2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ராத்திரி 10 மணி தந்தி செய்திகள் பாத்து தன் ஜனநாயக கடமை
அன்னைக்கு முடிஞ்சதா நினைச்ச பஞ்சாபகேசன், படுத்துக்க போனார்.
வயசாச்சு இப்பல்லாம் சீக்கிரம் தூக்கம் வரதில்லை, அமிர்தாஞ்சனம் காரமா
தலைல தடவிக்கணும் அது பழக்கமாயிடுச்சு வலி ஒண்ணும்
இல்லைன்னாலும், அந்த சின்ன பாட்டிலை ஆசையா திறந்து ஆள் காட்டி
விரலால கொஞ்சமா எடுத்து நெத்தில கொஞ்சம் மூக்குக்குள்ளே கொஞ்சமா
தடவிண்டு அந்த ஸ்வாசத்தை ஆழமா உள்ளே இழுத்து கண்ணை மூடி
அனுபவிப்பார்.அவர் படுத்துக்கற அறையே அந்த மணத்தில் நிறையும்,
ஆசையா கடிக்க வர கொசு கூட அந்த வாசனைல மயங்கி அப்படியே
உக்காந்துடும் எதுக்காக வந்தோம்கறதை மறந்து.
பார்வதி அவர் மனையாள் சமையலறையை ஏறக்கட்டிட்டு பக்கத்தில்
உக்காந்தது கூட தெரியாமல் அமிர்தாஞ்சன போதையில் இருந்தார்
பஞ்சாபகேசன்.
ஏன்னா உங்க தம்பி வரார்னு சொன்னேளே எப்ப வரார் ? ஏகாந்த
ரசனையில் இருந்த பெரியவர் திடுக்கிட்டு முளித்தார்.
”யாரு வரா?எப்ப? எதுக்கு? “
“அய்யே தூங்குங்க அந்த கண்றாவி வாசனை இந்த ரூமையே
வியாதியஸ்தா ரூம் ஆக்கறது இதுல எப்படிதான் நிம்மதியா குறட்டை விட்டு தூங்கறீங்களோ” பார்வதி அம்மாள் சொல்லி முடிக்கறதுக்குள்ளே ஒரு அதிர்வோட
குறட்டை சத்தம் கிளம்பியது பஞ்சாபகேசனிடமிருந்து.
எத்தனையோ கண்டு பிடிக்கறா இந்த குறட்டைய நிப்பாட்ட சரியா
ஒண்ணும் வரலையே யோசிச்சிட்டே பார்வதி அம்மா ஒரு அரை மணி நேரம் TV கிட்ட போனா அந்த மெகா சீரியல் பாக்க.ஆச்சு அன்னைய பொழுது முடிஞ்சது.
அந்த ஒரு ஃபிளாட்ல இவங்க ரெண்டு பேர்தான், குழந்தைகள்
வெளி நாட்டில்.
இரவு பன்னண்டு மணி சுமாருக்கு டிங்டாங் காலிங் பெல் சத்தம்.
ஆழ்ந்த தூக்கம் வர நேரம் ரெண்டு பேருக்குமே முழிப்பு வந்துட்டது.
12 மணிக்கு யாரு திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் எக்மோர் வந்து அங்கே
இருந்து இங்கே வர 20 நிமிஷம்
சரிதான் என் தம்பிதான் அனுமானித்துக் கொண்ட பஞ்சாபகேசன்
தடுமாறி கட்டிலிலிருந்து இறங்கினவர் வாசல் கதவை நோக்கி
போறதுக்குள்ளே விடாமல் ஏன் இப்படி மணி அடிக்கறான்?
நிதானமாய் கதவை திறந்தார் , தம்பி என்ன இப்படி மாறு வேஷத்துல
வந்திருக்கான்? வாடா என்னடா இது வேஷம் தனியாவா வந்தே
லக்கேஜே இல்லையா?
வந்த மாரியப்பன் திகைத்துப் போனான், கருப்பு மரு சரியா
ஒட்டலையா, ஒட்டு மீசை ஏதாவது சரியா வச்சிக்கலையா?
இந்தாளுக்கு திருடன்னா ஒரு மரியாதை இல்லையே.
”ஓய் பெரியவரே நான் பீகார்ல இருந்து வந்திருக்கற பயங்கர
திருடன் கலகத்சிங் “ ,
“அப்படியா என் தம்பி வாஞ்சுன்னு நினைச்சேன், சரி சரி உள்ளே வா
வெளிச்சத்துல பாக்கறேன் உன்னை ,
அடே நீ மாரியப்பன் இல்லையோ? தொளப்பன்குப்பத்துல இருந்தயே
இது என்ன மச்சம், மீசை புதுசா? மாரியப்பன் திகைத்துப் போனான்
இந்த கிழவனுக்கு திருடன்கற பயமே இல்லையே,எப்படி என்னை
கண்டு பிடிச்சான்.
இப்ப இந்த கிழவனை பாத்து மாரியப்பனுக்கு பயம் வந்தது.
அவர்,“ ஏண்டா மறந்துட்டயா, நாங்க அண்ணா நகர் சாந்தி காலனில
இருந்தப்ப இதே மாதிரிதான் ராத்திரி பன்னெண்டு மணிக்கு வந்தே,
பால்காரனுக்காக வச்சிருந்த 218 ரூபாயை கொடுத்தேனே,
சின்ன வயசுல என்னடா மறதி?”சரி சரி எங்கே இந்தப் பக்கம்?
மாரியப்பனுக்கு என்ன பண்ணுவதுனு தெரியலை.அதுக்குள்ளே
பர்வதம் அம்மாளும் எழுந்து ஹாலுக்கு வந்துட்டா,
என்ன மச்சினர் வந்தாச்சா என்ன வேற யாரோ ஃபிரண்டா?
காபி போடட்டா உப்புமா கிளறிக் கொடுக்கட்டா?
மாரியப்பனுக்கு நிஜமாவே செயவதென்ன புரியலை. மரியாதையா
பீரோ சாவி கொடுங்கனு உறுமினான்.
ஏண்டி பார்வதம் பீரோ சாவி எங்கேனு உனக்கு ஞாபகம் இருக்கான்னார் பஞ்சு, ஆமாம் அது எதுக்குடா மாரியப்பா சாவி வச்ச இடம் மறந்து
தொலைச்சிட்டோமே, மெயின் டோர் சாவி ரெண்டு இருக்கு அதுல
வேணா ஒண்ணு வாங்கிக்கறயா?
பார்வதம் மாரியப்பன் சார் ஞாபகம் இல்லையா சாந்திகாலனி வீட்டுக்கு வந்திருக்காரே.பால்காரன் காசை கொடுத்துட்டு திண்டாடினோமே
மூணு நாள்.அவர்தான்.பாவம் கஷ்டப் பட்டு மலைக்கள்ளன்
எம்.ஜி.ஆர் மாதிரி மாறுவேஷம் போட்டுண்டு வந்திருக்கார் இதுவும்
ஒரு களையாதான் இருக்கு இல்லை?
யோவ் கிழவனாரே பீரோ சாவி கேட்டா கிண்டல் பண்றயா? மரியாதையா பீரோ சாவியை கொடு,
ஏண்டாப்பா ஞாபகம் இல்லைனா கேக்க மாட்டேன்றயே அந்த சாவில
என்ன விசேஷம்?
மாரியப்பனுக்கு கோபம் தலைக்கு ஏறியது மடில மறைச்சு வச்சிருந்த
பட்டன் கத்தியை வெளியே எடுத்தான்.
பஞ்சு தாத்தா அதை ஆச்சரியமா பாத்தார் என்னடா புதுசா?
விக்டரி நாக்ஸ் பிராண்டா? கொடு பாப்போம்.
இப்ப மாரியப்பன் கை நடுங்க ஆரம்பிச்சது. பெருசு நிஜமா புரியலையா பீரோல இருக்கற சாமானை கொள்ளை அடிக்க வந்திருக்கேன் அதான் சாவி கேட்டேன் புரிஞ்சதா?
பஞ்சு தாத்தா பகபகனு சிரிச்சார் அதுக்கு எதுக்குடா சாவி, பூட்டினதே
இல்லையே, ஏன் பொஞ்சாதிக்கு புடவை வேணுமா? கேட்டா பர்வதமே தருவாளே, 25ம் தேதி வந்துஇருக்கே புத்தி வேண்டாமோ?
யார் கிட்டயாவது காசு இருக்குமா? நகையெல்லாம் யாரு பீரோல
வைக்கறா? புத்தியோட பிழைங்கடா, ஒரு 76 ரூபா என் ஷர்ட் பாக்கெட்ல இருக்கும் எடுத்துண்டு நடையைக் கட்டு.
மாரியப்பன் அவர் காலில் சாஷ்டாங்கமா விழுந்தான், “ சாமி உங்க மாதிரி பத்து ஆளு இருந்தா திருட்டே மறந்து போயிடும்
எங்களுக்கு வரேன் நானு” மறந்துட்டேனே அந்த 76 ரூபா என் தரப்புல
நீயே வச்சிக்கோ, அடுத்த தடவை அந்த பால் காசு 218 ரூபாயை
கொடுத்துடறேன். போயிட்டான் அவன்
அடுத்த 10வது நிமிஷத்துல இருந்து திரும்ப குறட்டை சத்தம் அதிர்ந்ததுஅந்த ஃபிளாட்டில்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings