www.sahanamag.com
தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே❤ (பகுதி 19) – ✍ சஹானா கோவிந்த்

“அண்ணா பிஸியா?” என்றபடி சுஜிதா அறைக்குள் வர, செல்பேசியில் ராதிகாவும் தானும் இணைந்து எடுத்த புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்த கெளதம், அவசரமாய் செல்பேசி திரையை சுஜிதா பார்த்திடாதபடி மறைத்தான் 

“வா சுஜி, பிரெண்ட் கல்யாணத்துக்கு திருச்சி போயிருக்கேனு அம்மா சொன்னாங்க, இப்ப தான் வந்தியா?” எனவும் 

“ஆமாண்ணா, பேக்கிங் எல்லாம் பண்ணிட்டியா?” எனவும் 

“இல்லடா இனிமே தான்” என்றான் அசிரத்தையாய் 

“என்ன அண்ணா நீ… நாளைக்கு நைட் பிளைட், இன்னும் ஒண்ணும் பண்ணலைங்கற?” என்றாள் 

“ப்ச்… பண்ணலாம்” என்றான் எரிச்சலாய்     

“அண்ணா, நீ இந்த யூ.எஸ் ஜாப் புடிச்சு தானே அக்சப்ட் பண்ணியிருக்க?” என்றவளை யோசனையாய் பார்த்தவன் 

“ஆமா புடிச்சு தான் அக்சப்ட் பண்ணினேன், ஏன் கேக்கற சுஜி?” எனவும் 

“அப்புறம் ஏண்ணா உன் முகத்துல சந்தோசமே இல்ல?” என்றவளின் நேரடி கேள்விக்கு என்ன சொல்வதென ஒரு கணம் யோசித்தவன்

“அதெல்லாம் இல்ல, நான் நல்லாத் தான் இருக்கேன்” என தங்கையின் பார்வையை தவிர்த்து கூறியவன்

“என் சந்தோஷம் மொத்ததையும் தான் இங்கயே விட்டுட்டு போறனே” என மனதிற்குள் புலம்பினான்  

பெற்றோரையும் தங்கையையும் இந்த சில வருடங்களாக, பணி நிமித்தமாய் பிரிந்து இருந்து பழகிய போதும், இப்போது போல் நினைத்தால் கிளம்பி வந்து காண இயலாது என்பது வருத்தம் அளித்தது

அவர்களை வீடியோ கால் மூலமேனும் காணும் வசதி இப்போது இருக்கிறது, ஆனால் ராதிகாவை அப்படியும் காண இயலாதே என வருந்தினான் 

ராதிகாவின் மனநிம்மதிக்காக இந்த முடிவே சரியென தீர்மானித்த போது, அதை செயல்படுத்துவது இத்தனை வேதனையை தரும் என கெளதம் நினைக்கவில்லை

‘உன்னை காண்பதே எனக்கு ரண வேதனை, அதற்கு சாவே மேல்’ என்பவளை, விட்டு விலகாமல் வேறு என்ன செய்வது என தவித்தான் 

அவளை காணாத இந்த ஒரு வார காலமே இத்தனை கொடுமையாய் இருக்கிறதென்றால், இன்னும் மிச்ச வாழ்வை எப்படி கழிப்பது என ஆயாசமாய் உணர்ந்தான் 

‘ஒரே ஒரு முறை அவளை காண மாட்டோமா?’ என மனம் ஏங்கியது.

ஆனால் மறுகணமே அவளின் தற்கொலை எண்ணம் நினைவுக்கு வர, ‘எங்கோ உயிரோடு இருக்கிறாள்’ என்பதே போதுமென மனதை சமாதானம் செய்து கொண்டான் 

அண்ணனின் வேதனை நிறைந்த முகம், சுஜிதாவின் மனதை வதைத்தது. அதை அவன் அறியாமல் மறைத்தவள், “அண்ணா, என் பிரெண்ட் ஒருத்தங்க உன்னை பாக்கணும்னு வந்திருக்காங்க” எனவும் 

“யாரு சுஜி? கீழ இருக்காங்களா?” எனக் கேட்டான் 

“இல்லண்ணா, இங்க தான் இருக்காங்க” என்ற சுஜிதா, அறை வாயிலுக்கு சென்று “வாங்க…” என்றாள்  

தன் அறை வரை அழைத்து வருகிறாளென்றால், யாரேனும் நெருங்கிய நட்பாய் தான் இருக்குமென எண்ணியவன், விருந்தாளியை வரவேற்க எழுந்து நின்றான் 

அறைக்குள் வந்த நபரை கண்டதும், கௌதமின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. தான் கனவு ஏதும் காண்கிறோமோ என நம்ப இயலாமல் விழித்தான்  

“ராதி…” என்றவனின் குரல் அவனுக்கே கேட்கவில்லை

ராதிகாவும், கௌதமை விட்டு பார்வையை விலக்காமல் நின்றாள் 

காதலித்து மணம் புரிந்த சுஜிதாவிற்கு, அவர்களின் நிலையை நன்கு உணர முடிந்தது. அண்ணனின் கண்ணில் தெரிந்த நெகிழ்வில் மனம் நிறைந்தாள் 

“அண்ணா, அடுத்த மாசம் வர்ற உன்னோட பர்த்டேக்கு என்னோட அட்வான்ஸ் கிப்ட்” என புன்னகையுடன் ராதிகாவை கை காட்டினாள் சுஜிதா 

அப்போது தான் தங்கை அங்கிருப்பது நினைவு வர, “சுஜிம்மா… உனக்கெப்படி ராதிய…” என தயக்கமாய் நிறுத்த 

“நடந்ததெல்லாம் சொல்ல வேண்டியவங்க சொன்னா தான் நல்லாருக்கும்” என ஜாடையாய் ராதிகாவை பார்த்தவள், சட்டென முகம் மாற, “எல்லாத்துக்கும் சாரி’ண்ணா” எனும் போதே, குற்ற உணர்வில் சுஜிதாவின் கண்ணில் நீர் நிறைந்தது

“ஏய் சுஜிம்மா…” என தங்கையின் தோளில் ஆதரவாய் கை பதித்து கெளதம் சமாதானம் செய்ய விழைய, ராதிகாவின் பார்வை ஏக்கமாய் கௌதமை தொடர்வதை கண்டாள் சுஜிதா

தான் இனி இங்கிருப்பது சரியல்ல என உணர்ந்த சுஜிதா, “அர்ஜுன் குட்டி ரகள பண்ணிட்டு இருப்பான், நான் போய் பாக்கறேன்’ண்ணா” என கௌதமின் பதிலுக்கு காத்திராமல் வெளியேறினாள் 

இந்த நாவலை எழுதிய எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

ங்கை வெளியேறியதும், “ராதி…” என்ற கௌதமின் அழைப்பு முடியும் முன்னே, எத்தனை முயன்றும் கட்டுப்படுத்த இயலாமல் ராதிகாவின் கண்ணில் நீர் பெருகியது

அதை தாங்காதவனாய், “ராதி ப்ளீஸ் அழாத” என அருகில் செல்ல, விலகி நின்றாள் ராதிகா

இன்னும் அவள் மனம் முழு சமாதானம் ஆகவில்லை என்பதை அவளின் அந்த விலகல் அவனுக்கு உணர்த்தியது  

மனதிற்கினியவளை அணைத்து ஆறுதலளிக்க மனம் துடித்த போதும், மேலும் புண்படுத்திவிடுவோமோ என பயந்தவனாய் விலகி நின்றான் கெளதம் 

அழுகையை கட்டுப்படுத்தி நின்றவள், “மூணு வருஷம் முன்னாடி விபத்து நடந்த அன்னைக்கி சுஜிதா தான் கார் ஓட்டிட்டு வந்ததா சொன்னா, அதோட அவர் ராங் சைட்ல வந்ததையும் போதைல இருந்ததையும் சொன்னா. போதைல இருந்த விவரம், அவர் இறந்த கொஞ்ச நாள்லயே அவரோட பிரெண்ட்ஸ் மூலமா எனக்குத் தெரியும். என் கோபம் அதில்ல…” என நிறுத்தினாள்

அவளுக்கு விபத்து பற்றிய முழு விவரம் முன்பே தெரியுமென்பது கௌதமிற்கு நிம்மதியை தந்தது, “வேறென்ன ராதி?” என்றான் புரியாமல் 

“நான் யார்னு தெரிஞ்சே… நீங்க என்னை…” என, மேற்கொண்டு பேச இயலாமல் உணர்ச்சிவசப்பட்டு நின்றாள் 

“ஐயோ இல்ல ராதி, ஆரம்பத்துல எனக்கு எதுவும் தெரியாது” என்றவனை ராதிகா நம்பாமல் பார்க்க,

“என்னை நம்பு ராதி” என்றான் கெளதம்

“நம்பினேன், ரெம்பவும் நம்பினேன்… அதான் தாங்க முடியல” என நிராதரவான தோற்றத்தில் கண்ணீருடன் நின்றாள் ராதிகா

அதற்கு மேல் விலகி நிற்க இயலாதவனாய் அருகே சொல்ல, வேண்டாம் என்பது போல் கௌதமின் நெஞ்சில் கை வைத்து விலக்கினாள்

“ஏய்… ஏன் இப்படி…? என்னை நம்பு ராதிம்மா” என கெஞ்சினான்    

“என் மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க, உங்களுக்கு என்னை பத்தின உண்மை எப்ப தெரியும்?” என்றாள் மிரட்டல் போல் 

“உன் மேல சத்தியம் பண்ணி கேக்கறதுலயே என்னோட நேசத்தை நீ நம்பறேனு புரியுது. அப்புறம் நான் உன்கிட்ட பொய் சொல்லுவேனு நினைக்கிறயா?”

“சொல்லி இருக்கீங்களே, என்கிட்ட உண்மைய மறைச்சு பொய் சொல்லி இருக்கீங்க தான?” என அவன் தவறை சுட்டி காட்டினாள் 

“அப்படி இல்ல ராதி, உண்மையை சொல்ற தைரியம் எனக்கு இருக்கல, அப்பவே பிரியற சூழ்நிலை உருவாகிடுமோனு பயமா இருந்தது”

“இப்பவாச்சும் சொல்லுங்க, உங்களுக்கு நான் யாருங்கற உண்மை எப்ப தெரிஞ்சுது?” என ஒட்டாத பார்வையுடன் விலகி நின்றே கேட்டவளை கண்டு மனம் வருந்தினான் கெளதம் 

“அன்னை இல்ல ஆண்டு விழா அன்னைக்கி…” என அன்றைய நிகழ்வை விளக்கினான் 

“ஓ… அதனால தான் அன்னைக்கி என்கிட்ட கூட சொல்லாம ஊருக்கு போனீங்களா? மொத்தமா என்னை விட்டு விலகிடணும்னு தான் போய் இருக்கீங்க, அதான் நான் கூப்பிட்டப்ப கூட போன் எடுக்கல இல்ல?” என அன்று அனுபவித்த தவிப்பின் நினைவில் மறுகி நின்றாள் 

அவள் தன்னையே வருத்தி கொள்வதை காண சகியாமல், “ஐயோ இல்ல ராதி, உன்கிட்ட பேசற தைரியம் இல்லாம தான் உன்னை அவாய்ட் பண்ணினேன்.  உன்கிட்ட கூட சொல்ல முடியாம அன்னைக்கி நான் தவிச்ச தவிப்பு ரெம்ப கொடுமை ராதி. உன்னை விட எனக்கு அது ரெம்ப வேதனையா இருந்தது” என தன் மனதை புரிய வைக்க முயன்றான் 

“என்னை பத்தின உண்மை தெரிஞ்சதுமே, நீங்களே என்கிட்ட சொல்லி புரிய வெச்சிருந்தா இவ்ளோ பாதிப்பு இருந்துருக்காதில்ல கெளதம்” 

“மொத்தமா என்னை வெறுத்து ஒதுக்கிடுவியோனு பயமா இருந்தது ராதி” என மறைக்காமல் உரைத்தான் 

“என் மேல அவ்ளோ தான் நம்பிக்கையா?”

“உன்னை நம்பாம நான் யாரை நம்பறது? என்னோட பயமெல்லாம் நீ தப்பா எதுனா முடிவு எடுத்துடுவியோனு தான். அதுக்கு தகுந்த மாதிரி, உண்மை தெரிஞ்சதும் நீ சாகத் துணிஞ்சுட்ட, அதுக்கு மேல எதுவும் சொல்ல எனக்கு தைரியம் வரல ராதிம்மா. ஏதோ உள்ளுணர்வு உறுத்தவும் தான், அன்னைக்கு உன்னை பாக்க வந்தேன்.  முழுசா உன்னை கண்ல பாக்கற வரைக்கும் எனக்கு உயிரே இல்ல ராதி”

“அவ்ளோ புடிக்குமா என்னை?” என்றாள் இன்னும் நம்பாமல் 

“உனக்காக உன்னையே விட்டு தர்ற அளவுக்கு உன்ன புடிக்கும் ராதி” என கண்ணில் நீருடன் கெளதம் கூறக் கேட்டதும், அதற்கு மேல் விலகி நிற்க இயலாமல், தன்னை அவன் அணைப்பில் இணைத்துக் கொண்டாள் ராதிகா 

இனி கண்ணால் கூட காண இயலாதோ என ஏங்கி கொண்டிருந்தவனுக்கு, தன் அணைப்பில் இருந்தவளைக் கண்டு போன உயிர் திரும்பி வந்த உணர்வை அடைந்தான் கெளதம் 

இன்னும் நிகழ்வின் கனம் தாளாமல் ராதிகா விசும்பிக் கொண்டிருக்க, “அழாத ராதி ப்ளீஸ்…” என அணைத்து ஆறுதல் அளிக்க முயன்றான் கெளதம்  

இதுவே போதும், எதுவும் பேசக் கூட வேண்டாம் என நினைத்தவர்கள் போல், இருவரும் மற்றவரின் அருகாமையை ரசித்து மௌனமாய் நின்றனர் 

சற்று நேரம் அப்படியே நின்ற ராதிகா, “ஏன் கெளதம் என்னை விட்டுட்டு வந்தீங்க?” என்றாள் பிரிவு துயரம் இன்னும் முழுதாய் விலகாமல் 

“என்னை வேற என்ன பண்ண சொல்ற ராதி? நீ தான…”

“நான் சொன்னா… விட்டுட்டு வந்துடுவீங்களா?” என மீண்டும் அவனையே குற்றவாளியாக்கினாள்

தன்னிடம் அவள் முன்போல் உரிமையாய் பேசியது,  கௌதமின் மனதை நிறைத்தது

“உன்னை பாத்தாலே நான் செத்துடுவேன்னு நீ மிரட்டும் போது, நான் வேற என்ன பண்ணி இருக்கணும்னு நீயே சொல்லு ராதி”

“புரிய வெச்சுருக்கணும்”

“கேக்கற மனநிலைல நீ இல்லையே ராதிம்மா. நீ உயிரோட இருந்தா மட்டும் போதும்னு தான் வேற வழியே இல்லாம விலகி வந்தேன்” என்றவனின் வார்த்தைகளில், தன் மேல் அவன் கொண்ட அளப்பரிய நேசம் புரிய, அவன் மீது காட்டிய கோபத்தை எண்ணி வருந்தினாள் ராதிகா        

“உங்க மேல தப்பு இருக்காதுனு என் உள் மனசுக்கு புரிஞ்சாலும், நீங்க என்கிட்ட உண்மைய மறைச்சத என்னால தாங்க முடியல கெளதம்” என தன் கோபத்தை நியாயப்படுத்த முயன்றாள் 

அவள் வருந்துவது சகியாமல், “நீ எந்த விளக்கமும் சொல்ல வேண்டியதில்ல ராதி, எனக்கு புரியுது” என்றான் 

“சுஜிதா மட்டும் முயற்சி எடுக்காம இருந்திருந்தா…” என அதன் விளைவை யோசித்தவளின் உடல் நடுங்கியது

தன் அணைப்பில் அவளை ஆறுதல்படுத்தியவன், “சுஜிக்கு எப்படி உன்னைப் பத்தி தெரிஞ்சுது?”

“நீங்க ஏதோ பேசும் போதும் ராதினு உளறினீங்களாமே?” என ராதிகா அவனை கேலியாய் பார்க்க 

“என்ன பண்றது? ஞாபகம் பூரா மேடம் மேலயே இருக்கறப்ப, என்னை அறியாம உளறிட்டேன்” என்றான் அவள் கேலியை ரசித்து 

“என்னை அவ்ளோ மிஸ் பண்ணீங்களா கெளதம்?” அவன் நேசம் புரிந்த போதும், கௌதமின் வாயால் கேட்க அவள் மனம் விரும்பியது 

அதை உணர்ந்தவன் போல், அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி கண்ணோடு கண் பார்த்தவன், “உன்னை அங்க விட்டுட்டு வந்தப்ப, என்னோட மொத்த சந்தோஷத்தையும் விட்டுட்டு போறேனு தோணுச்சு ராதி. இனி வாழ்க்கைல எனக்கு எந்த பிடிப்பும் இல்லைனு மனசு விட்டு போச்சு.

என்னோட வாழ்க்கைல, நான் எதுக்காகவும் இவ்ளோ கலங்கினதில்ல. இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி கூட, ஒரே ஒரு வாட்டி உன்னை பாக்க முடியாதானு அவ்ளோ ஏக்கமா இருந்தது ராதிம்மா. ஐ லவ் யூ ராதி” என கண்ணில் காதல் வழிய சொல்லக் கேட்டதும், வேறு எந்த விளக்கமும் தேவையில்லை என்பது போல் அவன் தோளில் சாய்ந்தாள் 

அவளின் உரிமையான அந்த செய்கையில் மனம் லேசாக, தோள் வளைவில் அணைத்துக் கொண்டான் கெளதம்

சிறிது நேரம் அப்படியே நின்றவள், “கீழ போலாம் கெளதம்” என எழ 

அவளை யாருடனும் பங்கு போட மனமின்றி, “கொஞ்ச நேரம் இங்கயே இருக்கலாம் ராதி” என்றான் கெஞ்சலாய்

அவனது கெஞ்சல் மனதை நெகிழ்த்திய போதும், “ப்ளீஸ் கெளதம், நான் வந்து எவ்ளோ நேரமாச்சு. சுஜிதா என்ன நினைப்பாங்க…” என்றாள் சற்றே முகம் சிவக்க 

அதற்கான காரணத்தை புரிந்தவனாய், “அதான் ஒண்ணும் நடக்கலியே, ஆனா என்ன நடக்கணும்னு நான் சொல்லட்டுமா ராதி?” என கெளதம் மையல் பார்வை பார்க்க

“ஒண்ணும் வேண்டாம்” என அவனை பார்வையை தவிர்த்து அவள் நகர 

“ஏய் ஓகே ஓகே, நான் ஒண்ணும் பண்ணல, ஜஸ்ட் ஒரு ரெண்டு நிமிஷம் இப்படியே இரு” என அணைத்து நின்றான்

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும்… இந்த தொடரின் இறுதிப் பகுதி, ஏப்ரல் 16 ,2021 அன்று வெளியிடப்படும்)

 

 

Similar Posts

2 thoughts on “பார்த்த முதல் நாளே❤ (பகுதி 19) – ✍ சஹானா கோவிந்த்
  1. அப்பாடா! நல்லபடியாப் போச்சே! இருவருக்கும் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: