Shopping with Sahana

ஷாப்பிங் வித் சஹானா – அக்டோபர் 10, 2020

ஹாய் பிரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஷாப்பிங் அப்படினு சொன்னாலே எவ்ளோ டயர்டா இருந்தாலும் நமக்கெல்லாம் பிரெஷ் ஆய்டும் இல்லையா 😊

Shopping பத்தி ஒரு குட்டி ஜோக் 👇

What is cheaper and more effective than visiting a psychiatrist?

Shopping

இது சிரிப்புக்காக சொல்லப்பட்டாலும், மனசை ரிலாக்ஸ் பண்ற விஷயம் ஷாப்பிங் அப்டிங்கறத மறுக்க முடியாது (பணம் ஸ்பான்சர் பண்றவங்களுக்கு பிரஷர் ஏறுங்கறது தனி டிபார்ட்மென்ட், அதை நாம செலக்டிவ் அம்னீஷியால விட்ருவோம்😀)

சரிப்பா, இன்னைக்கி ஷாப்பிங் வித் சஹானா பதிவுல என்னவெல்லாம் போட்டு இருக்கேனு ஒரு ரவுண்டு பாருங்க / பிடிச்சதை வாங்குங்க. என்ஜாய் பண்ணுங்க 👍

இந்த வாரம் 5 Categoriesல இருக்கற பொருட்கள் ஷேர் பண்ணி இருக்கேன். அடுத்த வாரம் வேற சில Categories பாப்போம். நன்றி நட்புகளே

Navarathri Gifts and Golu Decors

நவராத்ரி பண்டிகை நெருங்கிடுச்சு. இப்ப நிறைய பேர் கொலு வைக்க வேண்டிய பொருட்கள், அப்புறம் Return Gifts ஷாப்பிங்ல பிஸியா இருப்பீங்கனு நினைக்கிறேன். கொரோனா காரணமா நிறைய பேரை கொலுவுக்கு அழைக்க முடியாது. ஆனாலும் பூஜை எப்பவும் போல செய்வோம் இல்லையா. அதுக்கு சில Product Links இங்க குடுத்து இருக்கேன். நம் பிள்ளைகள் மற்றும் உறவு குழந்தைகளுக்கு உபயோகமா இதுல இருக்கற புத்தகங்கள் கூட பரிசளிக்கலாம்

#ad

 

Miniature Decor Items

இந்த மினியேச்சர்னு சொல்லப்படற குட்டி பொருட்கள், இப்ப பிரபலம் ஆகிட்டு வருது. அதுல சிலவற்றை இங்க உங்களுக்காக ஷேர் பண்ணியிருக்கேன். நம்ம வீட்டு ஷோகேஸ்ல வெக்கலாம், கொலுப்படில கூட வெக்கலாம், குழந்தைகளுக்கு அல்லது நட்பு / உறவு வீட்டு விசேஷங்களுக்கு கிப்ட் ஆகவும் குடுக்கலாம். இதுல இருக்கற மினி கிராமபோன் மற்றும் இசைக்கருவிகள் செட் இசை பிரியர்களின் விருப்பமா இருக்கும்னு நினைக்கிறேன்

#ad

Sports and Fitness

கொரோனா நிறைய விசயங்களை முடக்கிடுச்சு, அதுல வாக்கிங் போறதும் ஒண்ணு. பெரும்பாலும் இப்பெல்லாம் மொட்டை மாடி வாக்கிங் தான் சாத்தியம் நிறைய பேருக்கு. இன்னும் கொஞ்சம் பிட் ஆகணும், ஆனா ஜிம் எல்லாம் போக நேரமில்லை, வீட்டில இருந்தே FIT ஆகணும்னு நினைக்கறவங்களுக்காக, Amazonல இருக்கற ஸ்போர்ட்ஸ் அண்ட் பிட்னஸ் சம்மந்தப்பட்ட பொருட்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்து இருக்கிறேன். அதோட FITNESS பத்தின சில புத்தகங்களையும் இதில் பகிர்ந்து இருக்கேன்

#ad

 

Accessories / Gifts for Girls / Women

ஆள் பாதி ஆடை பாதினு அந்த காலத்துலயே சொல்லி இருக்காங்க. அதையே இப்ப  சொல்லி இருந்தா ஆள் கால், ஆடை கால், Accessories முக்கால்னு சொல்லி இருப்பாங்கனு நினைக்கிறேன். Suiting Up அப்படினு சொல்லப்படற அழகு சேர்க்கும் பொருட்கள் இன்னைக்கி Luxury லிஸ்ட்ல இருந்து Necessity லிஸ்டுக்கு வந்துடுச்சு. குறிப்பா பெண்கள் இதில் ரெம்ப Updated and Trendயா இருக்கறதா நான் சொல்லல, Statistics சொல்லுது. ஆண்கள் சண்டைக்கு வந்துடாதீங்கப்பா, பொதுக்கருத்தை தான் நான் சொன்னேன்😃 . அதனால, அதுல சில Links இங்க சேத்துருக்கேன் பாருங்க

#ad

 

Accessories / Gifts for Boys / Men

பசங்க என்னப்பா ஒரு பேண்ட் ஷர்ட் மாட்டினா போதும்னு சொன்ன காலம் மலையேறிப்போச்சு, இப்ப பெண்களுக்கு நிகரா ஆண்களும் அழகுபடுத்திக்கற காலம் வந்துடுச்சு. Men Spaனு தனியா ஆரம்பிக்கற அளவுக்கு காலம் மாறி போச்சு. அதனால உங்களுக்கு வாங்கலைனாலும்,  மகன் / நண்பன் / கணவர் / உடன்பிறப்பு ஆகியோருக்கு கிப்ட் குடுக்கற வழக்கம் உள்ளவங்க, இங்க Gifts / Accessories பத்தி பாக்கலாம்

#ad

இன்னைக்கி பதிவுல போட்டிருந்த பொருட்கள் உங்களுக்கு புடிச்சு இருக்கும்னு நினைக்கிறன். ஓகே பிரெண்ட்ஸ். அடுத்த வார ஷாப்பிங் வித் சஹானா பதிவுல சந்திப்போம். நன்றி

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த் 

Similar Posts

2 thoughts on “ஷாப்பிங் வித் சஹானா – அக்டோபர் 10, 2020
  1. எல்லாமே பிடிச்சிருக்கு. இதிலே பணம் எங்கே கொடுப்பாங்கனு மட்டும் சொல்லலை! அதுவும் சொல்லி இருந்தா வாங்க வசதியா இருந்திருக்கும்! 😛

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: