in ,

குடியாட்சி (சிறுகதை) – மலர் மைந்தன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

கிராமத்துக்கு வந்த நகரத்துப்  பேத்தி, குளத்தில் நின்றிருந்த கொக்கைப்  பார்த்து, “தாத்தா…. ஏன் அந்த வெள்ளைக் கொக்கு ஒற்றைக் காலில் நிக்குது?”

அது வந்து ஒரு  காலத்தில் பசுமையான “சாத்திரங்குடி” வானத்தைப் பல தலைமுறையாக ஆண்டுவருவது “சிங்கவர்மா” மன்னர் பரம்பரையே. முதலாம் சிங்கவர்மாவைத் தொடர்ந்து  23-ஆம் சிங்கவர்மா வரை இவர்களுடைய வாரிசு அரசியல்தான் தொடர்ந்தது. இவர்களுடைய அரசில் நரி தான் முதல் மந்திரி…நரியின்  வாரிசுகள் அடுத்து வந்த முதல் மந்திரிகள் அனைத்து இராஜ தந்திரங்களும் கரைத்து குடித்தவர்கள் .இந்த நரிக்கூட்டந்தான் பிற வன விலங்குகளுக்கு ஆசை வார்த்தை கூறி அரசவையில் விருந்தாக்கி விடுவார்கள்.

23 -ஆம் சிங்கவர்மாவின் மகன் அவன்தான் அடுத்தப்பட்டது இளவரசன்…. ஊதாரி, ஊர் சுற்றும் பொறுக்கி பையன் .தினமும் காலையில் எழுந்ததும் அழகிய பெண் விலங்குகளைக் காண கிளம்பிடுவான் .கள் குடிக்கும் பழக்கம் வேறு அவனுக்கு .இப்படித்தான் ஒருமுறை கண்ணாடி போல் பளிச்சென்று ஓடிக்கொண்டிருந்த அழகிய ஓடை நீரில் தன் அழகை ரசித்துக்கொண்டு இருந்தது “கஸ்தூரி “மான்.அங்கே வந்த இளவரசன்…..கஸ்தூரி மானின் அழகில் மயங்கி அதனை நெருங்கி.

“கஸ்தூரி……. உன் அழகுல நான் விழுந்துட்டேன் ….என்னைக் கட்டிக்கோ” என்றது .

“போடா….பொறுக்கி…. மூஞ்சியும் ,மொகறையும் பாரு ….அந்த பல்ல பாரு எப்படிக் கோரம இருக்கு …பெருசா லவ் பண்றேன்னு வந்துட்ட ….உனக்கு அவ்வளவு தான் மரியாதை…. என்னைத் தொந்தரவு செய்யாம போயிடு” என்றது .

கோபத்தின் உச்சிக்கு சென்ற இளவரசு சிங்கவர்மன்….. கஸ்தூரியை அடித்தே கொன்றது. அன்று முதல்தான் இனப்பகை உருவானது .மான்களைக் கண்டாலே சிங்கங்கள் வேட்டையாடுகின்றன .

பல விலங்குகளும் சிங்கத்தின் சர்வாதிகார ஆட்சியில் துன்பபட்டன .எதிர்த்துப்பேச யாருக்கும் துணிவில்லை….ஏன்னா …..சிங்கங்களின் கண்ணில் பட்டாலே உயிர் காலி ……இவ்வாறு ஒவ்வொரு இன விலங்குகளும் தங்களின் இனங்களைக் காத்துக்கொள்வது எப்படி என்று தீவிர ஆலோசனைகளில் இறங்கின .

இதனை உளவறிந்த நரி ….தந்திரமாக இனத் தலைவர்களை உண்டாக்கி ….மற்ற இனத்துடன் மோதவிட்டு …தனக்கு லாபமாக்கி கொண்டது ….இனச்சண்டையில் மாண்ட விலங்குகளை  அரசவைக்கு விருந்தாக்கின …..இனப்பகை காட்டுத்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது .இவற்றையெல்லாம் கவனித்த வெள்ளை கொக்கு மனவேதனையில் தற்கொலை பண்ணிக்கக் குளத்துத் தண்ணீரில் குதித்தது .அப்பொழுது நீரிலிருந்து ஒரு ஆமை கொக்கை நீருக்கு வெளிய தூக்கிப் போட்டு ….

“அழகிய கொக்கே ….. நீ ஏன் தற்கொலை பண்ணிக்கப்   போறே …..இது கோழைத்தனம் …நீ ஒற்றைக்  காலில் நின்று தவம் செய் ..கடவுள் உனக்கு வரம் தருவார் “என்றது .

….மனம் மாறிய கொக்கு ஒற்றைக்காலில் உணவு உறக்கமின்றிக்  கடுந்தவம் இருந்தது ….பல காலம் தொடர்ந்த தவத்தின் பயனாக …..ஒருநாள் …..வானில் அசரீரி ……

“தூய்மையான வெள்ளை கொக்கே …..உன்னுடைய கடுந்தவத்தினை  மெச்சினோம் …உன்னுடைய பிராத்தனை என்னவென்று யாம் அறிவோம் …. விரைவில் மன்னர் முடியாட்சி முடிவுக்கு வந்து “#குடியாட்சி” மலரும் .விலங்குகளிலேயே புத்திசாலியான மனிதக் குரங்கை நீங்கள் ஆட்சி செய்யத்  தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் …அவர் உங்களுக்கு நலத்திட்டங்களைச்   செய்வார் ….. எல்லோரும் மகிழ்ச்சியாக வாழுங்கள் “…என்று ஒலித்து மறைந்தது .

சில நாட்களிலேயே …கானகத்தில் ஆங்காங்கே முடியாட்சிக்கு எதிராகப் புரட்சிகள் வெடித்தன .அரசுக்கு போக வேண்டிய உணவுகள் தடை பட்டன …..சிங்கத்திற்கு ஒன்னும் புரியவில்லை …நரி தந்திரமாக …..

“மன்னா ….இப்படியே போன நாம உயிரை விட வேண்டியதுதான் ..பேசாம ஆட்சியைக்  கலைத்துவிட்டு ….குடியாட்சிக்கு ஒத்துக்கொள்வோம் …அப்புறம் பிடித்தம் பிடித்ததும் நம் வேலையைக் காட்டுவோம் என்றது.

வேறுவழியில்லாமல் சிங்கமும் ஆட்சியைக்  கலைத்துவிட்டுப் பொதுத்  தேர்தலுக்கு ஒத்துக்கொண்டது .

தேர்தல் களம் சூடு பிடித்தது …..ஒருபக்கம் பொது வேட்பாளர் மனிதக் குரங்கு ….. காடு மேடெல்லாம் தெரிந்து அனைத்து விலங்குகளையும் ஒன்றிணைத்துப் பிரச்சாரம் செய்தது ….மறுபுறம் சிங்கமும் நரியும் இலவச அறிவிப்புகளை அறிவித்து யானை மீது ஏறிக்கொண்டு பிரச்சாரம் செய்தன

சிங்கம் மற்றும் நரி இனங்களைத் தவிர மற்ற இனங்கள் எல்லாம் மனிதக்  குரங்குக்கு  ஓட்டளிக்க இரகசிய தீர்மானம் நிறைவேற்றியிருந்தன….நரி எப்படியோ இந்தத்  தீர்மானத்தை மோப்பம் பிடித்துவிட்டது ……விலங்குகளின் கூட்டத்திற்குச் சென்று …..

“விலங்குகளே ….நம்ம சிங்க இராஜ பல தலைமுறையா ஆட்சி செய்த ஆண்ட பரம்பரையில் வந்தவர் ….இந்த மனிதக் குரங்கு பையலோ ..இங்கும் அங்கும் தாவும் தன்மை கொண்டவன் .அவனுக்கு நீங்க வாக்களித்தால் ஒரு பயனும் இருக்காது ” என்றது .

விலங்குகள் அமைதி காத்தன …..இதனால் எரிச்சலுற்ற நரி ….

“உங்கள் இரகசிய திட்டம் என்னவென்று எனக்குத் தெரியும் ….#உங்களுக்கு ஒட்டுப் போடுற ஐடியா   எங்களுக்கில்லைன்னு  துணிச்சலா  சிங்கத்துட்டேயே சொல்லலாமே ” என்று நக்கலடித்தது

“ஐயா ….நரியாரே …நாங்களே ஒடுக்கப்பட்ட இனங்கள் …நாங்க எப்படிச் சிங்கத்துக்கு முன்னாடி எதிர்த்துப் பேச  முடியும் ….நீங்க சொன்ன சிங்கத்துக்கே ஒட்டு போட்டுடுறோம் ” என்றன .

சில நாட்களில் தேர்தல்……

ஆங்காங்கே சில அசம்பாவிதங்கள் தவிர அமைதியாகவே நடைபெற்று முடிந்தது ஓட்டுப்பதிவு …..ஒட்டு எண்ணிக்கை முடிந்ததும் மனிதக் குரங்கு  வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது …தொடர்ந்து பல ஆண்டுகள் பல நல்ல நல்ல திட்டங்களுடன் நல்லாட்சி தொடர்ந்தது .

பின்னர்த் தலைமுறைகள் மாற …மனிதக்  குரங்குகளிடமும் சுயநலம் மிகுந்தது …..அவர்களின் பதவி ,வளர்ச்சி  ஆகியவற்றில்  கவனம்  செலுத்த ஆரம்பித்தன…. ஓட்டளித்த விலங்குகள் செய்வதறியாது   தவித்தன .மீண்டும் யாராவது நல்லாட்சி  தருவார்களா என்று ஏக்கத்துடன் இருக்கின்றன .

வெள்ளைக் கொக்கு குளத்தில் மீண்டும்  ஒற்றைக் காலில் நிற்கிறது .

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயிரணுக்களால்  உருவாகிய… (கவிதை) – மஞ்சுளா ரமேஷ்

    சாயம் போன பட்டாம்பூச்சிகள் (சிறுகதை) – முகில் தினகரன்