2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
செழிப்பாய் இருந்த “காடையூர்” கடந்த 5 வருடங்களாப் பஞ்சத்தில் உழன்று கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் “காடையூர் வெள்ளையம்மா” கோவில் மணி காணாமப் போனதுதான் என்று பரவலாகப் பேச்சு.
இரவு உறங்கிய பறவைகளும், அதிகாலைக் கதிரவனும், “காடையூர்” மக்களும் விழிப்பது அந்தக் கோவிலின் மணியோசையில் தான். யாரந்த மணியை அடித்தார்கள் என்று இன்றுவரை தெரியாது. புது மணியொன்று வாங்கி வைத்தனர்…ஆனால் அதிகாலையில் ஒலி மட்டும் கேட்கவில்லை.
ஊரில் உள்ள பெரியவர்கள் ஒன்று கூடினர்….
“வெள்ளையம்மா கோவில் மணி பல நூற்றாண்டா இருக்குது …அது காணாமப் போனதுதான் நமக்கெல்லாம் இந்தச் சோதனை….புது மணி வச்சியும் அந்த அம்மா ஏத்துக்கல…அதனால எப்பாடுபட்டாவது அந்தப் பழைய மணியைக் கண்டுபிடிப்போம்” என்று முடிவு செய்தனர்.
ஆண்கள் எல்லோரும் கோவிலிலிருந்து அருகில் இருக்கும் காட்டில் தேடலைத் தொடங்கினர்….ஒருவாரமாக நடந்த தேடலில் எதுவும் கிடைக்கவில்லை.
அந்த ஊரில் ஆடுமேய்க்கும் இளம்வயது பெண் “ராசாத்தி”……
ஒருநாள்…வழக்கமாகப் போகும் காட்டுப் பகுதிக்குச் செல்லாமல்……ஆடுகள் புதிய பகுதிக்கு ஓட்டமெடுத்தன ….துரத்திக் கொண்டு போனவள்…..அழகான செவ்வல்லிப் பூக்கள் நிறைந்த குளம் ஒன்றினைக் கண்டாள் …அக்குளத்தில் அருகே காட்டு கொய்யா மரம் ஒன்று…கிளிகள் மற்றும் அணில்களின் சத்தத்தில் நிறைந்து காணப்பட்டது.
கையில் கிடைத்த கல்லை எடுத்துக் கொய்யாமரத்தில் வீச …அணில்கள் தெறிக்க ஓட …கிளிகள் பல திசையில் பறக்க ….அடிபட்ட கொய்யா தரை நோக்கி விழுந்தது…..விழுந்ததும் ஆப்பிளாக மாறியது.வியப்பும் பயமும் தொற்றிக்கொள்ள …கீழே கிடந்த ஆப்பிளை எடுக்க …ஒவ்வொன்றாக மறையத் தொடங்கின …இதெல்லாம் எதோ காட்டில் மாந்த்ரீகம் செய்வோரின் வேலையாக இருக்குமென்று எண்ணி …வேகவேகமா ஆடுகளை வளைத்துக் கொண்டு திரும்பினாள் ….அப்பொழுது கொய்யா மரத்திலிருந்த ஒரு மனிதக் குரங்கு.
“பயப்படாதே …உன்னால் ஒரு காரியம் ஆகவேண்டி இருக்கிறது ….ஒரு ஆப்பிள் அங்கே இருக்கிறது பார் …அதை எடுத்துக்கொண்டு உன் வீட்டிற்குப் போ …அது நீ கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லும் ” என்று சொல்லிவிட்டுத் தாவிவிட்டது.
அந்த ஆப்பிளை எடுக்கலாமா? வேண்டாமா?…கொஞ்ச நேர குழப்பத்திற்குப் பின் ….ஆப்பிள் பழத்தால் தானே ஆதாம் ஏவாள் கதையே நமக்குத் தெரிந்தது என்று முடிவுக்கு வந்து அதை எடுத்து தன் சேலையில் முடித்து இடுப்பில் சொருகிக் கொண்டு …வான் நோக்கி சூரியனின் திசை பார்த்து தன் ஊர் நோக்கி ஆடுகளை ஓட்டிச் சென்றாள்.
அன்று மாலை ….ஆடுகளைப் பட்டியில் அடைத்துவிட்டு ….அந்த ஆப்பிள் பழத்தை எடுத்து, “இதனிடம் என்ன கேட்கலாம்” பசு மாடு ஓன்று வளர்க்கலாமா என்று கேட்கலாமா? …..நான் பணக்காரி ஆகுவேனா? வீடு கட்டுவேனா?..ச்சே …என்ன இது ….என்னப் பத்திய கேள்வியாவே தோணுது ….? மழை எப்ப வரும்….? ஊருல பஞ்சம் எப்ப நீங்கும்? மக்கள் மீண்டும் செழிப்புடன் வாழ்வாங்களா? இப்படிக் கேட்கணும்” முடிவுக்கு வந்தவள் அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்க ….ஆப்பிள் பதில் சொல்லாமல் போன கவலையோடு, பசிமயக்கம் வேறு சேர்ந்து கொண்டது” அப்படியா உறங்கிவிட்டாள் .
அதிகாலை வெள்ளையம்மா கோவில் மணியோசை சத்தம் ராசாத்திக்கு கேட்டது……
ஒரு பெண்… சுடாத பச்சை மண் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து…… காளமாட்டை ஏரிலோ வண்டியிலோ பூட்டிவதற்கு நல்லா முத்தி காய்ந்திருக்கும் வெடத்தலாமரத்தில் செஞ்ச நுகத்தடியை மண்ணில் நட்டுத் தண்ணீர் ஊற்றினாள்….. அது துளிர் விட்டு விறுவிறுவென்று வளர்ந்து மரமானது. அந்த மரத்தின் கீழ் ஒரு மண் குதிரை இருந்தது …அதன் மீது தண்ணீர் தெளித்தாள், அது தலையைக் குலுக்கி கனைத்தது. அப்பொழுது காற்று பலமா வீச …மரக்கிளைகள் ஆட …மரத்துலிருந்து கோயில் மணியோசை கேட்டது.
“இதெல்லமாம் நம்பும்படியா இல்லையே” என்று திடுக்கிட்டவள் “ஓ கனவு” என்று விழித்தெழுத்தாள்.
மறுநாள் வெள்ளையம்மா கோவிலுக்குச் சென்றாள்…..கோவில் பூசாரியிடம் கண்ட கனவைச் சொன்னதும், “ராசாத்தி……உனக்குமட்டும் இல்ல ….ஊருல இருக்குற பலருக்கு இது தெரியாது …..நீ கனவுல கண்ட எல்லாமே …உண்மை …அதுதான் நம்ம ஊரு காவல் தெய்வம் வெள்ளையம்மா உருவான வரலாறு. சரி சரி வா எதுக்கும் நாம கோயில் அரசமரத்த பாக்கலாம்” என்று பூசாரியும் ராசாத்தியும் அரசமரத்தை அண்ணாந்துப் பார்க்க ….உச்சிக்கிளையில் கோயில் மணி மாட்டிக் கிடந்தது.
ஊர் பெரியவர்களிடம் நடந்த நிகழ்வுகளைச் சொன்னதும், “நாம தொழிநுட்ப வாழ்க்கையில வேகமா போறதுல பழசெல்லாம் மறந்துட்டு வரோம் …அத நினைவுபடுத்த தான் வெள்ளையம்மா விளையாடி இருக்கா ….எல்லோரும் ஒன்றுகூடி கோவில் மணிக்குப் பூசை பண்ணி….வெள்ளையம்மாவுக்குத் திருவிழா எடுப்போம்,சொந்த பந்தங்களை எல்லாம் அழைப்போம்” என்று முடிவு செய்தனர்.
அன்றிரவே மழை பொழிந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings