ..?”
“அவரு தினமும் மாலையில ஒரு கட்டிங் போடுவாரு ….ஆனா சனி ஞாயிறுல மாலை வரைக்கும் குடிப்பாரு …அப்புறம் திங்கக்கிழமை எப்படித் தெரியும் …?”
“ஓ …”
“என்னடா ஓ …அந்த பத்து பன்னெண்டு ஸ்பானர் எடுத்து …நட்டு எல்லாம் டைட் பண்ணு …”
“சரிங்க அண்ணே …இன்னும் ஒரே ஒரு சந்தேகம் ….இப்படி இருக்குறவரை ஏன் இன்னும் இங்க வைச்சிருக்காங்க ..?!”
“அடேய்… ஆளு வேலைக்குன்னு வந்துட்டா தொழில் சுத்தமா செய்வாரு …குறித்த நேரத்துல எல்லாம் முடிச்சிடுவாரு… அதான் இன்னும் தூக்கமா இருகாங்க…”
செவ்வாய், புதன், வியாழன் போனது…. மோகன் வரவில்லை…துளசிராமன் வெள்ளிக்கிழமை ஒர்க் ஷாப் வந்தவர்… “என்ன கலை மோகன் ஒருவாரம வரல …உனக்கு ஏதாவது தகவல் தெரியுமா..? அவுங்க வீட்டுக்கு போன் ஏதாவது போட்டியா…?”
“இல்ல சார் ….நான் போன் பண்ணினா அந்த அம்மா கண்டபடி திட்டுது …வேணும்னா நீங்களே போட்டுப் பாருங்க”
“நீ சரியான ஆளுதான்யா…அந்த செந்தமிழ்ச் சொற்பொழிவை நானும் கேட்கணும் அப்படித்தானே?!”
“யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”
“சரி நானே போன் போடுறேன்…”என்று தனது அலைபேசியிலேயே மோகனுக்கு அழைப்பு விடுத்தார் …கொஞ்ச நேரம் ரிங் போன பின்னர் ….மறுமுனையில் ஒரு பெண் குரல்….
“ஹலோ ….”
“அம்மா …நான் ஜே.கே .ஆட்டோ ஒர்க் ஷாப் மேனஜர் துளசிராமன் பேசுறேன்….மோகன் இருக்காரா…?”
“அந்த நாய் இல்ல சார்…?”
“எங்கப் போனார்…?’’
“அந்தப் பொறம்போக்கு எங்கப் போச்சு…நான் தான் போக வச்சேன்…”
“என்னம்மா திகிலுட்டுற …? நீதான் அனுப்பி வைச்சேன் என்றால் ….போட்டு தள்ளிட்டியா…”
“இல்ல சார்… ஞாயித்துக்கிழமை…மீன் வாங்கிட்டு வந்து தண்ணிய போட்டுட்டு வறுத்துக் கொடுக்கச் சொல்லி ரவுசு பண்ணான்… உட்டேன் செவுளிலே ஒண்ணு …அப்பிடியே மயக்கமடிச்சி உழுந்துட்டான் …என்ன பண்றதுன்னு தெரியல …அப்பதான் எங்க அக்கா பையன் போதை மறுவாழ்வு மையம் பற்றிச் சொன்னான் …அங்க தூக்கிட்டுப்போய் அந்தக் குப்பையைக் கொட்டிட்டு வந்திருக்கோம்”
“அப்படியா…இனிமே மிஸ்டர் மோகனை…அவன் இவன் அப்டின்னு கூப்பிடாதமா”
“ஏன் சார்…?”
“மது போதைக்கு அடிமையானவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட்டால், அவர்களின் தகுதிக்கேற்ப அரசாங்கத்தில் வேலை கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்காங்க. அரசின் திட்டம் நல்லதுதான் …எப்படியும் மோகனுக்கு அரசு வேலை கிடைச்சுடும்…சரி நாங்க வேற ஆள் பார்த்துக்குறோம்”
“அப்படியா சார் ..கவர்மெண்ட் வேலை கெடச்சிடுமா சார் அவருக்கு?”
“கிடைக்கும் ..ஆனா…”
“என்ன சார்…”
“வேலை கொடுக்கும் பொது டாஸ்மாக் மேற்பார்வையாளர் ,டாஸ்மாக் விற்பனையாளர் வேலை கொடுத்துடப் போறாங்க…”
“ஏன் சார் ..அதான் திருந்தி வருவாரே…?”
மீண்டும் வந்து பாட்டிலை பார்த்ததும் கை நடுங்குதோ இல்லையோ? மனசு நடுங்கிடப் போகுது .. சரிமா நான் வைக்கிறேன்.”
மோகனின் மனைவிக்கு நடுக்கம் உண்டானது
(நிறைவு)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமையான கதை!
நன்றிங்க
நன்று.
நன்றி ஐயா